2.15 நிமிட திக் திக்! செங்குத்தாக மலையை நோக்கி பாய்ந்த சீன விமானம்! விபத்து நடந்தது எப்படி? வீடியோ

Subscribe to Oneindia Tamil

பெய்ஜிங்: சீனாவில் 132 பயணிகளுடன் சென்ற விமானம் விழுந்து விபத்துக்கு உள்ளான சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் தொடர்பான வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

Recommended Video

    2.15 நிமிட திக் திக்! செங்குத்தாக மலையை நோக்கி பாய்ந்த சீன விமானம்! விபத்து நடந்தது எப்படி? வீடியோ

    சீனாவை சேர்ந்த ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் விமானம்தான் இந்த விபத்தில் சிக்கியது. மொத்தம் 123 பயணிகள், 2 பைலட், 7 விமான ஊழியர்கள் என்று 132 பேருடன் இந்த விமானம் பறந்துள்ளது. 6 வருட பழைய 737-800NG வகை போயிங் விமானம் ஆகும் இது.

    இந்த விமானம் குன்மிங் விமான விளையத்தில் இருந்து தெற்கு பகுதியில் இருக்கும் குகான்சோ பகுதியில் இருக்கும் விமான நிலையத்திற்கு செல்ல வேண்டும்.

    சீன விமான விபத்து

    சீன விமான விபத்து

    ஆனால் குஹான்சி பகுதியில் இருக்கும் வுசோவ் என்ற பகுதிக்கு அருகே செல்லும் போது விமானம் கட்டுப்பாட்டு அறையில் இருந்து தொடர்பை இழந்தது. புறப்பட்ட இடத்தில் இருந்தும் சரி, லேண்ட் ஆக வேண்டிய இடத்தில் இருந்தும் விமானம் தொடர்பை இழந்தது. இதையடுத்து விமானத்துடன் தொடர்பை மீட்க தீவிரமான முயற்சிகள் எடுக்கப்பட்டது. ஆனால் அதற்குள் விமானம் கீழே விழுந்து விபத்துக்கு உள்ளாகி இருக்கிறது.

    விமானம் நொறுங்கியது

    விமானம் நொறுங்கியது

    லாங்ணான் என்ற பகுதியில் இருக்கும் டேங் மாவட்டத்தில் இந்த விபத்து நடந்துள்ளது. முதலில் விமானம் விழுந்தது குறித்த தகவல் உறுதி செய்யப்படாமல் இருந்தது. பின்னர் சில மணி நேரங்களில் விமானம் விழுந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்தன. இதையடுத்து சம்பவ இடத்திற்கு தீயணைப்பு படையினர், பேரிடர் மீட்பு படையினர் களமிறக்கப்பட்டுள்ளனர். இந்த விமானம் விழுந்து நொறுங்கி டேங் மாவட்டம் அதிக காடுகள் இருக்கும் வனப்பகுதி ஆகும்.

    வனப்பகுதி

    வனப்பகுதி

    இந்த பகுதியில் விமானம் விழுந்த காரணத்தால் கடும் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. இந்த காட்டு தீயை அணைக்கவும் கடுமையான முயற்சிகள் நடந்து வருகின்றன. இந்த பகுதியை சேர்ந்த நபர் ஒருவர்.. அந்த விமானம் மொத்தமாக உடைந்து விழுந்ததாகவும், பல்வேறு பாகங்கள், வெவ்வேறு இடத்தில் விழுந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். மலை மீது விழுந்த காரணத்தால் விமானம் சுக்குநூறாக நொறுங்கியதாக தெரிவித்துள்ளார்.

    தீ பற்றியது

    தீ பற்றியது

    இந்த விமானம் சரியாக குஹான்சி விமான நிலையத்தில் இருந்து பிற்பகல் 1.11 மணிக்கு புறப்பட்டு உள்ளது. அதன்பின் 2:22 மணிக்கு விமானம் தொடர்பை இழந்துள்ளது. விமானம் 2.22 மணிக்கு 29,100 அடி உயரத்தில் பறந்து கொண்டு இருந்தது. அதன்பின் 2.15 நிமிடத்தில் 9,075 அடியை எட்டி உள்ளது. இன்னும் 45 நொடியில் இந்த விமானம் மேலும் மேலும் சரிந்து 3,225 அடியை எட்டி உள்ளது. அதாவது 3 நிமிடத்தில் 29,100 அடி உயரத்தில் இருந்து 3,225 அடியை எட்டி உள்ளது.

    வீடியோ

    வீடியோ

    பொதுவாக விமானம் என்ன பிரச்சனை இருந்தால் கிளைட் ஆகி பறக்கும். இதனால் 29,100 அடி உயரத்தில் இருந்து விழுவதற்கு குறைந்த பட்சம் 30 நிமிடமாவது ஆகும். ஆனால் இந்த விமானம் விழ 3 நிமிடம் மட்டுமே ஆகியுள்ளது. இதன் அர்த்தம் விமானம் செங்குத்தாக விழுந்து இருக்கிறது. இந்த விமானம் செங்குத்தாக விழும் வீடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    விமான விபத்து எப்படி?

    விமான விபத்து எப்படி?

    செங்குத்தாக ராக்கெட் கீழே விழுவது போல இந்த விமானம் அப்படியே கீழே விழுந்துள்ளது. இதை நோஸ் டைவ் என்று அழைப்பார்கள். இந்த விமானத்தில் பறந்த யாருடைய உடலும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. இதனால் விமானத்தில் பயணித்த எல்லோரும் பலியாகி இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. அதே போல் இந்த விபத்து ஏற்பட்டது எப்படி என்று தெரியவில்லை. இதை பற்றி விசாரணை நடத்த அதிபர் ஜி ஜின்பிங் உத்தரவிட்டுள்ளார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+