Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

6 இடங்கள்.. 6 வியூகங்கள்.. ஒரே இரவில் அமெரிக்காவை திக்கி திணற வைத்த சீனா.. டிராகனின் மெகா பதிலடி!

Subscribe to Oneindia Tamil

பெய்ஜிங்: தைவானுக்கு அமெரிக்காவின் நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலுச்சி சென்றுள்ளதால் சீனா கடும் கோபத்தில் இருக்கிறது. இதனால் தைவானுக்கும், அமெரிக்காவிற்கும் பல முனைகளில் இருந்தும் சீனா பதிலடி கொடுத்து வருகிறது.

Recommended Video

    Taiwan-ல் தற்போது என்ன நடக்கிறது? America-மீது கடும் கோபத்தில் China *World

    அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலுச்சி தைவான் சென்றுள்ளார். தைவான் தங்களை சீனாவின் ஒரு பகுதி அல்ல, தனி நாடு என்று கூறி வரும் நிலையில் நான்சியின் இந்த பயணம் முக்கியத்துவம் பெறுகிறது.

    நான்சி பெலுச்சி தைவான் சென்றது தவறு என்று சீனா வெளிப்படையாக விமர்சனம் வைத்துள்ளது. தென் சீன கடல் பகுதியில் இருக்கும் தைவானை சீனா பல வருடங்களாக உரிமை கொண்டாடி வருகிறது.

    அங்கு கடந்த சில மாதங்களாக போர் மேகம் சூழ்ந்த நிலையில்தான் இப்போது நான்சி பெலுச்சி தைவானுக்கு திடீர் பயணம் மேற்கொண்டுள்ளார்.

    6 இடங்கள்

    6 இடங்கள்

    தைவானுக்கு நான்சி பெலுச்சி போன சில மணி நேரங்களில் அமெரிக்காவிற்கு சீனா பதிலடி கொடுக்க தொடங்கியது. முதல் கட்டமாக தைவானை சீனா சுற்றி வளைத்தது. தைவான் சீனா கடல் பகுதியில் 6 இடங்களில் சீனா போர் கப்பல்களை, நீர் மூழ்கி கப்பல்களையும், போர் விமானங்களையும் களமிறக்கி உள்ளது. சக்ர வியூகம் போல தைவானை சுற்றி மொத்தமாக மிகப்பெரிய வியூகத்தை சீனா அமைத்து உள்ளது. தைவான் படைகள் ஒருவேளை தாக்குதல் நடத்த நினைத்தால் கூட தாக்குதல் நடத்த முடியாத அளவிற்கு 6 இடங்களில் சீனா செக் வைத்துள்ளது.

    6 வியூகங்கள்

    6 வியூகங்கள்

    இந்த 6 இடங்கள் மட்டுமின்றி.. நான்சி பெலுச்சிக்கும், அமெரிக்காவிற்கும் பதிலடி கொடுக்கும் விதமாக 6 முக்கியமான மூவ்களையும் சீனா செய்துள்ளது. பதிலடி 1 - நான்சி பெலுச்சி தைவான் வருகிறார் என்று தெரிந்ததும் சீனா வேக வேகமாக ஏவுகணை சோதனை, ராக்கெட் சோதனைகளை செய்தது. இதனால் தைவான் வான்வெளி போக்குவரத்து மொத்தமாக தற்போது முடங்கி உள்ளது. தைவான் வான் எல்லையில் பதற்றமாக காணப்படுகிறது.

     போர் விமானம்

    போர் விமானம்

    பதிலடி 2 - இது போக தைவானுக்கு சீனாவின் 21 போர் விமானங்கள் ஒன்றாக சென்றன. உளவு பார்க்கும் டிரோன் விமானங்களும் சென்றன. அதோடு போர் கப்பல்களும் சுற்றி வளைத்தன. இதனால் தைவான் பதற்றமாக காணப்படுகிறது. பதிலடி 3 - தைவானை பொருளாதார ரீதியாக முடக்கும் வகையில் மணல், மீன், தொழில்நுட்ப தடைகளை சீனா விதித்துள்ளது. இதனால் தைவானின் முக்கியமான உற்பத்தி நிறுவனங்கள், தொழிற்சாலைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. தைவானின் 1 நம்பர் டிரேட் பார்ட்னர் சீனாதான் ($328 பில்லியன் வர்த்தகம்) என்பதால் தைவானை இது பெரிய அளவில் பாதிக்க போகிறது.

    கைது

    கைது

    பதிலடி 3 - அமெரிக்காவிற்கு ஆதரவாக பேசும், தைவான் பிரிவினைக்கு ஆதரவாக பேசும் நபர்களை மொத்தமாக ஒடுக்கும் விதமாக நடவடிக்கை எடுக்க போவதாக, இவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க போவதாக சீனா தெரிவித்துள்ளது. இதனால் அமெரிக்காவுடன் நட்பாக செல்லும் தைவான் தலைவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். பதிலடி 4 - தைவானுக்கு எதிராக சீனா போர் விமானங்களை அனுப்பினாலும் இன்னொரு பக்கம் ராஜாங்க ரீதியாகவும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

    சம்மன்

    சம்மன்

    அமெரிக்காவிற்கு சீனா சார்பாக உடனே சம்மன் அனுப்பப்பட்டது. அமெரிக்க தூதரிடம் சீனா சார்பாக விளக்கம் கேட்கப்பட்டது. வரலாற்று ரீதியாக தைவானை அமெரிக்கா தனி நாடாக வெளிப்படையாக அங்கீகரித்தது கிடையாது. சில தலைவர்கள் அவ்வப்போது தைவானுக்கு ஆதரவாக பேசினாலும்.. எப்போதும் ஒற்றை சீனா என்ற நிலைப்பாட்டில் மட்டுமே அமெரிக்கா இருந்துள்ளது. அப்படி இருக்கும் போது நான்சி பெலுச்சி எப்படி தைவான் போகலாம் என்று சீனா கேள்வி எழுப்பி உள்ளது.

    எச்சரிக்கை

    எச்சரிக்கை

    மேலும் தைவானை அமெரிக்கா தனி நாடாக அங்கீகரிக்க கூடாது. நான்சி பெலுச்சியின் இந்த வருகை வரம்பு மீறியது. அவரின் செயல் தைவானை தனி நாடாக கருதுவது போல ஆகிவிடும். அவர் நெருப்புடன் விளையாடுகிறார் விளைவுகள் மோசமாக இருக்கும் என்றும் சீனா எச்சரித்து உள்ளது. பதிலடி 5 - சீனா எப்போதும் போல இந்த முறையும் சைபர் அட்டாக்கை நடத்தி வருகிறது. இன்று காலை மட்டும் சராசரியை விட 200 மடங்கு அதிகமாக தைவானில் உள்ள அரசு நிறுவனங்கள், உற்பத்தி நிறுவனங்கள், ஐடி நிறுவனங்களின் தளங்கள் ஹேக் செய்யப்பட்டு உள்ளனர்.

    பதிலடி 6

    பதிலடி 6


    இது போக கடைசியாக உளவு பணிகளையும் சீனா செய்து வருகிறது. Tengden TB-001 என்ற டிரோன் விமானம் தைவானுக்குள் களமிறக்கப்பட்டு உள்ளது. தைவானுக்கு நான்சி வருகிறார் என்று தெரிந்ததும் சீனா இந்த உளவு விமானத்தை உடனே களமிறக்கியதாக கூறப்படுகிறது. இது 3 என்ஜின், இரண்டு வால் கொண்ட உளவு விமானம் ஆகும். கடந்த 12 மணி நேரமாக இந்த டிரோன் தைவானில் உளவு பார்த்து வருகிறது. நான்சியின் ஒரே ஒரு பயணத்தால் அமெரிக்காவே திக்கி திணறும் அளவிற்கு சீனா வரிசையாக பதிலடிகளை கொடுத்து வருகிறது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+