சாத்தான் சிலையை ஏன் எரிச்சீங்க.. யூதர்களின் ஆணிவேரைச் சீண்டிய ஈரான்.. இஸ்ரேல் கொதிக்க காரணம்!
ஜெருசலேம்: தெஹ்ரான் வீதிகளில் கடந்த வாரம் ஒரு 'காளை' உருவ பொம்மை எரிக்கப்பட்டது. அது வெறும் பொம்மை அல்ல, யூதர்களின் ஆணிவேரைச் சீண்டும் ஒரு வரலாற்று ஆயுதம். அந்த நெருப்புதான் இன்று ஈரானின் உச்சத்தலைவர் அலி கமேனியின் சாம்ராஜ்யத்தையே சுருட்டிப் போட்டிருக்கிறது.

யார் இந்த பாகால்? (Baal - The Storm God)
சுமார் 3000 ஆண்டுகளுக்கு முன்பு, இன்றைய லெபனான், சிரியா மற்றும் இஸ்ரேல் பகுதிகளில் வாழ்ந்த கானானியர்களின் முதன்மைத் தெய்வம் இந்த 'பாகால்'. இதை சாத்தானின் மகன் என்றும் கூறுவது உண்டு.
அடையாளம்: மழையையும், இடியையும் கட்டுப்படுத்தும் சக்தி கொண்டவர். விவசாய செழிப்பிற்காக மக்கள் இவரை வழிபட்டனர்.
உருவம்: ஒரு கையில் மின்னலை ஏந்திய போர்வீரனாக அல்லது ஆக்ரோஷமான 'காளை' (Bull) உருவத்தில் இவர் சித்திரிக்கப்பட்டார். ஆனால் இதை மத்திய கிழக்கில் சாத்தான் என்றும் சாத்தானின் குழந்தை என்றும் கூறுவது உண்டு.
வரலாறு: இஸ்ரேலுக்கும் பாகாலுக்கும் என்ன தொடர்பு?
யூதர்களின் புனித நூலான தோரா (Torah) மற்றும் பைபிளின் படி, பாகால் வழிபாடு என்பது இஸ்ரேல் மக்களின் வரலாற்றில் ஒரு கறைபடிந்த பக்கம்.
வழிபாட்டு மோதல்: ஒரே ஒரு கடவுளை ( யூதர்களின் கடவுள் - யாவே - Yahweh) மட்டும் வழிபட வேண்டிய இஸ்ரேலியர்கள், அவ்வப்போது பாகால் வழிபாட்டிற்கு மாறினர். இது இறைவனுக்குச் செய்யும் துரோகமாகக் கருதப்பட்டது.
இந்த வழிபாட்டு வேறுபாடு காரணமாக யூதர்கள் உள்ளேயே நிறைய சண்டைகள் நடந்து உள்ளன. வரலாற்று ஆவணங்களின்படி கர்மேல் மலையில் வைத்து பாகால் பூசாரிகளுக்கும், இஸ்ரேலிய இறைத்தூதர் எலியாவிற்கும் இடையே ஒரு பெரிய மோதல் நடந்தது. அதில் பாகால் பொய்த் தெய்வம் என நிரூபிக்கப்பட்டு, அதன் சிலைகள் உடைக்கப்பட்டன.
ஆனால் இத்தனை காலம் கழித்து இஸ்ரேலில் பலர் அந்த சிலையை வழிபடுகிறார்கள். அதாவது சில யூதர்கள் அதை வழிபடுகிறார்கள். பாகால் என்பது அவர்களின் ஆன்மீகப் பயணத்தில் சந்தித்த மிகப்பெரிய 'எதிரி' இஸ்ரேலின் தூய்மையைச் சிதைக்க வந்த அந்நிய கலாச்சாரத்தின் அடையாளமே பாகால். ஆனால் இத்தனை காலம் கழித்து இஸ்ரேலில் பலர் அந்த சிலையை வழிபடுகிறார்கள் என்பதுதான் வினோதம்!
ஈரான் ஏன் அந்தச் சிலையை எரித்தது?
இங்குதான் ஈரான் அரசு முன்வைக்கும் வாதம் விசித்திரமானது. நவீன உலகில் இஸ்ரேலும் அமெரிக்காவும் 'பாகால்' போன்ற ஒரு அரக்கத்தனமான ஆதிக்கத்தைச் செலுத்துவதாகவும், அவர்கள் ரகசியமாகச் சாத்தானிய வழிபாடுகளை (Occult practices) மேற்கொள்வதாகவும் ஈரான் குற்றம் சாட்டியது. குறிப்பாக, சமீபத்திய ஜெஃப்ரி எப்ஸ்டீன் விவகாரங்களை இதனுடன் இணைத்து, "யூதத் தலைவர்கள் பாகால் வழிபாட்டாளர்கள்" என்ற விமர்சனங்களை வைத்தது.
ஏன் இது இஸ்ரேலை இவ்வளவு காயப்படுத்தியது?
மத அவமதிப்பு: பாகால் என்பது யூதர்களுக்கு ஒரு 'சாபம்'. தங்களை அதே பெயரோடு இணைத்துப் பேசுவதை இஸ்ரேல் மிகப்பெரிய இழிவாகப் பார்த்தது.
அடையாளச் சிதைவு: "நாங்கள் ஒருபோதும் வணங்காத, நாங்கள் வெறுக்கும் ஒரு சிலையை எங்களுடையது என்று சொல்லி எரிப்பது, எங்கள் வரலாற்றையே கொச்சைப்படுத்துவது" என்பது நெதன்யாகுவின் கோபம்.
ஆப்பரேஷன் 'எபிக் பியூரி' - கமேனி குறிவைக்கப்பட்டது எப்படி?
இந்தச் சிலை எரிப்பு நடந்த 48 மணிநேரத்திற்குள் இஸ்ரேலிய அமைச்சரவை ரகசியமாக கூடியது. "இனி எச்சரிக்கைகள் தேவையில்லை, நேரடியாகத் தலையையே துண்டிப்போம்" என மொசாத் (Mossad) தலைவர் கொடுத்த ரிப்போர்ட் பச்சைக்கொடி காட்டப்பட்டது.
இதை தொடர்ந்தே பிப்ரவரி 28 அதிகாலை, இஸ்ரேலின் எஃப்-35 (F-35) ரக விமானங்கள் ஈரானின் ரேடார் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு உள்ளே புகுந்தன. பாகால் சிலையை எரித்த அதே தெஹ்ரான் நகரில், கமேனி தங்கியிருந்த பாதுகாப்பான பதுங்கு குழிகள் மீது 'பங்கர் பஸ்டர்' (Bunker Buster) குண்டுகள் மழையாகப் பொழிந்தன.
விளைவு: ஈரானின் 37 ஆண்டுகால அதிகாரம் ஒரே இரவில் சாம்பலானது. பாகால் சிலைக்கு வைக்கப்பட்ட நெருப்பு, கடைசியில் ஈரானின் ஒட்டுமொத்த அதிகார மையத்தையே எரித்து முடித்திருக்கிறது!












Click it and Unblock the Notifications