உடைந்த அரண்! இஸ்ரேலின் அயர்ன் டோமையே வீழ்த்தி! உள்ளே போய் தாக்கிய ஈரான் ஏவுகணை! சாத்தியமானது எப்படி

Subscribe to Oneindia Tamil

டெஹ்ரான்: ஈரான் - இஸ்ரேல் இடையே போர் முற்றி உள்ளது. இந்த போரின் ஒரு பகுதியாக நேற்று இஸ்ரேல் மீது ஈரான் கடுமையான ஏவுகணை தாக்குதல்கள் நடத்தியது. கிட்டத்தட்ட 200க்கும் அதிகமான பாலிஸ்டிக் ஏவுகணைகளை வீசி ஈரான் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது.

இஸ்ரேல் கடந்த சில வாரங்களாகவே ஈரான் ஆதரவு அமைப்பான ஹிஸ்புல்லா மீது பல்வேறு தாக்குதல்களை நடத்தியது. கடந்த ஒரு மாதமாக ஹிஸ்புல்லா இயக்கத்தை கதி கலங்க வைத்து வருகிறது இஸ்ரேல். சமீபத்தில்தான் துப்பாக்கி படத்தில் ஒரே நேரத்தில் 12 தீவிரவாதிகளை விஜய் மற்றும் கேங்க் சுடும் காட்சி பலருக்கும் நினைவு இருக்கும். அந்த காட்சி போலவே.. ஒரே நேரத்தில்.. சொல்லி வைத்தார் போல ஹிஸ்புல்லா இயக்கத்தினர் வாக்கி டாக்கி மற்றும் பேஜர் தாக்குதலுக்கு உள்ளாகினர். இதில் 20க்கும் மேற்பட்டோர் பலியாகினர். அதை தொடர்ந்து ஹிஸ்புல்லா இயக்கத்தினர் இருக்கும் பெய்ரூட்டில் இஸ்ரேல் தொடர் ஏவுகணை தாக்குதல்களை, வான்வழி தாக்குதல்களை நடத்தி வருகிறது.

iran israel palestine

இப்படிப்பட்ட நிலையில்.. லெபனானில் இருக்கும் ஹிஸ்புல்லா இயக்கத்தின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா கடந்த வெள்ளிக்கிழமை கொலை செய்யப்பட்டார். அவரது பதுங்கு குழியை குறிவைத்து இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஹசன் நஸ்ரல்லா கொலை செய்யப்பட்டார். .

பதிலடி: இது போக லெபனான் உள்ளே புகுந்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இதற்கெல்லாம் பதிலடியாகவே தற்போது இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தி உள்ளது. இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால்.. ஈரானை இஸ்ரேல் கலங்கடித்து உள்ளது.

1. இஸ்ரேல் மீதான தாக்குதலை ஈரான் சாதாரணமாக செய்யவில்லை. முறையாக திட்டமிட்டே இந்த தாக்குதலை நடத்தி உள்ளது. இது வெறுமனே கோபத்தில் கொடுக்கப்பட்ட பதிலடி அல்ல.

2. இஸ்ரேலிடம் ஏவுகணைகளை மறித்து தாக்கும் அயர்ன் டோம் உள்ளது. அதாவது ஒரு ஏவுகணை உள்ளேவந்தால் .. அதை உடனடியாக இந்த அயர்ன் டோமில் இருக்கும் இடைமறித்து ஏவுகணை மறித்து வெடிக்க வைக்கும். ஆனால் இதை மீறி ஈரானின் ராக்கெட்டுகள் இஸ்ரேலை பதம் பார்த்து உள்ளது.

3. இது சாத்தியமாகி காரணம்.. ஈரான் உடனுக்குடன் அதிக அளவில் ஏவுகணைகளை அனுப்பியது. அயர்ன் டோம் தடுக்கும் என்றாலும் 10 நொடிக்கு 20க்கும் மேற்பட்ட ஏவுகணைகள் ஒரே நேரத்தில் வந்தால் அதனால் எதிர்கொள்ள முடியாது.

4, முக்கியமாக அயர்ன் டோம் முழுமையாக ஏவுகணைகளை பயன்படுத்திய பின் அடுத்த லோடிங் நடக்க 10 நிமிடங்கள் வரை கூட ஆகும். இடைப்பட்ட நேரத்தில் ஏவுகணைகள் வந்தால்.. அதை இஸ்ரேல் தடுக்க முடியாது.

5. இது போன்ற நேரங்களில் இஸ்ரேலின் மற்ற ஏவுகணை தடுப்புகள், அமெரிக்கா அளித்துள்ள ஏவுகணை தடுப்புகள் உதவும். ஆனால் இதை எல்லாம் மீறி இஸ்ரேல் உள்ளே புகுந்து ஈரான் தாக்குதல் நடத்தி உள்ளது.

6. இதற்கு காரணம்.. ஈரான் ஒரே நேரத்தில் அதிக அளவில் ஏவுகணைகளை அனுப்பி உள்ளது. மொத்தமாக 2500க்கும் அதிகமான ஏவுகணைகளை நேற்று இஸ்ரேல் பயன்படுத்தியதாக கூறப்படுகிறது.

7. இஸ்ரேலின் அரணையே ஈரான் உடைத்து போட்டுள்ளது. ஈரான் கூற்றுப்படி.. 80% ராக்கெட்டுகள் இஸ்ரேலில் தாக்கி உள்ளன. இஸ்ரேல் 99% ராக்கெட்டுகளை தடுத்துவிட்டதாக கூறுகின்றன.

8. ஆனால் வீடியோ ஆதாரங்களின்படி பார்த்தால் இஸ்ரேல் கடுமையாக அடி வாங்கி உள்ளது. ஏவுகணைகளை தடுக்கவில்லை என்பது புலனாகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+