ஈரான் உள்ளே புகுந்த F-35 ஸ்டெல்த்.. அலை அலையாக இஸ்ரேல் நடத்திய சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்.. எப்படி நடந்தது?
டெஹ்ரான்: ஈரான் கடந்த 1ம் தேதி இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இஸ்ரேல் ஈரான் மீது பதிலடி தாக்குதல் நடத்தி உள்ளது. முழுக்க முழுக்க திட்டமிட்டு, முறையாக சர்ஜிக்கல் ஸ்டிரைக் ஸ்டைலில் தாக்குதலை நிகழ்த்தி உள்ளது இஸ்ரேல்.
ஈரான் மீது இஸ்ரேலின் மூன்று துல்லியமான தாக்குதல்களை இஸ்ரேல் நடத்தி உள்ளது. 100 க்கும் மேற்பட்ட விமானங்களை களமிறக்கி இந்த தாக்குதலை இஸ்ரேல் நடத்தி உள்ளது. இதில் அமெரிக்காவிடம் இருந்து வாங்கிய அதிநவீன F-35 உட்பட நவீன விமானங்களை இஸ்ரேல் பயன்படுத்தி உள்ளது. மொத்தமாக 2,000 கிமீ பயணத்தை மேற்கொண்டு இந்த தாக்குதலை இஸ்ரேல் நடத்தி உள்ளது.

குறிப்பாக ஈரானில் மக்கள் வசிக்கும் பகுதிகளை குறி வைக்காமல்.. ராணுவ இலக்குகளைத் தாக்கி உள்ளது இஸ்ரேல். அணு மற்றும் எண்ணெய் உற்பத்தி மையங்களை தவிர்த்து.. மேற்கொண்டு மோதலை தவிர்க்கும் விதமாக இஸ்ரேல் ஈரான் மீது தாக்குதல் நடத்தி உள்ளது.
இஸ்ரேல் வெளியிட்ட ஊடக அறிக்கைகளின்படி, இஸ்ரேலிய ராணுவம் ஈரானின் ராணுவ தளங்களில் மட்டுமே கவனம் செலுத்தியது. இரண்டு நாடுகளுக்கு இடையிலான மோதல் மேலும் அதிகரிப்பதை தடுக்க அணு மற்றும் எண்ணெய் மையங்களை தவிர்த்து இஸ்ரேல் ஜாக்கிரதையாக தாக்குதல் நடத்தி உள்ளது.
இந்த தாக்குதல் தற்போது நிறைவு பெற்றுவிட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. தங்களின் தாக்குதல் வெற்றிபெற்றுவிட்டதாக இஸ்ரேல் தெரிவித்து உள்ளது. ஈரானிடம் இருந்தும்.. ஈரானின் துணை அமைப்புகளிடம் இருந்தும் பதிலடியை இஸ்ரேல் எதிர்பார்க்கிறது என்பதால் இஸ்ரேல் அதிக எச்சரிக்கையுடன் உள்ளது.
இஸ்ரேலிய ராணுவம் மூன்று அலை தாக்குதல்களில் நடத்தி உள்ளது. மொத்தமாக 20 இலக்குகளை குண்டுவீசி தாக்கியுள்ளது. ஈரான் தலைநகர் தெஹ்ரானின் மேற்கு மற்றும் தென்மேற்கில் உள்ள பல ராணுவ தளங்கள் தாக்கப்பட்டுள்ளதாக ஈரானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஈரான் மீதான இஸ்ரேலிய தாக்குதல்கள் குறித்து அமெரிக்க அதிபர் பிடனிடம் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மொத்தமாக 2,000 கிமீ பயணத்தை மேற்கொண்டு இந்த தாக்குதலை இஸ்ரேல் நடத்தி உள்ளது.
முக்கியமாக ஈரானிய ராணுவத்திற்கு சொந்தமான ஏவுகணை தயாரிப்பு நிலையத்தை இஸ்ரேலிய இராணுவம் குறிவைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இங்குதான் அதிகமாக தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. 100 க்கும் மேற்பட்ட விமானங்களை களமிறக்கி இந்த தாக்குதலை இஸ்ரேல் நடத்தி உள்ளது. இதில் அமெரிக்காவிடம் இருந்து வாங்கிய அதிநவீன F-35 உட்பட நவீன விமானங்களை இஸ்ரேல் பயன்படுத்தி உள்ளது.
முக்கியமாக இஸ்ரேலுக்கு சொந்தமான F-35 'Adir’ ஸ்டெல்த் ஃபைட்டர்கள்.. தோராயமாக 2,000 கிலோமீட்டர்கள் பயணம் செய்து இந்த தாக்குதலை நடத்தி உள்ளது. இஸ்ரேலிய தாக்குதல்கள் Ilam, Khuzestan மற்றும் Tehran மாகாணங்களில் உள்ள இராணுவ தளங்களை குறிவைத்து, குறைந்த அளவு சேதத்தை மட்டுமே ஏற்படுத்தியதாக ஈரான் தெரிவித்து உள்ளது. ஈரானினின் ரேடார் அமைப்புகள் முதலில் F-35 'Adir’ ஸ்டெல்த் ஃபைட்டர்கள் மூலம் தாக்கப்பட்டது.
அதன்பின் மற்ற பைட்டர் உள்ளே வந்து தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இதனால் இரண்டு நாடுகளுக்கு இடையே நிலைமை மோசமாகி உள்ளது. ஈரானிடம் இருந்தும்.. ஈரானின் துணை அமைப்புகளிடம் இருந்தும் பதிலடியை இஸ்ரேல் எதிர்பார்க்கிறது என்பதால் இஸ்ரேல் அதிக எச்சரிக்கையுடன் உள்ளது.
-
சொந்த செலவில் சூனியம்.. 2022க்கு பிறகு அமெரிக்காவில் நடந்த அதிர்ச்சி! டிரம்புக்கு எதிராக மக்கள் -
ஈரான் ஈரலை குறிவைக்கும் ட்ரம்ப்..கார்க்கை சுத்துப் போட்ட ‘இரும்பு அரக்கன்கள்’.. ரெடியான பாராசூட் படை -
"ஹார்முஸை திறக்கவில்லை என்றால்.. பேரழிவு நிச்சயம்!" ஈரானுக்கு இறுதி எச்சரிக்கை விடுத்த டிரம்ப்! -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
இஸ்ரேல் முழுதும் வெடித்த போராட்டம்.. ஈரான் போரை கைவிட மக்கள் கொந்தளிப்பு! நெதன்யாகுவிற்கு சிக்கல் -
பாகிஸ்தான் இருக்க வேண்டிய இடம் இதுதான்.. முகத்தில் அறைந்த அமெரிக்க நாடாளுமன்ற அறிக்கை -
ஈரான் போர் காரணமாக எந்தெந்த நாட்டில் என்ன இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது தெரியுமா? லிஸ்ட் இதோ -
ஈரானிடம் உள்ள 400 கிலோ யுரேனியம்.. கண்வைத்த டிரம்ப்.. தரைவழி தாக்கி மீட்க அமெரிக்கா மாஸ்டர் பிளான் -
இனி ரேஷன் கடை மட்டுமில்லை! பெட்ரோல் பங்க்குகளிலும் மண்ணெண்ணெய் விற்பனை! மத்திய அரசு அனுமதி -
வயிறு எரியுது..1 டீ 25 ரூபாயா? ரூ.40க்கு விற்கப்படும் இட்லி வடை! 6,000ஐ தாண்டிய வணிக கேஸ் சிலிண்டர்! -
ஒரு மாதமாக இழுக்கும் ஈரான் போர்.. டிரம்ப் சொன்ன பாசிட்டிவ் மேட்டர்! இந்தியாவுக்கு பெரிய நிம்மதி! -
இஸ்ரேலுக்கு நாலா பக்கமும் விழும் அடி.. ஹைபா கடற்படை தளம் மீது ஏவுகணை வீசி ஹிஸ்புல்லா தாக்குதல்












Click it and Unblock the Notifications