முடங்கிப் போன சைரன்.. பற்றி எரியும் ஹவாய்.. இப்போ பெரிய சிக்கல் தான்! என்ன இப்படி ஆகிடுச்சு! ஷாக்
ஹவாய்: பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள ஹவாய் தீவில் ஏற்பட்ட காட்டுத் தீ என்பது கடந்த 10 நாட்களுக்கு மேலாக அங்குள்ள மக்களைப் பாடாய் படுத்தி வருகிறது.
வடக்கு பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ளது ஹவாய்.. தீவுக்கூட்டமான ஹவாய் அமெரிக்காவில் இருந்து 3700 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. இது 1959இல் 50ஆவது மாகாணமாக அமெரிக்காவில் தன்னை இணைத்துக் கொண்டது.

பல அழகிய மலைகள், கடற்கரைகளைக் கொண்ட ஹவாய்க்கு உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் பொதுமக்கள் செல்வார்கள். கொரோனா காலத்தில் சுற்றுலா துறை கடுமையாகப் பாதிக்கப்பட்ட நிலையில், இப்போது தான் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை மெல்ல அதிகரித்தது.
காட்டுத்தீ: இதற்கிடையே இப்போது ஹவாய் தீவுக் கூட்டத்திற்குப் பெரிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. அங்கு ஏற்பட்ட காட்டுத்தீயால் பொதுமக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஆகஸ்ட் 8ஆம் தேதி தொடங்கிய இந்த தீ 10 நாட்களுக்குத் தொடர்ந்து எரிந்து வருகிறது. இந்த காட்டுத்தீ ஹவாய் தீவுக்கு மக்களுக்குப் பேரழிவாக அமைந்துள்ளது. இந்த பேரழிவால் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும், பல ஆயிரம் பேர் முகாம்களுக்குச் செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டது.
அங்குள்ள லஹைனா என்ற பகுதியில் ஏற்பட்ட தீயில் சுமார் 85%ஐ தீயணைப்பு வீரர்கள் கட்டுப்படுத்திவிட்டனர். அதேநேரம் அங்கு மௌய்யில் தொடர்ந்து எரியும் தீயைக் கட்டுப்படுத்த அவர்கள் போராடி வருகின்றனர். மௌய் மாகாணத்தில் ஏற்பட்ட தீயால் இதுவரை மொத்தம் 2,170 ஏக்கர் மரங்கள் எரிந்து சம்பலாக்கியுள்ளது.. குலாவில் ஏற்பட்ட தீயில் 75% கட்டுப்படுத்தப்பட்ட போதிலும் அங்கும் 678 ஏக்கர் நிலவும் தீயால் எரிந்து நாசமாகியுள்ளது.
என்ன காரணம்: சூறாவளிக் காற்றுடன் கூடிய அசாதாரண வறண்ட வானிலையே தீக்கு எரிபொருளாக மாறி அது வேகமாகப் பரவ காரணமாக அமைந்துள்ளது. கடந்த ஆகஸ்ட் 8ஆம் தேதி தொடங்கிய இந்த காட்டுத் தீ 2,000க்கும் மேற்பட்ட கட்டிடங்களை அழித்துள்ளது. மேலும் இந்த தீவிபத்தில் பல்வேறு சிறப்புமிக்க பல இடங்களும் எரிந்து நாசமாகியுள்ளது.

பேரழிவை ஏற்படுத்தியுள்ள இந்த தீ விபத்திற்கு என்ன காரணம் என்பது தெளிவாகத் தெரியவில்லை.. இருப்பினும், ஏற்கனவே வறண்ட வானிலை மற்றும் அதீத காற்று வீசும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில், தீ வேகமாகப் பரவ இதுவே காரணமாக அமைந்துவிட்டது. அமெரிக்காவில் ஏற்படும் காட்டுத்தீயில் சுமார் 85% மனிதர்களால் ஏற்படுவது குறிப்பிடத்தக்கது.
மேலும், உள்ளூர் மரங்களைக் காட்டிலும் வெளியில் இருந்து கொண்டு வரப்படும் மரங்கள் எளிதாகத் தீப்பற்றக் கூடியவையாக இருக்கிறது. இந்த இரண்டும் சேர்த்துத் தான் தீ இந்தளவுக்கு வேகமாகப் பரவ காரணமாக அமைந்துவிட்டது.
சைரன்: ஹவாய் பகுதியில் இயற்கை பேரிடர் ஏற்படும் போது மக்களை எச்சரிக்கும் வகையில் அலர்ட் செய்யும் சைரன் முறை இருக்கிறது. கடந்த ஆகஸ்ட் 8இல் காட்டுத்தீ தொடங்கிய போதும், அதன் பிறகு இது வேகமாகப் பரவிய சமயத்திலும் இந்த சைரன் ஒலிக்கவில்லையாம், இது இந்த சைரனின் நம்பகத்தன்மை குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. மேலும், காட்டுத்தீயை அணைக்கவும் விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications