அமெரிக்காவில் '9 கிரகங்களும் உச்சம் பெற்றவர்'.. 11000 அடி உயரத்தில் இருந்து விழுந்தும்.. அதிசயம்
வாஷிங்டன்: அமெரிக்காவின் நெவடா பாலைவனத்தில் பாராசூட் உள்ளிட்ட சாகச விளையாட்டுகளுக்கு ஏற்ற இடமாக இருக்கிறது. இதனால் விடுமுறையை கொண்டாட சுற்றுலா பயணிகள் அங்கு அதிக அளவில் செல்வது வழக்கம். அந்தவகையில் 25 வயதாகும் மிட்செல் டீக்கின் என்ற இளைஞர் பாராசூட்டில் பறந்து கொண்டிருந்தார். அப்போது அந்த பாராசூட் திடீரென செயலிழந்தது. இதனால் சுமார் 11 ஆயிரம் அடி உயரத்தில் இருந்து அவர் கீழே விழுந்தார். ஆனால் அதிர்ஷ்டவசமாக காயங்களுடன் அவர் உயிர் தப்பியிருக்கிறார்.
பொதுவாக சினிமா படங்களில் தான் நம்ப முடியாதகாட்சிகளை வைப்பார்கள். ஆனால் நிஜத்தில் அதற்கு வாய்ப்பே இருக்காது. ஆனால் உலகத்தில் அதிசயம் போல் சில சம்பவங்கள் அரிதாக நடப்பது உண்டு.. விமானத்தில் செல்பவர் பல அடி உயரத்தில் இருந்து விழுந்து தப்பித்த சம்பவம் நடந்துள்ளது. இதேபோல் பாராசூட்டில் இருந்தும் விழுந்து தப்பித்த சம்பவங்கள் நடந்துள்ளது. இதனை எல்லாம் இயற்கையின்அதிசயம் என்று கூட சொல்லாம். ஏனெனில் நடைமுறையில் நம்பவே முடியாததாக இருந்தது. உதாரணமாக அகமதாபாத் விமான விபத்தில் ஒரே ஒருவர் மட்டும் உயிர் பிழைத்தார்.. அதேபோல் சம்பவங்கள் அரிதாக அவ்வப்போது நடந்து வருகின்றன. அப்படித்தான் அமெரிக்காவில் நடந்துள்ளது.

நெவடா பாலைவனம்
அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் மாகாணத்தில் உள்ள நெவடா பாலைவனம் பாராசூட் உள்ளிட்ட சாகச விளையாட்டுகளுக்கு ஏற்ற இடமாக இருக்கிறது. இதனால் விடுமுறையை கொண்டாட சுற்றுலா பயணிகள் அங்கு அதிக அளவில் வருவார்கள். அந்த வகையில் இங்கிலாந்தின் லங்காஷயர் பகுதியைச் சேர்ந்த 25 வயதாகும் மிட்செல் டீக்கின் என்ற இளைஞர், அமெரிக்காவில் விடுமுறையை கொண்டாட சுற்றுலா சென்றுள்ளார். மிட்செல் டீக்கின்னும் கடந்த செப்டம்பர் 17ம் தேதி நெவடா பாலைவனத்திற்கு சென்றுள்ளார். அங்கு பாராசூட் விளையாட்டில் பங்கேற்க ஆசைப்பட்டுள்ளார். அவருக்கு அமெரிக்காவைச் சேர்ந்த ஜிரோன் ஆர்கோஸ் போன்ஸ் (54 வயது) பயிற்சியாளரும் பயிற்சி அளித்துள்ளார்.
சுற்றுலா பயணி விழுந்தார்
அப்போது கண் இமைக்கும் நேரத்தில் இங்கிலாந்து சுற்றுலா பயணி மிட்செல் டீக்கினும், பயிற்சியாளர் ஜிரோன் ஆர்கோஸ் போன்சும், மணிக்கு சுமார் 56 முதல் 72 கி.மீ வேகத்தில் நெவாடா பாலைவனத்தில் வந்து விழுந்தனர். விபத்து கடுமையாக இருந்த போதிலும், மிட்செல் டீக்கினும், பயிற்றுவிப்பாளர் ஜிரோனும் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தனர். இருவரும் லாஸ் வேகாஸில் உள்ள யு.எம்.சி. (UMC) அதிர்ச்சி சிகிச்சைப் பிரிவுக்கு விமானம் மூலம் கொண்டு செல்லப்பட்டார்கள்.
எழும்புகள் முறிவு
மிட்செல் டீக்கினுக்கு இடுப்பு எலும்பு முறிவு ஏற்பட்டிருந்தது. விலா எழும்புகள் முறிந்திருந்தது. நுரையீரலில் ஓட்டை ஏற்பட்டிருந்தது. சிறுநீரகத்திலும் காயம் ஏற்பட்டிருந்தது. இத்தனைக்கு பிறகு மிட்செல் உயிருடன் இருந்தது ஆச்சரியமாக பார்க்கப்படுகிறது. அவருக்ககு எலும்பு சரியாமல் இருக்க அறுவை சிகிச்சை மூலம் உலோகத் தகடுகள் பொருத்தப்பட்டிருக்கிறது.
பயிற்சியாளர் கவலைக்கிடம்
தற்போது மிட்செல் டீக்கின் மெல்ல மெல்ல நடக்கப் பழகி வருவதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். எனினும், பயிற்றுவிப்பாளர் ஜிரோன் ஆர்கோஸ் போன்ஸ் இன்னும் கவலைக்கிடமான நிலையிலேயே சிகிச்சை பெற்று வருகிறார். அவர் உயிர் பிழைப்பது கடினம் என்று கவலை எழுந்தள்ளது. இந்தச் சம்பவத்திற்கான காரணத்தை ஃபெடரல் ஏவியேஷன் நிர்வாகம் தீவிரமாக விசாரித்து வருகிறது.
ஒன்பது கிரகங்களும் உச்சம் பெற்ற ஒருவர்
மிட்செலின் மருத்துவச் செலவுகளைச் சமாளிக்க, அவரது காதலி கோஃபண்ட்மி மூலம் மருத்துவ செலவுக்கு நிதி திரட்டி வருகிறார். 11000 அடி உயரத்தில் இருந்து குதித்தவர் உயிர் பிழைத்திருப்பது அதிசயமாக பார்க்கப்படுகிறது. நம்மூரில், ஒன்பது கிரகங்களும் உச்சம் பெற்ற ஒருவர் பேட்டரி இல்லாமலும் செல்போனில் பேசுவார்கள் என்று கிண்டலாக கூறுவார்கள். அப்படியான அதிசயம் தான் மிட்செல் டீக்கின் வாழ்க்கையில் நடந்துள்ளது.












Click it and Unblock the Notifications