Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"ராட்சசன்".. பெண்களின் மர்ம உறுப்புகள்.. 11 வயது சிறுவனையும் சீரழித்த வீரர்கள்.. நொறுங்கும் இதயம்..!

11 வயது சிறுவனை பலாத்காரம் செய்துள்ளனர் ரஷ்ய வீரர்கள் சிலர்

Subscribe to Oneindia Tamil

மாஸ்கோ: வீரர்கள் என்று சொல்லி கொண்டு, ரஷ்ய ராணுவத்தினர் செய்யும் அட்டூழியங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு போகிறது.. அந்த வகையில் இன்னொரு செய்தியும் தற்போது வெளியாகி உலக மக்களின் இதயங்களை நொறுக்கி கொண்டிருக்கிறது.

யார் சொல்லியும் கேட்காமல், எந்த நாடு அறிவுறுத்தியும், எச்சரித்தும் அதற்கு கட்டுப்படாமல், உக்ரைன் மீது போர் தொடுத்து வருகிறது ரஷ்யா. இதனால் லட்சக்கணக்கான மக்கள் கதிகலங்கி போயுள்ளனர்.

அவர்களின் உடைமைகளையும் ரஷ்ய ராணுவம் வேட்டையாடி கொண்டிருக்கிறது.. இதற்கு நடுவில், ஈவிரக்கமே இல்லாமல் சிறுமிகள் , சிறுவர்கள், மற்றும் ஏராளமான பெண்களை ரஷ்ய ராணுவத்தினர் பலாத்காரம் செய்யும் கொடுமையும் அதிகரித்து காணப்படுகிறது..

 5 வீரர்கள்

5 வீரர்கள்

ஒவ்வொரு பலாத்கார செய்தியும் தலையில் இடியாய் இறங்கிவருகிறது.. உக்ரேனிய நாடாளுமன்ற உறுப்பினர் லிசியா வசிலெங்கோ சமீபத்தில் ஒரு தகவலை வெளியிட்டிருந்தார்.. அதில், . உக்ரைனின் புச்சா நகரில் வசிக்கும் 14 வயது சிறுமி 5 ரஷ்ய வீரர்களால் பலாத்காரம் செய்யப்பட்டதாகவும், அதனால், அந்த சிறுமி தற்போது கர்ப்பமாக இருப்பதாகவும் சில தினங்களுக்கு முன்பு அதிர்ச்சி தகவலை வெளியிட்டிருந்தார்.

 அந்தரங்க உறுப்புகள்

அந்தரங்க உறுப்புகள்

அதுமட்டுமல்ல, 10 வயது சிறுமிகளின் அந்தரங்க உறுப்புகள் சேதப்படுத்தப்பட்டுள்ளதாகவும், பெண்களை படுகாயப்படுத்தி ஸ்வஸ்திக் என்ற முத்திரையை அவர்கள் மீது ரஷ்ய வீரர்கள் பதிவு செய்துள்ளது கண்டிக்கத்தக்கது என்றும் கூக்குரல்கள் பெருகின.. ரஷ்யாவின் தாய்மார்கள் இந்த குற்றவாளிகளை வளர்த்துள்ளார்களே, இப்படியுமா இரக்கமற்ற குற்றவாளிகளை அந்த ரஷ்யா கொண்டுள்ளது? என்றும் கேள்விகள் நாலாபக்கமும் துளைத்தெடுத்தன.

 கொடூர மரணம்

கொடூர மரணம்

மேலும், உக்ரைனை சேர்ந்த இர்பின் நகரிலும், 20 வயதான இளம்பெண்ணை 3 வீரர்கள் கொடூரமாக சீரழித்துள்ளனர் என்ற மற்றொரு தகவலையும் வெளியிட்டிருந்தார்.. இப்படி உக்ரைன் நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர் லிசியா, பெண்கள் மற்றும் சிறார்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்களை தொடர்ந்து அம்பலப்படுத்தி வரும் நிலையில், தற்போது இன்னொரு தகவலையும் வெளியிட்டு அதிர்ச்சியை கூட்டி உள்ளார்.

 நாற்காலி

நாற்காலி

11 வயது சிறுவனை, 3 ரஷ்ய ராணுவத்தினர் பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார்கள்.. அதுவும், அந்த சிறுவனின் தாய் முன்னே பலாத்காரம் செய்திருக்கிறார்கள்.. அங்குள்ள புச்சாவில் இந்த சம்பவம் நடந்துள்ளது.. சிறுவனை பலாத்காரம் செய்யும் முன்பு, அவரது அம்மாவை ஒரு நாற்காலியில் ரஷ்ய வீரர்கள் கட்டி போட்டுவிட்டார்களாம்.. அதற்கு பிறகுதான், சிறுவனை நாசம் செய்துள்ளனர்..

 புச்சா நகர்

புச்சா நகர்

இந்த தகவலை வெளியிட்டுள்ள லிசியா, இதற்கெல்லாம் நோட்டோவும், ஐ.நா உறுப்பு நாடுகளும்தான் முழு பொறுப்பு என்றும் பதிவிட்டுள்ளார். ஏற்கனவே, இதே புச்சா நகரில் தான் 400க்கும் மேற்பட்ட அப்பாவி பொதுமக்கள் ரஷ்ய ராணுவத்தினரால் கொடூரமாக கொல்லப்பட்டனர்... இதே புச்சா நகரில்தான், வீடுகளுக்குள் புகுந்த ரஷ்ய வீரர்கள் கொள்ளை சம்பவத்திலும் ஈடுபட்டனர்...

 ஃபர்னிச்சர்கள்

ஃபர்னிச்சர்கள்

டிவி பெட்டிகள், துணிமணிகள், பர்னிச்சர்கள், என கண்ணில் பட்ட பொருட்களை எல்லாம் கொள்ளையடித்து கொண்டு ஓடினர்.. இந்த கொள்ளை சம்பவம் பற்றிய சிசிடிவி காட்சியும் வெளியாகி இருக்கிறது.. இப்படி, கொலை, கொள்ளை, பலாத்காரம் என எல்லைமீறி கொண்டிருப்பவர்களை யார் கட்டுப்படுத்துவது என்று தெரியவில்லை.. யுக்ரைனின் ஒப்பாரி ஓலம் உலக நாடுகளை நிலைகுலைய வைத்து வருகிறது..!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+