தொடங்கியது வர்த்தக போர்.. மாறி மாறி அடித்துக்கொள்ளும் டிரம்ப் - சீனா.. இந்தியாவிற்குத்தான் ஜாக்பாட்
சென்னை: சீனா - அமெரிக்கா இடையிலான வர்த்தக போர் தீவிரம் அடைந்து உள்ளது. இரண்டு நாட்டு மோதல் உச்சம் அடைந்து உள்ளது. இதனால் சீன பொருட்களுக்கான மவுசு குறைந்து இந்தியாவின் ஏற்றுமதி அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளன.
அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் உத்தரவு காரணமாக சீனா - அமெரிக்கா இடையிலான போர் உச்சம் அடைந்து உள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் வரி விதிப்பிற்கு பதிலடியாக சீனா அதிரடியாக புதிய வரி விதிப்பு முறைகளை மேற்கொண்டு உள்ளது.

மெக்சிகோ மற்றும் கனடா மீது 25 சதவீத வரிகளையும், சீனா மீது 10 சதவீத வரிகளையும் விதித்தார்.
சீனா, மெக்சிகோ மற்றும் கனடா ஆகியவை அமெரிக்க வர்த்தகப் பற்றாக்குறையில் முதல் 3 இடங்களை வகிக்கின்றன, சீனா அதிகப்பட்சமாக 30.2 சதவிகிதம், மெக்ஸிகோ 19 சதவிகிதம் மற்றும் கனடா 14 சதவிகிதம் வரி பற்றாக்குறையில் பங்கு வகிக்கின்றன.
சீனா பதிலடி:
அமெரிக்காவின் வரி விதிப்பிற்கு ஏற்கனவே கனடா, மெக்சிகோ பதிலடி தந்துவிட்டது. கனடா, மெக்சிகோ இரண்டும் அமெரிக்காவின் பொருட்கள் மீது 25% வரியை விதித்து விட்டது. தற்போது சீனா பல அமெரிக்க தயாரிப்புகளுக்கு வரி விதித்து உள்ளது. அதேபோல் விதிமீறல்கள் தொடர்பாக கூகுள் மீது விசாரணையை அறிவித்து உள்ளது
அமெரிக்க நிலக்கரி மற்றும் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு ஏற்றுமதி மீது 15% வரியை சீனா விதித்து உள்ளது, அதன் எண்ணெய் மற்றும் விவசாய உபகரணங்கள் மீது 10% வரியை சீனா விதித்து உள்ளது. இதனால் அமெரிக்காவில் இருந்து நிலக்கரி மற்றும் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு, எண்ணெய் மற்றும் விவசாய உபகரணங்கள் ஏற்றுமதி செய்யப்படுவது குறையலாம். இதனால் அமெரிக்காவிற்கு கடுமையான இழப்பு ஏற்படும் சூழல் ஏற்பட்டு உள்ளது.
டிரம்ப்பின் செயலால்.. அமெரிக்கா மிகப்பெரிய சிக்கலில் மாட்டி உள்ளது. கிட்டத்தட்ட சர்வதேச அளவில் வர்த்தக போர் மூண்டு உள்ளது. பனிப்போருக்கு பின்பாக மிக மோசமான வர்த்தக போர் ஏற்பட்டு உள்ளது. உலக அளவில் மார்க்கெட்டில் இதனால் பெரிய அளவில் சரிவுகள் ஏற்படும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.
இந்தியாவிற்கு சாதகம்:
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெளியிட்ட வரி விதிக்கப்படும் நாடுகளின் முதல் லிஸ்டில் இந்தியாவின் பெயர் குறிப்பிடப்படவில்லை. ஆனால் சீனாவின் பெயர் இடம்பெற்று உள்ளது. வர்த்தக பற்றாக்குறை அடிப்படையில் இந்த வரி விதிப்பை டிரம்ப் மேற்கொண்டுள்ளார். அமெரிக்காவின் ஒட்டுமொத்த வர்த்தகப் பற்றாக்குறையில் இந்தியா 3.2 சதவீதத்தை மட்டுமே பெற்றுள்ளது. அமெரிக்க வர்த்தகப் பற்றாக்குறையில் ஒன்பதாவது இடத்தில்தான் இந்தியா உள்ளது. இதனால் அமெரிக்கா கூடுதல் வரி விதித்த நாடுகளின் முதல் லிஸ்டில் இந்தியா இல்லை.
இதனால் இந்தியாவிற்கு சாதகமான சூழல் ஏற்பட்டு உள்ளது. அதாவது இந்தியாவின் பொருளாதாரம் உயரும் வாய்ப்புகள் உள்ளன. சீனாவில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்பவர்கள்.. அதை தவிர்த்து இந்தியாவில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்யும் வாய்ப்புகள் உள்ளன.
எச்சரிக்கை:
ஆனால் இந்தியாவையும் டிரம்ப் இன்னும் விட்டுவைக்கவில்லை. இந்தியா மீதும் அவர் எப்போது வேண்டுமானாலும் வரி விதிக்கும் வாய்ப்புகள் உள்ளன. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியா உள்ளிட்ட பிரிக்ஸ் நாடுகளுக்கு பயங்கரமான எச்சரிக்கை ஒன்றை விடுத்து உள்ளார். டாலர் வர்த்தகத்தில் இருந்து வெளியேற நினைத்தால், டாலர் வர்த்தகத்தை குறைத்தால் 100% வரி விதிப்பை மேற்கொள்ளுவோம் என்று அமெரிக்கா இந்தியா உள்ளிட்ட பிரிக்ஸ் நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்து உள்ளது.
இது போக டாலர் வர்த்தகம் தாண்டி, இந்தியாவின் வரி விதிப்பு முறையை காரணம் காட்டி இந்தியா உள்ளிட்ட சில நாடுகள் மீது 20% கூடுதல் வரியை விதிக்கவும் டிரம்ப் முயல்வார் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே கனடா, மெக்சிகோ மீது அவர் விதிக்கும் 20% வரி இந்த பிப்ரவரி மாதம் 1ம் தேதி அமலுக்கு வருகிறது. மேலும் சீனா மீதான வரியை அடுத்த வாரம் அறிவிப்பார். அதன்பின் இந்தியா மீதான வரியை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது .
-
Kuwait மீது திடீர் தாக்குதல் நடத்திய ஈரான்.. திரும்பும் பக்கமெல்லாம் ஏவுகணை சந்தம்.. பீதியில் மக்கள்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications