"ஆபாச படங்கள்.." பெண்களுக்கு ரொம்ப பெரிய பிரச்சினை இருக்கு.. வந்த வார்னிங்.. அப்போ ஆண்களுக்கு?
வாஷிங்டன்: ஆபாசப் படம் என்பது எப்போதும் சர்ச்சைக்குரிய டாபிக்காகவே இருந்துள்ளது. இதற்கிடையே ஆய்வாளர்கள் ஆபாசப் படங்கள் நமது ரியல் வாழ்க்கையை எந்தளவுக்குப் பாதிக்கிறது என்பதைக் கண்டறிய நடத்திய முக்கிய ஆய்வு முடிவுகள் இப்போது வெளியாகியுள்ளது. இது குறித்து நாம விரிவாகப் பார்க்கலாம்.
ஆபாசப் படங்கள் குறித்தும் அது ஒருவரது பாலியல் வாழ்க்கையில் எந்தளவுக்குச் சிக்கல்களை ஏற்படுத்துகிறது என்பது குறித்தும் கண்டறிய பல்வேறு ஆய்வுகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது.

அப்படி நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் மிக முக்கிய தகவல் தெரிய வந்துள்ளது. இது ஆபாசப் படங்கள் ஒருவரது அந்தரங்க வாழ்க்கையை எந்தளவக்கு பாதிக்கிறது என்பதைக் காட்டுவதாக இருக்கிறது.
ஆய்வு முடிவுகள்: ஜர்னல் ஆஃப் செக்சுவல் மெடிசின் என்ற இதழில் இது குறித்த ஆய்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. அதில் ஆபாசப் படங்களைப் பார்க்கும் ஆண்கள் மற்றும் ஆபாசப் படங்களைப் பார்க்காத ஆண்கள் என இரு தரப்பிற்கும் இடையே என்ன வேறுபாடு என்பதைக் கண்டறியவே இந்த ஆய்வை நடத்தியுள்ளனர். பாலியல் சார்ந்த விஷயங்களில் அவர்களின் நடத்தை எந்தளவுக்கு மாறுபட்டு இருக்கிறதை என்பதைக் கண்டறிய 18-65 வயதுடைய 1,036 ஆண்கள் மற்றும் பெண்களிடம் இது குறித்து ஆய்வு செய்துள்ளனர்.
இதில் கண்டுபிடிக்கப்பட்ட சில விஷயங்கள் பொதுவானது என்ற போதிலும் சில விஷயங்கள் முற்றிலும் புதுமையாகவே இருக்கிறது. முதலில் ஆபாசப் படங்களை அதிகம் பார்க்கும் ஆண்கள் கேஷ்வல் உடலுறவை விரும்புகிறார்கள். மேலும், பல பாட்னர்கள் உடன் உடலுறவு கொள்ள விரும்புவதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. மேலும், இந்த சர்வேயில் 70% ஆண்களும், 50% பெண்களும் ஆபாசப் படங்களைப் பார்ப்பதாகத் தெரிவித்துள்ளனர்.
பெரிய சிக்கல் இதுதான்: இதில் ஆபாசப் படங்களைப் பார்க்கும் பெண்கள் தங்கள் பாட்னர்கள் பாலியல் ரீதியாக தங்களைத் திருப்திப்படுத்தவில்லை என்று அதிகம் உணர்கிறார்களாம். மறுபுறம் ஆபாசப் படங்களைப் பார்க்கும் ஆண்கள் அதில் வரும் விஷயங்களை பாட்னர்களுடன் முயல்கிறார்களாம். இவை இரண்டுமே ஆபத்து என்கிறார்கள் மருத்துவர்கள். ஆபாசப் படங்களில் வருவது நிஜம் இல்லை.. அது ஒத்திகை செய்து படமாக்கப்படுவது. எனவே அதை பாட்னர்களிடம் எதிர்பார்ப்பது தவறு என்கிறார்கள் மருத்துவர்கள்.
எவ்வளவு சிக்கல்: மறுபுறம் ஆபாசப் படத்தைப் பார்க்காத ஆண்கள் உடலுறவைத் தாண்டி எமோஷ்னலாக கனெக்ட் ஆவதையே அதிகம் விரும்புகிறார் என்றும் இந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது. இந்த ஆய்வு ஆபாசப் படங்களுக்கும் ரியல் வாழ்க்கைக்கும் எந்தளவுக்குச் சிக்கலான உறவு இருக்கிறது என்பதை எடுத்துக் காட்டுவதாக இருக்கிறது. மேலும் செக்ஸ், உறவுகள் மற்றும் பாலினம் உள்ளிட்டவை மீதான நமது பார்ப்பை ஆபாசப் படங்களால் பாதிக்கப்படலாம் என்றும் இந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
அதேநேரம் அனைவரும் ஆபாசப் படங்களால் பிரச்சினை என்று சொல்வதில்லை. ஒரு சிலர் ஆபாச படங்களில் சில நல்லதும் கூட நடப்பதாகவே குறிப்பிடுகிறார்கள். குறிப்பாக ஆபாச படங்கள் பாலியல் விழிப்புணர்வையும் வெளிப்படைத்தன்மையையும் அதிகரிக்கும் என்கிறார்கள். மேலும், இது தம்பதிக்கு இடையே ஆரோக்கியமான பாலியல் தொடர்புகளை உருவாக்கவும் உதவும் என்கிறார்கள். இப்படி இரு வேறு கருத்துகளே ஆபாச படங்களில் இருக்கிறது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications