33 வருடங்களில் மிகப்பெரிய "ட்விஸ்ட்".. உக்ரைன் போரில் கால் வைக்கும் ஜெர்மனி! நடுங்கும் புடின்! ஏன்?

Subscribe to Oneindia Tamil

மாஸ்கோ: உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில் ஐரோப்பாவில் உள்ள முக்கியமான ஒரு நாடான ஜெர்மனி ரஷ்யாவிற்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்துள்ளது. 3 வாரங்களுக்கு முன்பெல்லாம் நினைத்து கூட பார்க்க முடியாத விஷயங்கள் ரஷ்யா போரால் ஜெர்மனி அரசியலில் நடைபெற்று வருகிறது.

ஜெர்மனி நாடாளுமன்றம் இரண்டு வாரங்களுக்கு முன் கூடியது. பிரதமர் ஒலாப் ஸ்கால்ஸ் அந்த அறிவிப்பை வெளியிடும் போது அவையில் இருந்த பல எம்பிக்கள் எழுந்து நின்று கைதட்டினர்.. பலர் ஓ என்று கோஷம் எழுப்பினர்.. பலர் அதிர்ச்சியில் உறைந்து போய் நின்றனர்.

நாடாளுமன்றத்தையே அதிர வைக்கும் அளவிற்கு ரஷ்யாவிற்கு எதிரான முக்கியமான நிலைப்பாட்டை ஜெர்மனியின் புதிய பிரதமர் ஸ்கால்ஸ் அன்று எடுத்தார்.. அது என்ன முடிவு? என்று பார்க்கலாம்!

ஸ்கால்ஸ்

ஸ்கால்ஸ்

ஏஞ்சலோ மெர்கலுக்கு பின் பிரதமராக வந்த ஸ்கால்ஸுக்கு ரஷ்யா என்றால் மிகவும் நெருக்கம். அவருக்கும் ரஷ்யாவிற்கு அவ்வளவு மோதல் இல்லை. இருப்பினும் ரஷ்யாவிற்கு எதிராக கடுமையான நிலைப்பாடுகளை எடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு அவர் தள்ளப்பட்டு இருக்கிறார். உக்ரைன் மீது ரஷ்யா கடந்த 10 நாட்களுக்கு முன் போர் அறிவித்தது. இடையில் இரண்டு முறை போர் நிறுத்தம் செய்யப்பட்ட நிலையில் இன்று மாலை மீண்டும் போர் தீவிரம் அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உக்ரைன் தலைநகர் கீவ் மற்றும் கார்கிவ் ஆகிய நகரங்களில் போர் தீவிரமாக நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரஷ்யா போர்

ரஷ்யா போர்

ரஷ்யாவிற்கு எதிராக உலக நாடுகள் பல கடுமையான பொருளாதார தடைகளை விதித்து வருகிறது. ரஷ்யாவின் ராணுவ ஏற்றுமதி உட்பட பல்வேறு ஏற்றுமதிக்கு கடுமையான தடைகள் உலக நாடுகள் மூலம் விதிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில்தான் ரஷ்யாவிற்கு எதிராக ஜெர்மனியில் முக்கியமான பல நிலைப்பாடுகள் எடுக்கப்பட்டு வருகிறது. அங்கு நாடாளுமன்றத்தில் பேசிய ஜெர்மனி அதிபர் ஸ்கால்ஸ், ஜெர்மனி படைக்கு 113 பில்லியன் டாலரை ஒதுக்குவதாக அறிவித்தார்.

 எவ்வளவு ஒதுக்கீடு

எவ்வளவு ஒதுக்கீடு

இதற்கு முன் இப்படி ஒரு ஒதுக்கீடு செய்யப்பட்டது இல்லை. ஜெர்மனியின் முந்தைய கால ஒதுக்கீடுகளை விடஇது இரண்டு மடங்கு அதிகம். அதோடு நேட்டோ படைகளுக்கு ஜெர்மனியின் மொத்த ஜிடிபியில் 2 சதவிகிதத்தை ஒதுக்குவதாகவும் அறிவித்தார். இதற்கு முன் அமெரிக்கா பல முறை ஜெர்மனியை அதிக அளவு நிதியை நேட்டோவிற்கு ஒதுக்கும்படி கேட்டும் கூட முடியவில்லை.

ஒதுக்கப்பட்ட பணம்

ஒதுக்கப்பட்ட பணம்

ஆனால் அமெரிக்கா போன்ற நாடுகளால் ஜெர்மனியை சம்மதிக்க வைக்க முடியாத நிலையில் ரஷ்யா சத்தமே இல்லாமல் ஜெர்மனியை அதிக அளவில் நேட்டோவிற்கு செலவு செய்ய வைத்துள்ளது. ஆம் ரஷ்ய போரால் நேட்டோவின் முக்கியத்துவத்தை உணர்ந்த ஜெர்மனி நேட்டோ படைகளுக்கு 2 சதவிகித ஜிடிபியை ஒதுக்குவதாக அறிவித்துள்ளது. கடந்த ஜனவரியில் எல்லாம் யோசித்து கூட பார்க்க முடியாத ஒரு விஷயத்தை இந்த முறை ஜெர்மனி செய்துள்ளது.

முறிவு

முறிவு

இதன் மூலம் ரஷ்யா - ஜெர்மனி இடையிலான உறவு முற்றிலுமாக முறிந்துள்ளது. அதோடு உக்ரைனுக்கு ஆயுதங்களை அனுப்புவதாகவும் அறிவித்துள்ளது. ஜெர்மனியின் மொத்த வெளியுவுறவுக்கொள்கையும் அன்றைய நாள் மாறியது குறிப்பிடத்தக்கது. இரண்டாம் உலகப்போர், பின்னர் பனிப்போருக்கு பின்பாக பெரிய அளவில் ராணுவத்திற்கு நிதி ஒதுக்க கூடாது என்று ஒதுங்கி இருந்த ஜெர்மனி ரஷ்யாவின் உரசலால் இவ்வளவு கோடிகளை ராணுவத்திற்கு ஒதுக்கி உள்ளது.

ஏற்றுக்கொள்ள முடியாது

ஏற்றுக்கொள்ள முடியாது

பனிப்போருக்கு பின் ரஷ்யா - ஜெர்மனி இடையிலான உறவு நெருக்கமாக இருந்தது. மொத்த ஐரோப்பாவும் ரஷ்யாவை எதிர்த்தாலும் ஜெர்மனி ரஷ்யா மீது நட்புடன் இருந்தது. அதிலும் ஜெர்மன் அரசியல் தலைவர்கள் பலர் ரஷ்யாவுடன் நேரடி நட்பில் இருந்தனர். ஆனால் அதே ரஷ்யாவிற்கு எதிராக ஜெர்மனி உக்ரைன் அணியில் இணைந்துள்ளது. அது மட்டுமின்றி உக்ரைனுக்கு உதவி செய்வதாகவும் அறிவித்துள்ளது. 2 மாதங்களுக்கு முன்பு இதெல்லாம் சாத்தியமே இல்லை.

புடின் வார்

புடின் வார்

இந்த போரை கூட ஜெர்மனி மக்கள், அரசியல்வாதிகள் ரஷ்ய வார் என்று சொல்லாமல் புடின் வார் என்றே சொல்லி வருகிறார்கள். அந்த அளவிற்கு அவர்களுக்கு ரஷ்யா நெருக்கம். இப்படி இருக்கும் நிலையில் ரஷ்யாவை ஜெர்மனி நேரடியாக எதிர்த்துள்ளது. அதோடு ஜி 7 நாடுகளுடன் இணைந்து ரஷ்யாவிற்கு எதிராக கடுமையான பொருளாதார தடைகளை கோட்னு வர போவதாகவும் ஜெர்மனி தெரிவித்துள்ளது. அலிகார்க்ஸை குறி வைத்து இந்த பொருளாதார தடைகளை கொண்டு வர போவதாக ஜெர்மனி அறிவித்துள்ளது. புடினுக்கு கண்டிப்பாக இது அதிர்ச்சியை கொடுத்திருக்கும்.

Recommended Video

    Ukraine-ஐ பிடிக்க Syria வீரர்களை களமிறக்கும் Russia?
    பொருளாதார தடை

    பொருளாதார தடை

    ரஷ்யாவின் புடின் ஆட்சியின் கீழ் பணக்காரர்கள் ஆன அலிகார்க்கஸை குறி வைத்து இந்த பொருளாதார தடைகளை கொண்டு வரப்போவதாக ஜெர்மனி அறிவித்துள்ளது. அதோடு ரஷ்யாவின் பொருளாதார ரீதியாக முடக்கும் வகையில் இந்த தடைகள் கொண்டு வரப்படும் என்றும் ஜெர்மனி தெரிவித்துள்ளது. உடனே ரஷ்யா போரை நிறுத்த வேண்டும். இல்லையென்றால் ரஷ்யா கடுமையான விளைவுகளை, சேதங்களை எதிர்கொள்ளும் என்று ஜெர்மனி தெரிவித்துள்ளது.ரஷ்யாவை ஜெர்மனி நேரடியாக எதிர்க்காது என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில்.. ரஷ்யாவிற்கு எதிராக உறுதியாக நிலைப்பாட்டை ஜெர்மனி எடுத்துள்ளது. பனிப்போருக்கு பின்பாக 33 வருடங்களில் சர்வதேச அளவில் நடந்த மிகப்பெரிய அரசியல் திருப்பமாக பார்க்கப்படுகிறது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+