"நடுங்கிய கால்கள்.." புதின் பேசும் போது இதை நோட் பண்ணீங்களா.. மோசமான உடல்நிலை பாதிப்பாம்! பரபர தகவல்
புதின் உடல்நிலை குறித்து இணையத்தில் பரபர வீடியோ பரவி வருகிறது.
மாஸ்கோ: ரஷ்ய அதிபர் புதின் உடல்நிலை குறித்து மீண்டும் ஒரு சர்ச்சை கிளம்பியுள்ளது. புதின் சமீபத்தில் பெலாரஸ் அதிபர் அலெக்சாண்டர் லுகாஷென்கோவை சந்தித்துப் பேசியிருந்தார். இது தொடர்பான வீடியோ தான், அவரது உடல்நிலை குறித்து மீண்டும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா போரை ஆரம்பித்து ஓராண்டு நெருங்குகிறது. இது போர் இல்லை தங்கள் நாட்டை காக்க எடுக்கப்படும் சிறப்புப் போர் நடவடிக்கை என்றே ரஷ்ய அதிகாரிகள் விளக்கம் கொடுத்து வருகின்றனர்.
இருப்பினும், உலக நாடுகள் இதை உக்ரைன் மீது ரஷ்யா நடத்தும் போராகவே பார்க்கின்றனர். இந்தப் போருக்கு ரஷ்ய அதிபர் புதின் மட்டுமே காரணம் என்று பலரும் கடுமையாகச் சாடி வருகின்றனர்.

புதின்
கடந்த ஆண்டு பிப். மாதம் போர் தொடங்கிய நிலையில், போர் சில வாரங்களில் முடிந்துவிடும் என்றே பலரும் நினைத்தனர். இருப்பினும், ஓராண்டாகப் போர் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.. இது உலகின் வலிமையான ராணுவங்களில் ஒன்றாகக் கருதப்பட்ட ரஷ்யாவுக்குத் தர்மசங்கடத்தையே ஏற்படுத்தியுள்ளது. இது ஒரு பக்கம் இருக்க ரஷ்ய அதிபர் புதின் உடல்நிலை குறித்தும் சில காலமாகவே தகவல்கள் பரவி வருகிறது. பொது நிகழ்ச்சிகளில் அவரது படங்களைப் பார்த்தாலே அவர் எந்தளவுக்குப் பலவீனமாக இருக்கிறார் என்பது தெரிவதாகப் பலரும் கூறி வருகின்றனர்.

உடல்நிலை பாதிப்பு
புதினுக்கு கேன்சர் உள்ளிட்ட மோசமான நோய்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு, ரஷ்ய அதிபர் மாளிகையிலேயே புதின் படிக்கட்டுகளில் இருந்து விழுந்ததாகவும் அப்போது அவர் தன்னிச்சையாக மலம் கழித்துக் கொண்டதாகவும் கூட தகவல் வெளியானது. தனது கேன்சர் உள்ளிட்ட பாதிப்புகளுக்கு அவர் ரகசியமாகச் சிகிச்சை எடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது. ரஷ்ய பாதுகாப்புப் படையில் உயர் பொறுப்பில் ஒருவர் அளிக்கும் தகவல்கள் அடிப்படையில் சர்வதேச ஊடகங்கள் இந்த செய்திகளை வெளியிட்டன.

கடும் தாக்கு
இதற்கிடையே நீண்ட காலத்திற்குப் பிறகு புதின் இன்று அங்கு பொது நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசியிருந்தார். மேற்குலக நாடுகள் ரஷ்யாவை முடிக்கப் பார்ப்பதாகக் குறிப்பிட்ட அவர், உக்ரைன் மோதலுக்கு மேற்குலக நாடுகளே காரணம் என்றும் ரஷ்யாவை தோற்கடிக்க முடியாமல் பொய்யான தகவல்களைப் பரப்பி வருவதாகவும் சாடினார். மேலும், உக்ரைன் போரை முடிக்கவே ரஷ்யா முயன்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார். மேலும், பல விவகாரங்களில் அவர் மேற்குல நாடுகளைச் சாடி பேசியிருந்தார்.

புதிய வீடியோ
இதற்கிடையே அவரது உடல்நிலை குறித்து மீண்டும் இப்போது சர்ச்சை எழுந்துள்ளது. புதின் சமீபத்தில் பெலாரஸ் அதிபர் அலெக்சாண்டர் லுகாஷென்கோவை சந்தித்துப் பேசியிருந்தார். இது தொடர்பான வீடியோவை இணையத்தில் பகிர்ந்த நெட்டிசன்கள், ரஷ்ய அதிபர் புதினால் அவரது கால்களை கட்டுப்படுத்த முடியவில்லை என்று கூறி அந்த வீடியோவை பரப்பி வருகின்றனர். ஏற்கனவே புதினுக்கு கேன்சர் எல்லாம் ஏற்பட்டதாகத் தகவல் பரவி வரும் நிலையில், இது அவரது உடல்நலக்குறைவு குறித்த கவலைகளை மேலும் அதிகரித்துள்ளது.

நடுங்கிய கால்கள்
பெலாரஸ் அதிபருடனான சந்திப்பில் அவரது கால் எப்படி ஆடியது என்பதை விளக்கும் வகையில் க்ளோஸ் அப் வீடியோக்களையும் இணையத்தில் வேகமாகப் பரப்பி வருகின்றனர். அந்த வீடியோவில் புதினின் கால்கள் அசாதாரணமாக இருப்பதும் நடுக்கத்துடன் இருப்பதும் தெளிவாகத் தெரிகிறது. பலரும் புதின் கால்கள் ஏன் இந்தளவுக்கு நடுங்குகிறது என்றே கேள்வி எழுப்பி வருகின்றனர்.

கேன்சர் சிகிச்சை
புதின் உடல்நிலை குறித்து சமீபத்தில் பிரபல அமெரிக்க ஊடகத்தில், மேற்கத்திய புற்றுநோய் சிகிச்சைகள் மட்டுமே புதினை இப்போது உயிருடன் வைத்துள்ளதாக ரஷ்ய வரலாற்றாசிரியரும் அரசியல் ஆய்வாளருமான வலேரி சோலோ குறிப்பிட்டிருந்தார். மேலும், "வெளிநாட்டுச் சிகிச்சை இல்லாமல் நிச்சயம் அவரால் இருந்திருக்க முடியாது என்றே கருதுகிறேன். ரஷ்யாவால் அவருக்கு இந்தளவுக்கு மேம்பட்ட சிகிச்சைகளை அளிக்க முடியாது" என்று அவர் கூறியிருந்தார்.

மோசமான பாதிப்பு
அதிநவீன சிகிச்சைகளை எடுத்துக் கொண்டாலும் கூட புதின் உடல்நிலை பெரியளவில் முன்னேறவில்லையாம். இதன் காரணமாக வரும் மார்ச் 5ஆம் தேதி முதல் மற்றொரு சிகிச்சையை புதின் எடுத்துக்கொள்ள இருக்கிறார். ரஷ்ய அதிபர் புதினுக்கு கேன்சர் மற்றும் பார்கின்சன் நோய் பாதிப்பு உள்ளதாக ஸ்பானிஷ் செய்தி நிறுவனமான மார்கா செய்தி வெளியிட்டுள்ளது. அவரது உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்து வருவதால் தான் அவரால் பல அரசியல் நிகழ்வுகளில் முன்பு போல பங்கேற்க முடிவதில்லை என்றும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications