தீவிரமாக ஸ்கெட்ச் போட்ட ஈரான்! ஆனாலும் ஈஸியாக தப்பிய இஸ்ரேல்- எது எப்படி! உற்று நோக்கும் உலக நாடுகள்
டெல் அவிவ்: நள்ளிரவு நேரத்தில் ஈரான் மிகப் பெரியளவில் ட்ரோன் தாக்குதல் நடத்தினாலும் 99% ஏவுகணைகளை இஸ்ரேல் இடைமறித்து அழித்துவிட்டது. இதற்கு இஸ்ரேல் என்ன செய்தது.. அதன் பாதுகாப்பு அமைப்பு எப்படி இந்தளவுக்குத் துல்லியமாக இருக்கிறது என்பது குறித்துப் பார்க்கலாம்.
இஸ்ரேல் மீது நள்ளிரவு ஈரான் மிகப் பெரியளவில் ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் தாக்குதலை நடத்தியது. இஸ்ரேலை நோக்கி சரமாரியாக ட்ரோன் மற்றும் ஏவுகணை மழை பொழிந்தன. இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய முதல் நேரடி தாக்குதல் இதுவாகும்.

ஈரானின் ஏவுகணைகள் இஸ்ரேல் வான்வழி அருகே வந்த உடன் அங்கிருந்த அபாய சைரன்கள் ஒலிக்கத் தொடங்கின. கடந்தாண்டு ஹமாஸ் வான்வழித் தாக்குதலை நடத்திய போது இதே சைரன்கள் அலறின. அதன் பிறகு மீண்டும் இப்போது அதேபோன்ற ஒரு சம்பவம் நடந்துள்ளது.
இஸ்ரேல் சொல்வது என்ன: இது தொடர்பாக இஸ்ரேல் பாதுகாப்புத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஈரானில் இருந்து ஏவப்பட்ட பல ஏவுகணைகள் இஸ்ரேல் எல்லையை நெருங்கி வருவது அடையாளம் காணப்பட்டது. இஸ்ரேலின் வான்வழி பாதுகாப்பு அமைப்பு கிட்டதட்ட அனைத்து ஏவுகணைகளையும் வெற்றிகரமாக இடைமறித்தது. நட்பு நாடுகளுடன் இணைந்து இஸ்ரேல் நாட்டில் நுழையும் முன்பே 99% ஏவுகணைகளை இடைமறித்தோம். இது குறிப்பிடத்தக்க வெற்றி" என்று கூறப்பட்டுள்ளது.
ஈாரன் அனுப்பிய ஏவுகணைகளை இஸ்ரேல் தனது அயர்ன் டோம் அமைப்புடன் இடைமறிக்கும் வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. நள்ளிரவில் பாய்ந்த ஏவுகணைகளால் இரவு முழுக்க பகல் போல மாறியது. அது சரி இந்த அயர்ன் டோம் என்றால் என்ன அது இஸ்ரேலை எப்படிப் பாதுகாத்தது என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
அயர்ன் டோம்: அமெரிக்காவின் மிசைல் டிபன்ஸ் ஏஜென்சி உடன் இணைந்து இஸ்ரேலின் ஏரோஸ்பேஸ் இண்டஸ்ட்ரீஸ் உருவாக்கிய பல அடுக்கு வான் பாதுகாப்பு அமைப்பு தான் அயர்ன் டோம். 1980களின் பிற்பகுதியில் இஸ்ரேலுக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான கூட்டு முயற்சியாக இதை உருவாக்கத் தொடங்கினர். முதலில் அரோ 1 அமைப்பை உருவாக்கி இஸ்ரேல் பயன்படுத்தி வந்த நிலையில், 2000ஆம் ஆண்டில் மேம்பட்ட அரோ 2 ஏவுகணையை வெற்றிகரமாக உருவாக்கினர்.
இந்த அரோ 2 மூலம் மேல் வளிமண்டலத்தில் வரும் குறுகிய மற்றும் நடுத்தர தூர ஏவுகணைகளை இடைமறித்து அழிக்க முடியும். ஏவுகணைகள் இஸ்ரேலை நோக்கிப் பாயத் தொடங்கும் முன்பே நடுவானில் வைத்து அதை அழிப்பதே இதன் நோக்கம். இப்போது நீண்ட தூர ஏவுகணைகளுக்காகத் தனியாக அரோ 3 என்ற அமைப்பையும் சேர்த்துள்ளார்கள்.
3 லேயர் பாதுகாப்பு: அயர்ன் டோம், டேவிட் ஸ்லிங் மற்றும் ஏசோ டிபன்ஸ் சிஸ்டம் என்று மூன்று அடுக்கு பாதுகாப்பு அமைப்பை இஸ்ரேல் வைத்துள்ளது. அயர்ன் டோம் கடந்த காலங்களிலும் ஏகப்பட்ட ஏவுகணைகளைச் சுட்டு வீழ்த்தி இருக்கிறது. ஆனால், அயர்ன் டோம் அமைப்பால் குறுகிய தூர ஏவுகணைகளை மட்டுமே வீழ்த்த முடியும். நடுத்தர முத் நீண்ட தூர ஏவுகணைகளை இடைமறித்துத் தாக்க இஸ்ரேல் டேவிட் ஸ்லிங் என்ற அமைப்பை வைத்துள்ளது.
என்ன நடக்கும்: இஸ்ரேல் தனது கட்டுப்பாட்டு அமைப்பில் க்ரீன் பைன் தீ ரேடார் என்ற ஒரு வகை ரேடாரை வைத்துள்ளது. இந்த ரேடார் இஸ்ரேலை நோக்கி வரும் ஏவுகணைகள் தொடர்ந்து கண்காணிக்கும். அப்படி எதாவது ஏவுகணை வருவதை இந்த ரேடார் கண்டுபிடித்தால் அதை ஆய்வு செய்து அது அங்கிருந்து வருகிறது.. எந்த வேகத்தில் வருகிறது.. எந்த நகரை டார்கெட் செய்து வருகிறது உள்ளிட்ட தகவல்களை பிராசஸ் செய்து கன்ட்ரோல் சென்டருக்கு அனுப்பிவிடும்.
அதன் பிறகு அங்கிருந்து இஸ்ரேல் பாதுகாப்பு அமைப்பு செயல்பட்டு ஏவுகணைகளை வானிலேயே அழிக்கும். இவை அனைத்தும் சில நிமிடங்களில் நடந்துவிடும் என்பதே இதன் சிறப்பு. இஸ்ரேல் இந்த பாதுகாப்பு அமைப்பை வைத்தே ஈரான் அனுப்பிய ஏவுகணைகளை மொத்தமாக அழித்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications