அமெரிக்காவில் ‘காரசாரமாக’ பிரபலமடைந்து வரும் ‘மோடி மேஜிக் நம்கீன்’ மிக்சர், சேவு...!
நியூயார்க்: தீபாவளியை முன்னிட்டு அறிமுகப் படுத்தப் பட்ட ‘மோடி மேஜிக் நம்கீன் மிகசர்' என்ற பலகாரவகை அமெரிக்க மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
குஜராத் முதல்வரும், பாஜகவின் பிரதம வேட்பாளருமான நரேந்திர மோடியின் தீவிர ஆதரவாளாரான அரவிந்த் பட்டேல் என்பவர் தான் இத்தகைய புதிய பலகாரத்தை அறிமுகப் படுத்தியுள்ளார்.
பொதுவாகவே அரசியலையும் தாண்டி பேஷன் ஐகானாக மோடி வலம் வருகிறார். தற்போது அவரது பெயரைப் பயன் படுத்தி சந்தைக்கு வரும் பொருளுக்கு மார்க்கெட்டில் ஏக கிராக்கி இருப்பது என்னவோ மறுக்க முடியாத உண்மை தான். அந்த வகையில் ‘மோடி மேஜிக் நம்கீன் மிக்சர்' அமெரிக்கர்களுக்கு பிடித்த பலகாரமாகி வருகிறதாம்.

மோடி மேஜிக்....
சமீபகாலமாக மோடியின் ஆடை இளைஞர்கள் மற்றும் இளைஞிகளின் பேவரைட் மாடல் ஆகி வருகிறது. தசரா விழாக்களிலும் மோடி பாடல் புகழ் பெற்றது. மோடி டாட்டூஸ் பற்றிச் சொல்லவே வேண்டாம். அமோக விற்பனை. தீபாவளி சமயத்தில் ‘மோடி பிராண்ட்' என்ற பெயரில் விற்பனையான பட்டாசுக்களை மக்கள் விரும்பி வாங்கிச் சென்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர். அந்தவகையில் இப்போது பட்சணங்களும் சேர்ந்து விட்டன.

மோடி ஆதரவாளர்...
அமெரிக்காவின் ஜெர்சி நகரில் உள்ள நியூயார்க் அவென்யூவில் ராஜ்போக் ஸ்வீட் ஸ்டோர்' என்ற வடநாட்டு இனிப்பு பலகார கடையை நடத்தி வரும் அரவிந்த் பட்டேல், மோடியின் தீவிர ஆதரவாளர்.

11 வகை இனிப்புகள்...
மோடி ஆட்சியின் 11வது ஆண்டு நிறைவு விழவை கொண்டாடும் வகையில் 11 வகை பேடா இனிப்புகளை இலவசமாக வழங்கி கொண்டாடினார் அரவிந்த்.

மோடி மேஜிக் நம்கீன் மிக்சர்...
தற்போது, தீபாவளியையொட்டி 'மோடி மேஜிக் நம்கீன்' என்ற பெயரில் மிக்சர் மற்றும் 'சேவ்' வகைகளை தயாரித்து சந்தையில் அறிமுகப் படுத்தியுள்ளார் அரவிந்த்.

இலவசமாக....
மேலும், இந்திய நாடாளுமன்ற தேர்தல் முடியும் வரை அமெரிக்காவில் கொண்டாடப்படும் இந்து பண்டிகைகள் மற்றும் பா.ஜ.க. சார்பில் நடத்தப்படும் கட்சி நிகழ்ச்சிகள் ஆகிய அனைத்திற்கும் கிட்டத்தட்ட 10 லட்சம் மோடி மேஜிக் நம்கீன் பாக்கெட்களை இலவசமாக வழங்க அரவிந்த் முடிவு செய்துள்ளார்.

செலவு...
45 சென்ட்கள் என விலையிடப்பட்டுள்ள 10 லட்சம் பாக்கெட்களை இலவசமாக வழங்க 45 ஆயிரம் டாலர்கள், அதாவது இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட 27 லட்சத்தும் 78 ஆயிரம் ரூபாய் செலவு ஆகுமாம்.

இதெல்லாம் ஜுஜுபிங்க....
இது குறித்து அரவிந்த் கூறும்போது, ‘இதெல்லாம் ஒன்றுமில்லை, இதை விட கூடுதலாக செலவிடவும் தயார்' எனத் தெரிவித்துள்ளாராம்.

அமோக ஆதரவு...
அமெரிக்காவில் வசித்து வரும் மோடி ஆதரவாளார்களிடையே இந்த நம்கீன் மிக்சர் அமோக ஆதரவைப் பெற்றுள்ளதாம்.

காரசாரமாக...
மோடியின் அரசியலை போலவே இந்த நம்கீனும் காட்டமாக உள்ளது. இந்திய அரசியல்வாதி ஒருவரின் பெயர் அமெரிக்காவில் 'பிராண்ட் நேம்' (வணிக குறியீட்டுப் பெயர்) ஆனதை நான் இப்போது தான் பார்க்கிறேன். மோடி மேஜிக் என்பது இந்தியாவில் மட்டுமல்ல.. உலகம் முழுவதும் 'ஒர்க் அவுட்' ஆவதை உணர்கிறேன்' என மிக்சர் சாப்பிட்டபடியே கமெண்ட் தெரிவித்துள்ளார் ஒரு வாடிக்கையாளர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications