"பக்கம் வராமல் முத்தம் தரலாம்!" காதலர்களை கவரும் புது கருவி! "வேற லெவல்" கொண்டாடும் நெட்டிசன்கள்

தொலைவில் இருக்கும் காதலிக்கு முத்ததை அனுப்பும் கருவி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Subscribe to Oneindia Tamil

பெய்ஜிங்: சீனாவை சேர்ந்த ஆய்வாளர்கள் சிலர் முத்தத்தை பறிமாறிக் கொள்ளும் சாதனம் ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். இது தொடர்பான படங்கள் இணையத்தில் வெளியாகி டிரெண்டாகி வருகிறது.

இந்த நவீன காலத்தில் புதுப்புது கண்டுபிடிப்புகள் நடந்து கொண்டே இருக்கிறது. 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை நாம் யோசித்து கூட பார்க்கவே முடியாத விஷயங்கள் இப்போது கண் முன்னே சாத்திமாகி வருகிறது.

உதாரணத்திற்கு சொல்ல வேண்டும் என்றால் மின்சாரத்தில் இயங்கும் கார், விண்வெளிக்கு சுற்றுலா செல்வது உள்ளிட்ட பல விஷயங்கள் கற்பனை செய்வதே கடினம். ஆனால், அவையெல்லாம் இப்போது உண்மையாகியுள்ளது.

சீனா

சீனா

இப்போது அதேபோல ஒரு வினோதமான கண்டுபிடிப்பு தான் நடந்துள்ளது. சமீப ஆண்டுகளாக பல வினோத பொருட்களை கண்டுபிடித்து வரும் சீனா தான் இந்த பொருளையும் கண்டுபிடித்துள்ளது. காதலர்களுக்கு பிரிந்து இருப்பது ரொம்பவே கஷ்டமான விஷயம். கட்டி தழுவிக் கொள்வதையும் முத்தம் கொடுப்பதையும் மிஸ் செய்வார்கள். அந்த குறையை போக்க சீனாவை சேர்ந்த ஒரு டெக் நிறுவனம் புதிய கருவி ஒன்றை உருவாக்கியுள்ளனர். இந்த கருவியை கொண்டு தொலை தூரத்தில் இருக்கும் காதலர்கள் முத்தம் கொடுத்துக் கொள்ளலாம்.

 முத்த கருவி

முத்த கருவி

சீனாவை சேர்ந்த ஒரு டெக் நிறுவனம் இதை கண்டுபிடித்துள்ளது. இதன் மூலம் தொலைவில் இருக்கும் துணைகளுக்கும் முத்தங்களை அனுப்பலாம். அதாவது இணையம் மூலம் இவர்களின் முத்தமும் பறிமாறிக் கொள்ளும். அதன் இப்போதே மெசேஜில் கிஸ் ஸ்மைலி இருக்கிறதே என கேட்கலாம். அது வேறும் சாட்.. இதில் உண்மையாகவே முத்தத்தை பறிமாற முடியும். இதன் மூலம் எங்கு இருந்தாலும் இணைய கனெக்ஷன் இருந்தால் போதும் ஒருவர் தனது துணைக்கு முத்தமிடலாம்

 ரிமோட் கிஸ்

ரிமோட் கிஸ்

இது கருவி ரிமோட் கிஸ் என்று அழைக்கப்படுதகிறது. இந்த கருவியில் நகரும் தன்மை கொண்ட சிலிக்கான் உதடுகள் இருக்கின்றன. இதன் மூலம் விரும்பும் நபருக்கு முத்தத்தை அப்லோட் செய்யலாம்.. அதேபோல அவர்களிடம் இருந்து முத்தத்தையும் பெறலாம். இது எப்படி வேலை செய்கிறது என்பதையும் பார்க்கலாம். இந்த கருவி வேலை செய்ய இருவரும் அந்த சாதனத்தை வைத்திருக்க வேண்டும். மேலும், இருவரும் இதற்கான செயலிலையும் வைத்திருக்க வேண்டும்.

எப்படி

எப்படி

முதலில் அவர்கள் இருவரும் வீடியோ கால் செய்ய வேண்டும். அதன் பின்னரே அவர்களால் முத்தங்களை அனுப்ப முடியும். அந்த கருவியில் இருக்கும் சென்சார்கள் ஒருவர் எப்படி முத்தம் கொடுக்கிறார்கள் என்பதை பதிவு செய்து கொள்கிறது. இந்த தகவல்கள் இணையம் மூலம் பாட்னரிடம் இருக்கும் கருவிக்கு அனுப்பப்படுகிறது. பின்னர் அங்கு இருக்கும் சிலிகான் உதடுகள் அதேபோன்ற முத்தத்தை கொடுக்கிறது. ஒரு நபர் முத்தம் கொடுக்கும் போது ஏற்படும் அழுத்தம், இயக்கம், வெப்பம் என அனைத்தையும் இந்த கருவி அப்படியே அனுப்பிவடுாம். அந்தளவுக்கு துல்லியமாக இருக்குமாம்.

 ரேட் என்ன

ரேட் என்ன

இதன் மூலம் முத்தம் கொடுப்பவர் எப்படி முத்தம் கொடுக்கிறாரோ.. அதே துல்லியமான முத்ததை இது முத்தம் பெறும் நபருக்கு அனுப்புகிறது.இந்த செயலி 260 யுவானுக்கு (ரூ. 3,000) விற்பனை செய்யப்படுகிறது. இப்போது தான் இதன் விற்பனை மெல்ல பிக்அப் ஆகிறது. ஒவ்வொரு மாதமும் 100+ சாதனங்கள் விற்பனை செய்யப்படுகிறது. இந்த கருவிக்கு சாங்சூ தொழிற்கல்வி நிறுவனம் மெகாட்ரானிக் டெக்னாலஜி காப்புரிமை பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த கருவியை அந்நாட்டை சேர்ந்த ஜியாங் சோங்லி என்பவர் கண்டுபிடித்துள்ளார்.

எதற்காக

எதற்காக

தனது கல்லூரி நாட்களில் காதலியை நீண்ட காலம் பிரிந்திருக்க வேண்டிய காலம் இருந்தாகவும் அப்போது அவரை மிஸ் செய்யும் உணர்வு ஏற்பட்டதே இந்த கருவியை கண்டுபிடிக்க காரணம் என்று இதை கண்டுபிடித்துள்ள ஜியாங் சோங்லி தெரிவித்தார். முன்னதாக கடந்த 2016ஆம் ஆண்டு இதேபோல 'கிஸ்ஸிங்கர்' எனப்படும் கேஜெட்டை சீனாவை சேர்ந்த மற்றொருவர் கண்டுபிடித்தது குறிப்பிடத்தக்கது.

நெட்டிசன்கள்

நெட்டிசன்கள்

இந்த கருவிக்கு இணையத்திலும் பலரும் பல விதமான கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். இந்த சாதனம் எப்படி பயன்படும் என்று தனக்கு புரியவில்லை என்றாலும் இதை பார்த்து தான் அதிர்ச்சியடைவதாக ஒருவர் பதிவிட்டுள்ளார். அதேபோல மற்றொருவர், "முத்ததை அனுப்புகிறோம் என்று கூறி சீன செயலிகளை நமது டேட்டாக்களை எடுக்காமல் இருந்தால் சரி" என்றும் பதிவிட்டு வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+