ஒரு பேராசிரியர்.. பேஸ்புக் தகவல் திருட்டின் மாஸ்டர் மைன்ட் .. தகவல்களை எங்கே மறைத்துள்ளார் தெரியுமா?
பேஸ்புக் மூலம் திருடப்பட்ட தகவல்கள் ரஷ்யாவில் மறைத்து வைக்கப்பட்டு இருப்பதாக கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா நிறுவனத்தில் வேலை பார்த்த முன்னாள் பணியாளர் கிறிஸ்தோபர் வைல் தகவல் தெரிவித்துள்ளார்.
நியூயார்க்: பேஸ்புக் மூலம் திருடப்பட்ட தகவல்கள் ரஷ்யாவில் மறைத்து வைக்கப்பட்டு இருப்பதாக கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா நிறுவனத்தில் வேலை பார்த்த முன்னாள் பணியாளர் கிறிஸ்தோபர் வைல் தகவல் தெரிவித்துள்ளார். அந்த நிறுவனத்தில் வேலை பார்க்கும் பேராசிரியர் ஒருவர்தான் இந்த தகவல்களை நூதனமாக ரஷ்யா கொண்டு சென்றார் என்று இவர் கூறியுள்ளார்.
கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா நிறுவனம் 50 மில்லியன் பேஸ்புக் பயனாளர்களின் கணக்கில் இருக்கும் தகவல்களை முறையின்றி சோதனை செய்து திருடியது சர்ச்சையை உருவாக்கியது. பேஸ்புக் நிறுவனம் அதன் பயனாளிகளிடம் எந்த அனுமதியும் கேட்காமலே இந்த சோதனைக்கு அனுமதி வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்த முறைகேட்டை பிரபல சேனல் 4 தொலைக்காட்சிதான் கண்டுபிடித்தது. அவர்கள் நடத்திய ஸ்டிங் ஆபரேஷன் மூலம் கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா நிறுவனம் பேஸ்புக்கில் மக்களின் தகவல்களை திருடியது கண்டுபிடிக்கப்பட்டது.

எவ்வளவு
உலகம் முழுக்க பலரின் தகவல்கள் திருடப்பட்டது போலவே இந்தியாவிலும் தகவல்கள் திருடப்பட்டு இருக்கிறது. மொத்தமாக இந்தியாவில் உள்ள 5.6 லட்சம் மக்களின் பேஸ்புக் தகவல்கள் திருடப்பட்டுள்ளது. வெறும் 335 பேஸ்புக் கணக்குளை ஆராய்ந்ததன் மூலம் இவ்வளவு மக்களின் தகவல்கள் திருடப்பட்டு இருக்கிறது.

பல நாடுகள்
இந்த திருடப்பட்ட தகவல்கள் எல்லாம் உலகில் பல்வேறு நாடுகளில் பாதுகாப்பாக பதுக்கி வைக்கப்பட்டு இருக்கிறது. இனி பேஸ்புக்கில் இருக்கும் மக்கள் தங்களது பேஸ்புக் ஐடிக்களை டெலிட் செய்தால் கூட இந்த திருடப்பட்ட தகவல்களை திரும்ப பெற முடியாது என்கிறார் கிறிஸ்தோபர் வைல். இந்த தகவல்களை வெளியே கொண்டு வரவே முடியாது, அது பலரின் கைகளில் இருக்கிறது என்றுள்ளார்.

ரஷ்யாவில் பதுக்கல்
உலகம் முழுக்க திருடப்பட்ட தகவல்களில் 90 சதவிகிதம் தகவல்கள் ரஷ்யாவில் பாதுகாக்கப்பட்டு இருக்கிறது. ரஷ்யாதான் இந்த பேஸ்புக் தகவல் திருட்டிற்கு பிள்ளையார் சுழி போட்டது என்று கூட முன்பே புகார் எழுந்தது. தற்போது கிறிஸ்தோபர் வைத்து இருக்கும் குற்றச்சாட்டு இன்னும் அதிக சந்தேகங்களை உருவாக்கி உள்ளது. இதற்கு பின் ஒரேயொரு பேராசிரியர்தான் இருக்கிறார் என்றும் அவர் கூறியுள்ளார்.

பேராசிரியர்
இதற்கு எல்லாம் பின்புலமாக கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் அலெக்ஸாண்டர் கோஹன் என்ற பேராசியர்தான் காரணம் என்றும் அவர் குற்றச்சாட்டு வைத்துள்ளார். அவர்தான் இந்த திருடப்பட்ட தகவல்களை ஒவ்வொரு முறை ரஷ்யாவிற்கு ஒவ்வொரு பெயரில் சென்று மறைத்து வைத்துள்ளார் என்று கூறியுள்ளார். அவர் இங்கிலாந்திலும் சில தகவல்களை மறைத்து வைத்து இருக்கிறார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications