பிளானே வேற! உக்ரைன் போரால் ரஷ்யா - சீனா உருவாக்கும் "NEW WORLD ORDER".. குண்டை போடும் அமெரிக்கா
மாஸ்கோ: உக்ரைன் போர் மூலம் புதிய உலக ஆர்டர் ஒன்றை உருவாக்கும் முனைப்பில் சீனா - ரஷ்யா இருப்பதாக அமெரிக்கா குற்றஞ்சாட்டி உள்ளது. அமெரிக்காவின் இந்த குற்றச்சாட்டு பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Recommended Video
உலகம் முழுக்க தற்போது அதிக அளவில் வலதுசாரி நாடுகள், கார்ப்பரேட் ஆதரவு கொள்கை கொண்ட நாடுகள்தான் உள்ளன. இரண்டாம் உலகப்போருக்கு பின் ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள் காரணமாக உலகம் முழுக்கவே இது போன்ற நாடுகள்தான் அதிகம் உள்ளன. கம்யூனிச நாடுகள் ரஷ்யா, சீனா, வடகொரியா என்று விரல் விட்டு எண்ணும் அளவிற்கே உள்ளன.
அதிலும் கடந்த 10 வருடங்களில் தீவிர வலதுசாரி தத்துவம், கம்யுனிசத்திற்கு எதிரான தத்துவம் கொண்ட நாடுகள் அதிகரித்து உள்ளன. தற்போது உலக நாடுகள் பலவற்றின் அரசியல் கொள்கையாக இதுவே உள்ளது. உலக நாடுகள் இடையிலான உறவையும் இதுத்தான் தீர்மானிக்கிறது.

வேர்ல்ட் ஆர்டர்
இதைத்தான் "வேர்ல்ட் ஆர்டர்" என்று அழைப்பார்கள். அதாவது உலகில் இருக்கும் கட்டமைப்பு (ஆர்டர்). இந்த நிலையில்தான் சீனா - ரஷ்யா இணைந்து புதிய ஒரு வேர்ல்ட் ஆர்டரை உருவாக்க போவதாக அமெரிக்கா குற்றஞ்சாட்டி உள்ளது. ஒவ்வொரு உலகப்போருக்கு பின்பாகவும் உலக அரசியலில் பெரிய மாற்றம் ஏற்படும் . முதல் உலகப்போர், இரண்டாம் உலகப்போர், பனிப்போர் என்று அனைத்து போருக்கு பின்பாகவும் உலக அரசியல் அடியோடு மாறியது. இப்போது உக்ரைன் போர் மூலம் உலக அரசியலில் மாற்றம் ஏற்படும் என்று அமெரிக்கா குற்றஞ்சாட்டி உள்ளது.

நோ லிமிட்
உக்ரைன் போரில் ரஷ்யாவிற்கு சீனா வெளிப்படையாக ஆதரவு அளித்துள்ளது. அதாவது ரஷ்யாவுடன் சீனா நோ லிமிட் என்ற புதிய உறவு முறையை கையாண்டு வருகிறது. இந்த புதிய உறவு முறை கடந்த மாதம்தான் ரஷ்யா - சீனா இடையே அதிகாரபூர்வமாக ஏற்பட்டது. இதன் அர்த்தம் அனைத்து விதமான பிரச்சனைகளிலும் உடன் இருப்பது. அனைத்து விதமான வளங்களையும் பகிர்ந்து கொள்வது. பிரதிபலன் எதிர்பார்க்காமல் உதவி செய்வது. இரண்டு நாடுகளுக்கு இடையில் ஏற்பட கூடிய மிக உயரிய உறவுதான் இந்த நோ லிமிட் உறவு ஆகும்.. அதாவது லிமிட்டே இல்லாத உறவு.

சீனா - ரஷ்யா
இதுதான் சீனா ரஷ்யா இடையே ஏற்பட்டுள்ளது. உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யா எடுக்கும் அனைத்து முடிவிற்கும் சீனா உடன் இருக்கும். ரஷ்யா மீது பொருளாதார தடை விதிக்கப்பட்டாலும் கூட ரஷ்யாவுடன் சீனா வர்த்தகம் செய்யும், அதோடு உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யா மீது பிற நாடுகள் தாக்கினால் ரஷ்யாவிற்கு ஆதரவாக சீனா குதிக்கும். இதுதான் ரஷ்யா - சீனா இடையில் இப்போது இருக்கும் நெருக்கமான உறவு. சீனா உலகில் மிக முக்கியமான நாடு என்பதால் ரஷ்யாவுடன் மோதுவது சீனாவுடன் மோதுவதற்கு சமம். இதனால்தான் இதுவரை உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யாவை அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தாக்கவில்லை.

உலகப்போர்
ரஷ்யாவை அமெரிக்கா தாக்கும் நிலையில் அது உலகப்போருக்கு கூட வழி வகுக்கும். ஏனென்றால் ரஷ்யாவிற்கு ஆதரவாக சீனா களமிறங்கும். இது தென் சீன கடல் எல்லையில் எதிரொலிக்கும். இதனால் ஆஸ்திரேலுயாவும் களமிறங்கும். இதையடுத்து ஐரோப்பாவும் நேட்டோ நாடுகளுடன் சேர்ந்து தாக்கும். மொத்தத்தில் இது உலகப்போருக்கு வழி வகுக்கும். இதனால் அமெரிக்கா இதுவரை உக்ரைனுக்கு ஆதரவாக படைகளை அனுப்பவில்லை. ஆயுதங்களை மட்டுமே அனுப்பி வருகிறது.

அமெரிக்கா எச்சரிக்கை
இந்த நிலையிலும்தான் உக்ரைன் பிரச்சனை மூலம் சீனா - ரஷ்யா புதிய வேர்ல்ட் ஆர்டரை உருவாக்க முயல்வதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. அதாவது இப்போது இருக்கும் உலக நாடுகளின் உறவுகள், அரசியல் கொள்கைகளை புறந்தள்ளி கம்யூனிச நாடுகளை, கம்யூனிச சக்திகளை சர்வதேச அளவில் கொண்டு செல்லும் வகையிலும், கம்யுனிச வேர்ல்ட் ஆர்டரை உருவாக்கும் திட்டத்தில் ரஷ்யா - சீனா இருப்பதாக அமெரிக்கா தெரிவித்து உள்ளது.

புகார்
அமெரிக்காவின் உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ செய்தி குறிப்பில், ரஷ்யா - சீனா இணைந்து புதிய ஆழமான கம்யூனிச கொள்கை கொண்ட உலக ஆர்டரை உருவாக்க முயல்கிறது. ரஷ்யா - சீனா இணைந்து இதில் பணியாற்றுகிறது. ரஷ்யாவின் உக்ரைன் போர் என்பது இதில் ஒரு பார்ட் மட்டுமே. மேலும் மேலும் இது தொடர வாய்ப்புகள் உள்ளன. புதிய வேர்ல்ட் ஆர்டரை உருவாக்க இரண்டு நாடுகளும் தீவிரம் காட்டுகிறது.

புதிய வேர்ல்ட் ஆர்டர்
தற்போது இருக்கும் அரசியல் கொள்கைகள், உலக நாடுகள் இடையிலான உறவுகள் ஆகியவற்றுக்கு எதிராக புதிய அரசியல் கொள்கையை கொண்டு வரும் வகையில் இரண்டு நாடுகளும் செயல்படுகிறது. இது மக்களை கட்டுப்படுத்தும், அவர்களின் தனி மனித சுதந்திரத்திற்கு எதிரான அரசியல் கொள்கையாக இருக்கும். கடந்த 70-80 வருடங்களாக உலகத்தில் இருக்கும் அரசியல் கொள்கைக்கு எதிரானதாக இது இருக்கும். இது அழிப்பு அரசியல் கொள்கை. உக்ரைன் போர் இதை நோக்கிய பயணத்திற்கு வித்திடும் ஆபத்து உள்ளது என்று அமெரிக்கா குற்றஞ்சாட்டி உள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications