இந்தியா பக்கம் திரும்பிய ரஷ்யா? புதின் போட்ட மாஸ்டர் பிளான்! லிஸ்ட்லயே இல்லையே! அப்படி என்ன செய்தார்

Subscribe to Oneindia Tamil

மாஸ்கோ: உக்ரைன் போரால் விதிக்கப்பட்ட பொருளாதார தடைகளால் ரஷ்யாவுக்கு ராணுவ உதிரி பாகங்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ள நிலையில், இதை தவிர்க்க புதின் புதிய திட்டம் ஒன்றை போட்டுள்ளார்.

இந்தியாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே நீண்ட காலமாகவே நல்ல உறவு இருந்து வந்துள்ளது. மேற்குலக நாடுகள் நம்முடன் நெருக்கம் காட்டுவதற்கு முன்பு இருந்தே, நமது நட்பு நாடுகளில் ஒன்றாக ரஷ்யா இருந்துள்ளது.

How Russia is evading sanctions by buying back military supplies

இப்போதும் கூட நமது ராணுவத்தில் இருக்கும் பல ஆயுதங்கள் ரஷ்யாவிடம் இருந்து இறக்குமதி செய்ததுதான். கடந்த காலங்களில் இந்தியாவுக்கு இக்கட்டான சூழல் வந்த போதெல்லாம் ரஷ்யா நம்முடன் நின்றுள்ளது. அதேபோலத் தான் உக்ரைன் போர் விவகாரத்தில் இந்தியா நடுநிலை நிலைப்பாட்டை எடுத்தது.

Recommended Video

    Ukraine-ன் Mega Dam-ஐ Russia உடைத்ததா? | Cessna -வை துரத்திய F16 | Indian Navy | Indian Army Power

    ரஷ்யா: இந்தச் சூழலில் தான் மியான்மார் மற்றும் இந்தியாவிற்கு முன்பு அனுப்பிய ராணுவ ஆயுதங்களை ரஷ்யா திரும்பப் பெற உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த இரு நாடுகளுக்கும் முன்பு ஏற்றுமதி செய்யப்பட்ட டாங்கிகள் மற்றும் ஏவுகணைகளின் உதிரிப் பாகங்களை ரஷ்யா திரும்ப வாங்கியதற்கான ஆவணம் உள்ளதாகச் சர்வதேச ஊடகமான இன்டிபென்டென்ட் தெரிவித்துள்ளது.. இவை உக்ரைன் போரில் பயன்படுத்தப்படும் பழைய ஆயுதங்களைப் பழுது பார்க்க உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    கடந்த ஆண்டு ஆகஸ்ட், நவம்பர் மாதங்களில் ரஷ்யாவின் ஏவுகணை உற்பத்தியைக் கவனிக்கும் மெஷின்-பில்டிங் டிசைன் பீரோ (NPK KBM) என்ற அமைப்பு இந்தியாவிடம் இருந்து தரையில் இருந்து ஏவப்படும் ஏவுகணைகளின் நைட் விஷனை $150,000க்கு (£120,757)வாங்கியுள்ளது. இந்திய பாதுகாப்பு அமைச்சகத்துடன் இதற்கான ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. அதன் கஸ்டம் க்ளியரன்ஸ்களும் ஆயுதங்கள் ரஷ்யாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டதைக் காட்டுகிறது.

    இது மட்டுமின்றி டாங்கிகள் மற்றும் ஏவுகணைகள் போன்ற ஆயுதங்களின் உதிரிப்பாகங்களையும் ரஷ்யா மீண்டும் வாங்கியதற்கான ஆவணங்களும் உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. உக்ரைன் போரில் பயன்படுத்தப்படும் ஆயுதங்களைப் பழுது பார்க்கவே இந்த ஆவணங்களை ரஷ்யா வாங்கியுள்ளது. இருப்பினும், கடந்த மார்ச் மாதம் வரை இந்த ஆயுதங்களை ரஷ்யா திரும்பித் தரவில்லை என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

    இந்தியா: அதேபோல மியான்மர் நாட்டில் இருந்து கடந்த ஆண்டு 24 மில்லியன் டாலருக்கு ரஷ்யாவின் ராணுவ உதிரிப் பாகங்களை மீண்டும் வாங்கியுள்ளது. 6,775 டெலஸ்கோப், 200 கேமராக்களை ரஷ்யா இப்படித் திரும்பப் பெற்றுள்ளது.

    இதற்கு முன்பு வரை டெலஸ்கோப் போன்றவற்றில் மேற்குலக தொழில்நுட்பத்தையே ரஷ்யா பயன்படுத்தி வந்தது. இப்போது பொருளாதாரத் தடைகளால் அதற்கு வாய்ப்பில்லாமல் போக, மீண்டும் தனது கருவிகளையே வாங்கும் சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளது.

    ஜெலன்ஸ்கி: இந்த விவகாரம் குறித்து உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ஏற்கனவே பேசியிருந்தார். எந்தவொரு நாட்டின் பெயரையும் வெளிப்படையாகக் குறிப்பிடாமல் ஜெலன்ஸ்கி, "பொருளாதாரத் தடைகளில் இருந்து தப்பிக்கும் நடவடிக்கைகளில் ரஷ்யா இறங்கியுள்ளது. ரஷ்யா எப்படி பொருளாதாரத் தடைகளை மீறுகிறது.. அதற்கு யார் உதவுகிறார்கள் என்பதை நாங்கள் ஆய்வு செய்துள்ளோம்.

    வெவ்வேறு நாடுகள், வெவ்வேறு நிறுவனங்களிடம் இருந்தே ரஷ்யா ஏவுகணைகள் போன்ற ஆயுதங்களை வாங்குகிறது. இதன் மூலம் பொருளாதாரத் தடைகளை மீறியும் அதிநவீன தொழில்நுட்பங்கள் ரஷ்யா கைகளுக்குச் சென்றுவிடுகிறது. ரஷ்யாவுக்கு ஆயுதங்கள் சென்று சேராமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+