தமிழ்நாடு சைஸ் கூட இல்ல.. ரஷ்யா கண்ணில் விரலை விட்டு ஆட்டும் உக்ரைன்! எப்படி சாத்தியம்?
கீவ்: நிலப்பரப்பிலும் சரி, மக்கள் தொகை எண்ணிக்கையிலும் சரி தமிழ்நாடு அளவில் கூட உக்ரைன் கிடையாது. இருப்பினும், உலகின் மிகப்பெரிய நாடான ரஷ்யாவின் கண்ணில் விரலை விட்டு ஆட்டி வருகிறது. இது எப்படி சாத்தியம்? உக்ரைனால் எப்படி இது முடிந்தது? உக்ரைன் பின்னால் இருப்பவர்கள் யார் என்பது குறித்து இந்த செய்தி தொகுப்பு விவரிக்கிறது.
அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் நிதி உதவிதான் உக்ரைனின் பலத்திற்கு காரணம். கடந்த 2022ம் ஆண்டு போர் தொடங்கியது. அன்று முதல் இன்றுவரை உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் வழங்கிய மொத்த உதவி 430 பில்லியன் அமெரிக்க டாலர்களாகும். இதில் அமெரிக்கா மட்டும் 128 பில்லியன் டாலர்களை வழங்கியிருக்கிறது. இந்த தொகையில் 71 பில்லியன் ராணுவ உதவிக்காக மட்டுமே வழங்கப்பட்டிருக்கிறது. ஐரோப்பிய யூனியன் சார்பில் 124 பில்லியன் டாலர்கள் வழங்கப்பட்டிருக்கின்றன.

110 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியா, தனது ராணுவத்துக்கு 78.57 பில்லியன் டாலர் என்கிற அளவில்தான் நிதியை ஒதுக்கியுள்ளது. அதைவிட உக்ரைனுக்கு அமெரிக்காவும், ஐரோப்பிய யூனியனும் செய்த உதவி பலமடங்கு பெரியது.
இதனால் உக்ரைன் தனிசிறப்புமிக்க ஆயுதங்களை கொண்டிருக்கிறது. குறிப்பாக,
FPV ட்ரோன்கள்
Neptune ஏவுகணை
Peklo ட்ரோன் ஏவுகணை
Ruta ஏவுகணை
Tryzub லேசர் பாதுகாப்பு
ATACMS ஏவுகணை
Storm Shadow / Scalp ஏவுகணை
Leopard 2 டாங்குகள்
HIMARS ராக்கெட் அமைப்பு
F-16 போர் விமானங்கள்
இதைக்கொண்டுதான் ரஷ்யாவை நிலைகுலைய செய்து வருகிறது. இந்த லிஸ்ட்டில் முதல் இடத்தில் இருக்கும் FPV ட்ரோன்கள், சமீபத்தில் ரஷ்யாவுக்குள் 4000 கி.மீ உள்ளே புகுந்து 4 விமானப்படை தளங்களை தாக்கி அழித்தது. இந்த வகை ட்ரோன்கள் உக்ரைன் தயாரிப்புகளாக இருந்தாலும், மற்றவை அமெரிக்க, ஐரோப்பிய தயாரிப்புகளாக இருக்கின்றன.
உதாரணத்திற்கு அமெரிக்க தயாரிப்பான ATACMS ஏவுகணையை எடுத்துக்கொள்வோம். 300 கிமீ தொலைவில் உள்ள இலக்கை கூட இது அசால்ட்டாக தாக்கும். ரேடாரில் மறைந்து செல்லும் திறன்தான் இதன் ப்ளஸ் பாயிண்ட். துல்லியமான தாக்குதல், நீண்ட தூரம் உள்ள ரஷ்ய இலக்குகளை தாக்க சிறப்பாக வடிவமைக்கப்பட்டிபருப்பதால், இது கணிசமான அளவுக்கு சேதத்தை ஏற்படுத்தும்.
Storm Shadow / Scalp ஏவுகணை பிரிட்டன் மற்றும் பிரான்ஸால் தயாரிக்கப்பட்டதாகும். கடினமான இலக்குகளை தாக்கும் திறன் கொண்ட இது, ரஷ்ய விமானத் தளங்களை அழிக்க பயன்படுகிறது. 250 கி.மீ இலக்குகளை அசால்ட்டாக தாக்கும்.
Leopard 2 டாங்குகளை ஜெர்மனி கொடுத்திருக்கிறது. இந்த உலகத்தில் மிகவும் தனிச்சிறப்பு வாய்ந்த டாங்குகளில் எது என்று ஒரு பட்டியல் எடுத்தால், முதல் 5 இடங்களில் இந்த டாங்குகள் இருக்கும். அந்த அளவுக்கு சக்தி வாய்ந்தது. உயர் பாதுகாப்பு, வேகமான இயக்கம், துல்லியமான தாக்குதல் ஆகியவை இதன் சிறப்பம்சமாகும்.
F-16 போர் விமானங்களை பற்றி உலகம் முழுவதும் தெரிந்திருக்கும். அமெரிக்க தயாரிப்பான இது, விமான எதிர்ப்பு, நீண்ட தூர தாக்குதல், ரஷ்ய ஏவுகணைகளை அழிக்க பயன்படுகிறது.
ஆக இதெல்லாம் சேர்ந்துதான் ரஷ்யாவை நிலைகுலைய வைத்திருக்கின்றன. உக்ரைனின் வெற்றிக்கு பின்னால் இவ்வளவு காரணங்கள் இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications