Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

உக்ரைனை அசிங்கப்படுத்திய அமெரிக்கா.. இதனால் இந்தியாவிற்கும் இவ்வளவு பெரிய சிக்கல் இருக்கா? போச்சு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: உக்ரைன் அமெரிக்கா இடையிலான மோதல்.. வெளிப்படையாக பார்க்க இரண்டு நாட்டு மோதலாக இருக்கலாம். ஆனால் உண்மையில் இது வெறும் இரண்டு நாட்டு மோதல் இல்லை. ஏனென்றால்.. அமெரிக்காவின் இந்த மெத்தனப்போக்கு அமெரிக்காவின் மற்ற நட்பு நாடுகளையும் பாதிக்கும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி - அமெரிக்க அதிபர் டிரம்ப் இரண்டு நாட்களுக்கு முன்பு சந்திப்பு நடத்தினர். இந்த சந்திப்பு இருவருக்கும் இடையில் கடுமையான மோதலில் முடிந்தது.

donald trump vladimir putin ukraine russia war

அமெரிக்க துணை அதிபர் ஜேடி வான்சை நோக்கி உக்ரைன் அதிபர் கேள்விகளை வைத்ததே இந்த சண்டைக்கு காரணம் ஆகும். நேற்று வான்ஸ் பேசுகையில், அமெரிக்க ராஜாங்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. போரை நிறுத்துவதற்காக ரஷ்யா உடன் ராஜதந்திர முறையில் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகிறது. உங்களின் செயல்பாடு.. உங்களின் நாட்டிற்கே அழிவை ஏற்படுத்தி விடும்.. உங்களின் நிலைப்பாடு உங்களின் நாட்டை அழித்துவிடும், என்றார்.

இதை கேட்டு கோபப்பட்ட ஜெலன்ஸ்கி, ரஷ்யாவை நீங்கள் தடுக்கவே இல்லையே.. ரஷ்யா 2019ல் இருந்தே போரை மேற்கொண்டு வருகிறது. அவரை நீங்கள் தடுக்கவே இல்லை. நீங்கள் எதை ராஜாங்க செயல்பாடு.. ராஜதந்திர செயல்பாடு என்று சொல்கிறீர்கள்? போர் என்றால் சிக்கல்தான்.. உங்களுக்கும் ரஷ்யாவிற்கும் இடையே கடல் இருக்கிறது என்பதால் உங்களுக்கு ஆபத்து இல்லை என்று நினைக்க வேண்டாம். எதிர்காலத்தில் ரஷ்யாவால் உங்களுக்கும் ஆபத்து வரும், என்றார்.

இதற்கு பதிலடி தந்த அதிபர் டிரம்ப் - உக்ரைன் நல்ல நிலைமையில் இல்லை.. நீங்கள் மிக மோசமான சூழலில் உள்ளீர்கள். உங்களுக்கு சாதகமாக எதுவும் இல்லை. இதற்கு எல்லாம் காரணம் நீங்கள்தான். உக்ரைன் மோசமான சூழலுக்கு மாற அனுமதித்து நீங்கள்தான்.. இந்த மோசமான சூழலில் உங்களுக்கு சாதகமான அம்சங்கள் இல்லை, நீங்கள் பல கோடி மக்களின் உயிரோடு விளையாடிக்கொண்டு இருக்கிறீர்கள் என்றார்.

இதற்கு கோபமாக பதில் சொன்ன ஜெலன்ஸ்கி, நீங்கள் இரண்டு நாட்டு போரை பற்றி சத்தமாக இப்படி மீடியா முன் பேசுவது சரியா என்று பார்த்துக்கொள்ளுங்கள். நாங்கள் விளையாடவில்லை.. இந்த போரை நாங்கள் தனியாக எதிர்கொண்டு வருகிறோம்.. நாங்கள் தனித்துவிடப்பட்டு உள்ளோம்.. அதற்கு நன்றி என்றுள்ளார்.

டிரம்ப் - அப்படி எல்லாம் பேசாதீர்கள்.. நீங்கள் தனியாக இல்லை.. நீங்கள் தனியாக இருந்தால் கதையே வேறு. அமெரிக்கா உதவி இருக்கிறது உங்களுக்கு. முன்னாள் பதவியில் இருந்த முட்டாள் பிரதமர் உங்களுக்கு 350 பில்லியன் டாலர் தந்திருக்கிறார் என்பதை மறக்க வேண்டாம். வான்ஸ் சத்தமாக பேசவில்லை. நாங்கள் இருப்பதால் எதோ உங்கள் நாடு இருக்கிறது. இல்லையென்றால் இந்த போரில் நீங்கள் இன்னும் மோசமாக சிக்கி இருப்பீர்கள். உங்களுக்கு இந்த போரில் வெல்லும் வாய்ப்பே இல்லை.. நீங்கள் 3ம் உலகப்போரை வைத்து விளையாடிக்கொண்டு இருக்கிறீர்கள்.. டீல் செய்ய விருப்பம் இருந்தால் அடுத்த முறை இங்கே வாருங்கள்.. என்று கூறினார்.

அமெரிக்கா மெத்தனம்:

உக்ரைன் உடனான இந்த சண்டை மற்ற நாடுகளையும் பாதிக்கும். அமெரிக்காவின் இந்த மெத்தனப்போக்கு அமெரிக்காவின் மற்ற நட்பு நாடுகளையும் பாதிக்கும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

1. உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்த போரை டிரம்ப் கண்டிக்க விரும்பவில்லை. அதோடு உக்ரைனுக்கு அமெரிக்கா உதவ விரும்பவில்லை. இதன் அர்த்தம் உலக அரசியலில் அமெரிக்கா தலையிட விரும்பவில்லை.

2. அதாவது மற்ற உலகப்போர்கள்.. மோதல்கள், சண்டைகளில் அமெரிக்கா தலையிட விரும்பவில்லை. இது இந்தியா - சீனா இடையிலான மோதலில் எதிரொலிக்கும்.

3. அதாவது முன்பு இந்தியா மீது சீனா போர் தொடுத்தால் லடாக்கில், அருணாச்சலப்பிரதேசத்தில் சீனா தாக்கினால்.. அமெரிக்கா வந்து இந்தியாவிற்கு உதவும் என்று நம்பலாம். ஆனால் இனி அப்படி இல்லை. இது புதிய அமெரிக்கா.. இந்த அமெரிக்கா உலக சண்டைகளில் தலையிட விரும்பவில்லை. இதனால் இந்தியாவிற்கு ராஜதந்திர.. போர் தந்திர ஆதரவுகள் இல்லை.

4. அமெரிக்கா இனி ராணுவ செலவுகளை கைவிட்டுவிட்டு.. மற்ற பொருளாதார ரீதியிலான நடவடிக்கைகளில் கவனம் செலுத்த தொடங்கி விட்டது. இதனால் இந்தியாவிற்கு ராஜாங்க ரீதியாக பார்ட்னராக இருக்கும் அமெரிக்கா.. இந்தியாவிற்கு இனி கூடுதல் முக்கியத்துவம் தர வாய்ப்புகள் குறைவு.

5. ரஷ்யாவுடன் இந்தியாவிற்கு இருந்த நெருக்கத்தால் இந்தியா உடன் அமெரிக்கா நட்பாக பழகி.. இந்தியாவை பயன்படுத்திக்கொண்டது. உதாரணமாக ரஷ்யாவிடம் இந்தியா வாங்கும் கச்சா எண்ணெய்யை இந்தியாவிடம் அமெரிக்கா வாங்கியது. இனி இந்தியாவின் இந்த தயவு அமெரிக்காவிற்கு தேவை இல்லை. ஏனென்றால் ரஷ்யாவுடன் அமெரிக்காவே நெருக்கமாகிவிட்டது.

6. அமெரிக்காவிற்கு ஆதரவாக இருந்த.. அமெரிக்காவுடன் அணியில் சேர முயன்ற உக்ரைன் நாட்டையே அமெரிக்கா அசிங்கப்படுத்திவிட்டது. அப்படி இருக்க.. அணி சேரா இந்தியாவை அமெரிக்கா மதிக்குமா?

7. USAID போன்ற நிதியை நிறுத்துவதால் அமெரிக்கா நேரடியாகவும், மறைமுகமாகவும் இந்தியாவிற்கு பிரச்சனைகளை, சிக்கல்களை ஏற்படுத்தும் வாய்ப்புகள் உள்ளன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+