"டச் பண்ணாதீங்க"..பெண்கள் மீது "கை" வைத்தால் உடனடியாக "ஆண்மை விதை நீக்கம்".. வந்தாச்சு சபாஷ் தண்டனை
மடகாஸ்கர்: பாலியல் குற்றங்களை தடுப்பதற்காக, மடகாஸ்கரில் கொண்டுவரப்பட்டுள்ள தண்டனை சட்டமானது, உலகளாவிய விமர்சனங்களை பெற்று வருகிறது.
சமீபத்தில் அமெரிக்காவில் தரப்பட்ட ஒரு மரண தண்டனை, உலகளாவிய விவாதத்தை கிளப்பியது.. 58 வயது ஸ்மித் என்ற கொலைக் குற்றவாளிக்கு மரண தண்டனையை ஊசி வழியே நிறைவேற்ற முடிவானது. ஆனால், விஷ ஊசி போடுவதற்கான நரம்பை அவரிடம் கண்டுபிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டது.

நைட்ரஜன்: அதனால், நைட்ரஜன் வாயுவை மூக்கில் செலுத்தி தண்டனையை நிறைவேற்றும் உத்தரவை அமெரிக்க சுப்ரீம்கோர்ட் பிறப்பித்தது. அதன்படி அமெரிக்காவில், முதன்முறையாக இந்த முறைப்படி மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
சிறையில் உள்ள ரூம் ஒன்றில், ஸ்மித்தை படுக்கையில் படுக்க வைத்து, அவரது கை, கால்களை கட்டினார்கள். முகத்தில் மாஸ்க் போடப்பட்டு, மூக்கில் மட்டும் சுவாசக்குழாய் இணைக்கப்பட்டது...
மூச்சு காற்றுக்கு பதிலாக, தூய்மையான நைட்ரஜன் அந்த சுவாசக்குழாயில் செலுத்தப்பட்டது. அப்போது ஸ்மித்தின் மனைவி மரண தண்டனையின்போது அனுமதிக்கப்பட்டார். உயிரிழக்கும் முன்பு, கடைசியாக மனைவியை பார்த்து "ஐ லவ் யூ" என்றார் ஸ்மித்.. மொத்தமாக 22 நிமிடங்களில், ஸ்மித்தின் மூச்சு அடங்கியது..
கண்டனங்கள்: இந்த தண்டனை பல்வேறு விமர்சனங்களும், கண்டனங்களும் கிளம்பியது. தேவையில்லாத முயற்சியை அமெரிக்கா தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளும் வலுத்துள்ளன.
ஆனால், அலபாமா மாகாணம் இந்த மரண தண்டனை முறையை நியாயப்படுத்துகிறது. இதற்கு காரணம், இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட மரண தண்டனை முறைகளில் இதுதான் மிகவும் மனிதாபிமான முறையில் இருப்பதாக கூறுகிறது.. ஆனால், இதைக்கேள்விப்பட்டு கொதிக்கிறார்கள் தன்னார்வலர்கள். இது கொலைக்கு சமம் என்று ஐ.நா. கொந்தளித்தது. இது ஒரு கொடூரமான பரிசோதனை முயற்சி என்று உலக நாடுகள் சீறின.
ஆவேசம்: இந்த தண்டனையின் விவாதம் இன்னும் அடங்குவதற்குள், இன்னொரு தண்டனை பேசுபொருளாகி உள்ளது. குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபட்டால் அவர்களது "ஆண்மை நீக்கம்" செய்யப்படுவதாக மடகாஸ்கர் நாடு அதிரடியாக சட்டம் ஒன்றை இயற்றியுள்ளது.
இந்த சட்டத்தின்படி 10 வயதுக்குட்பட்ட குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்யும் குற்றவாளிகளுக்கு, ஆபரேஷன் மூலம் காஸ்ட்ரேஷன் செய்யப்படும்.. 10 முதல் 13 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை செய்தால், அறுவை சிகிச்சை அல்லது கெமிக்கல் மூலம் காஸ்ட்ரேஷன் செய்யப்படும்.. 14 முதல் 17 வயதுக்குட்பட்ட சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்பவர்களுக்கு கெமிக்கல் காஸ்ட்ரேஷன் செய்யப்படும்.
தண்டனைகள்: காஸ்ட்ரேஷன் சிகிச்சை இரண்டு முறைகளில் செய்யப்படுகிறது. ஒன்று ரசாயன முறை, மற்றொன்று அறுவை சிகிச்சை முறை. அறுவை சிகிச்சை முறையில் நிரந்தரமாக விதைப்பைகள் (testicles) இரண்டுமே அகற்றப்படும்.
ஆபரேஷன் செய்து, விதைகள் அகற்றப்படுவதால், ஆண்மைக்கான டெஸ்டோஸ்டிரோன் எனப்படும் ஹார்மோன் சுரப்பு நிரந்தரமாக நீக்கப்பட்டுவிடும். இழந்த ஆண்மையை மீட்கவே முடியாது... கெமிக்கல் காஸ்ட்ரேஷன் முறைப்படி, பாலியல் ஆசையை குறைக்கும் மருந்துகளை பயன்படுத்தி, ஹார்மோன் சுரப்பை தடுப்பதாகும். ஆனால், இந்த மருந்துகளை நிறுத்திவிட்டாலோ அல்லது மாற்று மருந்துகளை பயன்படுத்தினாலோ, இதிலிருந்து மீண்டுவிடலாம்.
ஆண்மை நீக்கம்: கெமிக்கல் காஸ்ட்ரேஷன் என்பது ஆண்மை நீக்கம் செய்வதில் ஒருவகையாகும்.. ஆபரேஷன் செய்துவிட்டால், ஆண்மை நீக்க நடவடிக்கையை மறுபடியும் சரி செய்யவே முடியாது. இந்த தண்டனையைத்தான் இப்போது மடகாஸ்கர் அரசு கொண்டு வந்துள்ளது.
உலகம் முழுவதுமே பெண்களுக்கு எதிரான வன்முறைகளும், பெண்கள் மீதான தாக்குதல்களும் அதிகரித்தபடியே வருகின்றன.. இதில், பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு என்பதே இல்லாமல் போய்விட்டது. பாலியல் இன்னலுக்குள் ஏராளமான பெண் குழந்தைகள் சிக்கி வருவதுடன், பாலியல் தொடர்பான குற்றங்களும் அதிகரித்தபடியே வருகின்றன. இதை தடுக்க ஒவ்வொரு நாடுகளிலும், ஒவ்வொரு விழிப்புணர்களும், சட்டதிட்டங்களும் கொண்டுவரப்படுகின்றன.
போக்சோ சட்டம்: எனினும், போதுமான தீர்வு கிடைக்கவில்லை. நம்ம ஊரிலும் போக்சோ சட்டம் இருக்கிறது.. இதன்மூலம் குற்றங்கள் ஓரளவு குறைகிறது என்றாலும், முழுமையாக பெண் குழந்தைகளை காப்பாற்ற முடிவதில்லை.. போக்சோ சட்டப்படி தரப்படும் குற்றங்களும், கடுமையாக இல்லை என்றே தெரிகிறது.
அந்தவகையில், கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள மடகாஸ்கர் தீவில் , பாலியல் குற்றங்கள் அதிகரித்தபடியே வந்துள்ளது.. கடந்த வருடம் மட்டும் 600 குழந்தைகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியிருக்கிறார்களாம். இந்த ஜனவரி மாசம் மட்டும் 133 பாலியல் கேஸ்கள் பதிவாகியிருக்கின்றன. அதனால்தான், குற்றவாளிகளுக்கு கொடுமையான தண்டனை கொடுத்தே ஆக வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்தன. இதையடுத்துதான், குற்றவாளிகளின் ஆண்மையை பறிக்கும் சட்டம் இயற்றப்பட்டுள்ளது.
நடவடிக்கை: குழந்தைகளை பாதுகாக்கவே இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக மடகாஸ்கர் அரசு அறிவித்துள்ளது பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. எத்தனையோ சட்டங்களை போட்டும் திருந்தாத காமுகர்களுக்கு, இந்த தண்டனை மிகச்சரியானது என்றும், தங்கள் நாடுகளிலும் இதுபோலவே சட்டத்தை இயற்ற வேண்டும் என்றும பலரும் கோரிக்கை விடுக்க துவங்கி உள்ளனர்.
எனினும் இந்த தண்டனை முறைக்கு கண்டனங்களும் பரவலாக எழுந்துள்ளன.. அம்னெஸ்டி இன்டர்நேஷனல் என்ற அமைப்பானது, "காஸ்ட்ரேஷன் தண்டனை முறை ஒரு நாட்டின் அரசியலமைப்பு சட்டங்களுக்கு முரணானது. மனிதாபிமானமற்றது.. இழிவானது என்று கண்டித்துள்ளது.
வரவேற்பு: உலகில் உள்ள பல நாடுகள், சில அமெரிக்க மாநிலங்களில், சில பாலியல் குற்றவாளிகளுக்கு ரசாயன காஸ்ட்ரேஷன் தண்டனை வழங்கப்படுகிறது... ஆனாலும் அறுவை சிகிச்சை காஸ்ட்ரேஷன் என்பது அரிதானது. ஆனால், இந்த இரண்டையும் செய்வது மிகவும் சர்ச்சைக்குரியதாகும்.
மொத்தத்தில், சமீபகாலமாகவே உலக நாடுகளில் தரப்பட்டு வரும் தண்டனைகளானது, மிகப்பெரிய தாக்கங்களையும், அது தொடர்பான விவாதங்களையும் ஏற்படுத்தி கொண்டிருக்கிறது..!!












Click it and Unblock the Notifications