ஒரு பள்ளம் விழுந்துடக் கூடாதே.. உடனே 'செல்பி'..!
லண்டன்: இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரில் முக்கிய சாலை ஒன்றில் திடீரென ராட்சத பள்ளம் ஒன்று ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த மக்கள் செல்பி எடுக்க அங்கு பெருமளவில் செல்வதால் அப்பகுதியில் கூட்டம் அலைமோதுகிறது.
மக்களின் செல்பி மோகம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அழகிய பொருள் என்றில்லை, சமயங்களில் சடலங்களுடன் செல்பி எடுத்து நெட்டிசன்கள் பரபரப்பை ஏற்படுத்தி விடுகின்றனர். இவ்வாறு செல்பி எடுப்பது ஒரு வித மனநோய் என மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
இந்நிலையில், இங்கிலாந்தில் சாலையொன்றில் செல்பி எடுக்க மக்கள் குவிந்து வருகின்றனர். இதனால் அப்பகுதி சுற்றுலாத் தளம் போல மக்கள் வெள்ளத்தால் நிரம்பி வழிகிறது.

திடீர் பள்ளம்...
கடந்த வெள்ளிக்கிழமை இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரில் சாலையில் திடீரென ராட்சத பள்ளம் ஒன்று உருவானது. மழையைத் தொடர்ந்து இந்த பள்ளம் ஏற்பட்டுள்ளது.
|
செல்பி புள்ள...
ஆனால் இது குறித்து தகவல் பரவிய சிறிது நேரத்திலேயே அந்த திடீர் பள்ளத்தின் அருகே செல்பி எடுக்க மக்கள் குவியத் தொடங்கி விட்டனர். திடீர் பள்ளத்தின் அருகே செல்பி எடுத்துக் கொண்டவர்கள் அதனை தங்களது சமூக வலைதளப் பக்கங்களிலும் பகிரத் தொடங்கினர்.
|
சுற்றுலா தளமானது...
இதனைக் கண்ட மற்றவர்களும், தாங்களும் அங்கு சென்று செல்பி எடுக்க ஆர்வம் காட்டுவதால், அப்பகுதியே விழாக்கோலம் பூண்டுள்ளது.
|
மீம்ஸ்...
இது ஒருபுறம் என்றால், இந்தப் பள்ளத்தில் பிரபலங்கள் பலர் அந்த ராட்சத பள்ளத்திற்குள் விழுவது போன்ற மீம்ஸ்களும் சமூக வலைதளங்களில் பரபரப்பாக உலா வந்து கொண்டிருக்கிறது.
|
சரி செய்யும் பணிகள்...
இவ்வாறு நெட்டிசன்கள் செய்யும் அலம்பலைத் தாங்க முடியாமல், விரைந்து ராட்சத பள்ளத்தை சரி செய்யும் பணிகள் துரிதப் படுத்தப் பட்டுள்ளன. இந்த வார இறுதிக்குள் அந்த பணிகள் முடிவடைந்து விடும் என்று மான்செஸ்டர் நகர செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications
