தேசிய பாடத் திட்டத்தில் தமிழ் மொழியை சேர்க்க வேண்டும்.. ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் எழுந்த குரல்!
கான்பெரா: உலகில் சுமார் 70 மில்லியன் மக்களால் பேசப்பட்டு வரும், உலகின் பழைமையான தமிழ் மொழியை ஆஸ்திரேலிய நாட்டின் பாடத் திட்டத்தில் சேர்க்க பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார் ஆஸ்திரேலிய நாடாளுமன்ற உறுப்பினர் ஹக் மெக்டோர்மோட்.
ஆஸ்திரேலிய கல்வி அமைச்சர், செனடர் சிம்மன் பர்மீங்ஹாமிடம் எழுத்துப் பூர்வ கோரிக்கைகளை ஹக் மெக்டோர்மோட் முன் வைத்துள்ளார்.

தமிழர்கள் கணிசமாக வாழும் வெட்வோர்த்வில்லே பகுதியிலிருந்து, நாடாளுமன்ற உறுப்பினரானவர், ஹக் மெக்டோர்மோட். வெட்வோர்த்வில்லேவில் உள்ள தமிழ் படிக்கும் மையத்தில் சனிக்கிழமைதோறும் சுமார் 650 மாணவர்கள் படித்து வருகின்றனர். கிர்ராவீன் பள்ளியில் வைத்து இந்த பாட வகுப்புகள் வாரந்தோறும் நடைபெற்று வருகிறது.
தமிழ் மொழியானது வர்த்தகம் மற்றும் பொருளாதாரத்தில் இந்தியா மற்றும் இலங்கை, ஆஸ்திரேலியாவுக்கு முக்கியத்துவமானது என்று ஹக் மெக்டோர்மோட் இந்த வாரம் நடைபெற்ற ஆஸ்திரேலிய நாடாளுமன்ற கூட்டத்தில் உரையாற்றியிருந்தார்.
"தமிழகம், பொருளாதாரத்தில் வேகமாக வளர்ந்து வரும் ஒரு மாநிலம். சர்வதேச முதலீடு மற்றும் வர்த்தகத்திற்கு, தமிழ் மொழி அவசியம். காமன்வெல்த் அரசுகள், மாகாணங்கள், இதற்கான உதவிகளை செய்ய வேண்டும். ஆஸ்திரேலிய இளைஞர்களுக்கு தமிழ் படித்து கொடுப்பதன் மூலம், தமிழர்களின் நீண்ட பெரும் பண்பாட்டையும், கலாசாரத்தையும் அனுபவிக்க முடியும். தமிழ் ஒரு மொழி மட்டுமல்ல, அது ஒரு செழுமைமிக்க கலாசாரம்" என்று, ஹக் மெக்டோர்மோட் நாடாளுமன்றத்தில் பேசியுள்ளார்.
தமிழின் அருமையை உணர்ந்து, எப்படியாவது தேசிய பாடத்திட்டத்தில் தமிழை சேர்த்துவிட வேண்டும் என்று ஹக் மெக்டோர்மோட் தொடர்ந்து முயன்றுவருவதாக ஆஸ்திரேலிய தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications