அலைமோதிய அகதிகள் கூட்டத்தால் மூடிய செர்பியாவுடனான எல்லையை மீண்டும் திறந்த ஹங்கேரி
பெல்கிரேட்: அகதிகள் அலை அலையாக வந்ததால் செர்பியாவுடனான எல்லையை ஹங்கேரி கடந்த திங்கட்கிழமை மூடியது. இந்நிலையில் எல்லையை மீண்டும் திறந்து வைத்துள்ளது.
சிரியா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்தவர்கள் ஏராளமானோர் ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாக வருகின்றனர். சிரியாவில் இருந்து வரும் அகதிகள் ஹங்கேரிக்கு அதிக அளவில் வருகிறார்கள். ஹங்கேரி வழியாக பிற நாடுகளுக்கு செல்கின்றனர்.

அகதிகள் அளவுக்கு அதிகமாக வருவதால் அவர்களை சமாளிக்க முடியாமல் ஹங்கேரி அதிகாரிகள் திணறினர். இதையடுத்து செர்பியாவுடனான தனது எல்லையை ஹங்கேரி கடந்த திங்கட்கிழமை மூடியது.
இந்நிலையில் எல்லையை ஞாயிற்றுக்கிழமை ஹங்கேரி மீண்டும் திறந்து வைத்தது. எல்லையை திறக்கும் நிகழ்ச்சியில் ஹங்கேரி மற்றும் செர்பிய நாட்டு உள்துறை அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.
இது குறித்து ஹங்கேரி உள்துறை அமைச்சர் சான்டர் பின்டர் கூறுகையில்,
எல்லை வழியாக மக்கள் செல்வதும், பொருட்களை கொண்டு செல்வதும் முக்கியம் என்பதை அறிந்து நல்லெண்ண அடிப்படையில் எல்லையை திறந்துள்ளோம். பிரச்சனை நேரத்தில் பொறுப்பாக நடந்து கொள்ள இருநாடுகளும் முடிவு செய்துள்ளன. பொருளாதாரத்தை நம்பி இருப்பதால் எல்லையை திறப்பது முக்கியத்துவம் பெற்றது. எல்லையை தாண்டிய உடனேயே செர்பியாவில் உள்ள அதிகாரிகள் அகதிகளின் விவரங்களை கேட்டறிவார்கள் என்றார்.
எல்லையை 30 நாட்கள் மூடுவதாக ஹங்கேரி அறிவித்தது. இதையடுத்து அகதிகள் க்ரோஷியா வழியாக ஐரோப்பிய யூனியன் நாடுகளுக்கு செல்லத் துவங்கியதால் தற்போது எல்லையை ஹங்கேரி திறந்துள்ளது.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications