சிரியாவில் ஐ.எஸ். இயக்கத்தில் இணைந்து பலியான ஹைதராபாத் என்ஜினியரிங் மாணவர்!!
டமாஸ்கஸ்: சிரியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் இணைந்த ஹைதராபாத் என்ஜினியரிங் மாணவர் ஹனீப் வாசீம் தாக்குதல் ஒன்றில் உயிரிழந்ததாக உளவுத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஹைதராபாத்தைச் சேர்ந்த மாணவர் ஹனீப் வாசீம் நவம்பர் 2014-ம் ஆண்டு மேல்படிப்புக்காக லண்டன் சென்றுள்ளார். பின்னர் அங்கிருந்து சிரியாவிற்கு சென்று ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் இணைந்து போரிட்டுஉள்ளார்.

அமெரிக்கா உள்ளிட்ட அதன் நேச நாடுகள் நடத்திய தாக்குதலில் கடந்த மார்ச்-15ந் தேதி வாசீம் உயிரிழந்தார் என்று உளவுத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன. பலியான தீவிரவாதி அடிலாபாத்தில் உள்ள சாதான் கல்லூரில் பட்டப்படிப்பு முடித்துஉள்ளார். கடந்த பிப்ரவரி மாதம் தனது சகோதரியின் திருமணத்திற்கு கடைசியாக இந்தியா வந்துஉள்ளார்.
அத்துடன் கரீம்நகரைச் சேர்ந்த மற்றொரு இளைஞரையும் வாசீம் அழைத்து சென்றதாக கூறப்படுகிறது, அவரை தேடுவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.
மகாராஷ்டிராவைச் சேர்ந்த சில இளைஞர்கள் ஐ.எஸ். இயக்கத்தில் இணைந்து பின்னர் மத்திய அரசால் மீட்கப்பட்ட நிலையில் ஆந்திரா, தெலுங்கானாவைச் சேர்ந்த இளைஞர்களும் அந்த இயக்கத்தில் இணைந்திருப்பது உளவுத்துறையினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications