For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இங்கிலாந்து அல்லது அமெரிக்கரின் தலையை வெட்டுவேன்.. பெண் தீவிரவாதியின் மிரட்டல்!

Google Oneindia Tamil News

லண்டன்: ஐஎஸ்ஐஎஸ் அமைப்பைச் சேர்ந்த ஒரு பெண் தீவிரவாதி, இங்கிலாந்தைச் சேர்ந்த அல்லது அமெரிக்காவைச் சேர்ந்த பிணையாளியின் தலையை வெட்டி அப்படிச் செய்த முதல் பெண் ஜிஹாதி என்ற பெயரைப் பெறப் போவதாக அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இப்படி சவால் விட்டுள்ள பெண் இங்கிலாந்தைச் சேர்ந்தவர் ஆவார். அவரது பெயர் கதீஜா டேர். தென் கிழக்கு லண்டனின் லெவிஷாம் பகுதியைச் சேர்ந்தவர். இவர் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் இணை்துள்ளார்.

அமெரிக்கப் பத்திரிகையாளர் ஜேம்ஸ் போலி தலை துண்டித்துக் கொல்லப்பட்ட வீடியோ வெளியான மறு நாள் இவர் இப்படிக் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

சிரியாவில்

சிரியாவில்

2012ம் ஆண்டு கதீஜா இங்கிலாந்தை விட்டு வெளியேறி சிரியாவுக்குச் சென்றார். அங்கிருந்து ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடன் இணைந்து செயல்பட்டு வருகிறார்.

மகன் கையில் ஏகே 47

மகன் கையில் ஏகே 47

தனது சிறு வயது மகனின் கையில் ஏகே 47 துப்பாக்கியைக் கொடுத்து புகைப்படம் எடுத்து வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியவர் இவர்.

22 வயதுதான்

22 வயதுதான்

கதீஜாவுக்கு 22 வயதுதான் என்று கூறப்படுகிறது. இவர் முஹாஜிரா பி ஷாம் என்ற பெயரில் டிவிட்டரிலும் இருக்கிறார்.

தலையை வெட்டுவேன்

இவர் தனது டிவிட்டர் பக்கத்தில் தற்போது ஒரு டிவிட் கொடுத்துள்ளார். அதில், அந்தப் பத்திரிகையாளரின் தலையை வெட்டிய காட்சி அடங்கிய வீடியோ யாரிடமாவது இருக்கிறது. அல்லாவுக்கே புகழ் உண்டாகட்டும். இங்கிலாந்து இப்போது ஆடிப் போயிருக்கும். நான் ஒரு அமெரிக்க அல்லது இங்கிலாந்து பிணையாளியை தலையை வெட்டிக் கொன்று, அப்படிச் செய்த முதல் இங்கிலாந்துப் பெண் என்ற பெயரைப் பெற விரும்புகிறேன் என்று கூறியுள்ளார் கதீஜா.

பலாத்காரம் செய்தவரை தண்டித்ததை நேரில் பார்த்தவர்

பலாத்காரம் செய்தவரை தண்டித்ததை நேரில் பார்த்தவர்

சமீபத்தில் சிரியாவின் ரக்கா நகரில் பலாத்காரம் செய்த ஒருவரை பொது இடத்தில் கொல்லும் காட்சியை இவர் நேரில் பார்த்து ரசித்ததாக சமீபத்தில் கூறியிருந்தார் என்பது நினைவிருக்கலாம்.

ஸ்வீடன் கணவர்

ஸ்வீடன் கணவர்

இவரது கணவர் ஸ்வீடனைச் சேர்ந்தவர். இவரும் ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடன் தொடர்பு கொண்டவர்தான். ரக்கா நகரில்தான் இருவரும் வசித்து வருகின்றனர். இவரது கணவர் துருக்கியை பூர்வீகமாகக் கொண்டவர் என்று தெரிகிறது.

இளம் வயதில் மதம் மாறியவர்

இளம் வயதில் மதம் மாறியவர்

கதீஜா இளம் வயதிலேயே மதம் மாறியதாக கூறப்படுகிறது. சிறு வயதிலிருந்தே இவர் மசூதிக்கும் போய் வருவதாக கூறப்படுகிறது

லெவிஷாம் முஸ்லீம் மையம்

லெவிஷாம் முஸ்லீம் மையம்

மேலும் லெவிஷாமில் உள்ள முஸ்லீம் மையத்திற்கும் இவர் தொடர்ந்து போய் வந்துள்ளார். தனது டிவிட்டர் பக்கத்தில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளால் கொல்லப்பட்டு துண்டிக்கப்பட்ட தலைகள் அடங்கிய புகைப்படங்களையும் இவர் போட்டு வைத்துள்ளார்.

English summary
A Briton allied to IS has vowed to become the first woman to behead a British or US prisoner. Khadijah Dare from Lewisham, south East London, made the promise a day after the video emerged of James Foley's killing. Dare, who in 2012 left her life in Britain behind to live in war torn Syria, prompted outrage recently after picturing her toddler son holding an AK47. Dare, believed to be 22, writes under the Twitter name name Muhajirah fi Sham , meaning “immigrant in Syria”.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X