'அன்பான, அக்கறையுள்ள, அமைதியான' ஸ்டீபனின் திட்டம் தெரியாது: காதலி
கடந்த ஞாயிறன்று அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் நடந்த இசை நிகழ்ச்சியில் துப்பாக்கிச்சூடு நடத்தி 58 நபர்களை கொன்ற ஸ்டீப் பேடக்கின் காதலி, தன் 'அன்பான, அக்கறையுள்ள, அமைதியான' காதலர் என்ன திட்டமிட்டு க் கொண்டிருந்தார் என்பது குறித்து தனக்கு ஒன்றுமே தெரியாது என கூறியுள்ளார்.
ஸ்டீபன் பேடக் ஓர் ரகசிய வாழ்க்கை வாழ்ந்து வந்ததாக போலீஸார் தெரிவிப்பதற்கு சிலமணி நேரங்கள் முன்னதாக மரிலோ டான்லியின் இந்த கருத்துக்கள் வெளியாயின.
- லாஸ் வேகஸ் தாக்குதல் - துப்பாக்கிதாரியா, பயங்கரவாதியா?
- லாஸ் வேகஸ் துப்பாக்கி சூடு: பரபரப்பு காட்சிகள் (புகைப்படத் தொகுப்பு)
தன்னைத்தானே சுட்டுக்கொல்வதற்கு பதிலாக துப்பாக்கிச் சூட்டிற்குபின் தப்பிவிட பேடக் திட்டமிட்டிருக்கலாம் என்று தெரிவித்துள்ள போலீஸார் தொடர்ந்து மேலதிக தகவல்களை கூற மறுத்துவிட்டனர்.
திறந்தவெளி இசைக்கச்சேரி நிகழ்வில் பேடக் எதற்காக கொடூரமான துப்பாக்கிச்சூட்டை நடத்தினார் என்பதற்கான காரணம் இதுவரை தெளிவாகப் புலப்படவில்லை.
அமெரிக்காவின் நவீன வரலாற்றில் மிக மோசமான துப்பாக்கிச்சூடு சம்பவமாக இது பார்க்கப்படுகிறது.
புதன்கிழமையன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய கிளார்க் கவுண்ட்டியின் ஷெரிஃப் ஜோ லொம்பார்டோ, விடுதியில் பேடக்கின் காரில் நிறைய வெடி பொருட்களை போலீஸ் கண்டுபிடித்ததாகவும், அதனோடு சுமார் 1,600 சுற்று துப்பாக்கித் தோட்டாக்களைக் கைப்பற்றியதாகவும் அவர் தெரிவித்தார்.
துப்பாக்கிச்சூடு நடத்துவதற்கு சில மணி நேரம் முன்பு பேடக் சூதாட்டம் விளையாடியுள்ளார்.
ஒருவாரத்திற்கு முன்புதான் லாஸ் வேகஸில் உள்ள ஒக்டென் விடுதியில், வேறொரு திறந்தவெளி இசை நிகழ்ச்சியை மேலிருந்து பார்க்கும் வகையில் ஓர் அறையை முன்பதிவு செய்திருந்தார் பேடக்.
அவருக்கு தீவிரவாதத் தொடர்பு இருப்பதாக எந்த ஆதாரமும் இதுவரை கண்டறியப்படவில்லை என்று எஃப் பி ஐ தெரிவித்துள்ளது.
நேற்று (புதன்கிழமை) பிலிப்பைன்ஸ் விடுமுறை ஒன்றை முடித்துவிட்டு தானாகவே நாடு திரும்பிய டான்லி எஃப் பி ஐயிடம் பேசிய போது,பேடாக் இழைத்தது சொற்களால் வர்ணிக்க முடியாத கொடூரமான வன்செயல் என்று கூறியுள்ளார்.
பிற செய்திகள்:
- திருநங்கைகளால், திருநங்கைகளைப் பற்றி ஒரு யூ டியூப் சேனல்
- காஷ்மீரில் உள்ள கிளர்ச்சியாளர்களுக்கான பிரத்யேக சுடுகாடு
- மூலக்கூறுகளை படமாக்கியதற்காக மூவருக்கு வேதியியல் நோபல் பரிசு
- சிசுக்கொலையில் உயிர்தப்பிய மகள்களை பார்க்க துடிக்கும் மதுரை தாய்மார்கள்
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?













Click it and Unblock the Notifications