‛லஞ்ச்’ சாப்பிடபோன ‛கேப்'பில் வந்த பணி நீக்கம் செய்தி.. அமேசான் Layoff பற்றி இன்ஜினியர் சொன்ன தகவல்
வாஷிங்டன்: அமேசான் நிறுவனம் 30 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய முடிவு செய்துள்ளது. முதற்கட்டமாக 14,000 ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் தான், பணி நீக்க நடவடிக்கையை அறிந்தது எப்படி? என்பது பற்றி அமெரிக்காவில் பணியாற்றி வரும் இன்ஜினியர் விவரித்துள்ளார்.
அமேசான் நிறுவனம் மொத்தம் 30 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய முடிவு செய்துள்ளது. முதற்கட்டமாக கடந்த 28 ம் தேதி முதல் 14 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்வதற்கான நடவடிக்கையை தொடங்கியது.

அதன்படி உலகம் முழுவதும் பணியாற்றி வரும் ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டு வருகின்றனர். பணி நீக்கம் தொடர்பாக ஊழியர்களுக்கு இ-மெயில் மற்றும் செல்போன் மெசேஜ் மூலமாக தகவல் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் தான் தற்போது ஒவ்வொரு ஊழியர்களும் எப்படி பணி நீக்கம் செய்யப்பட்டனர் என்பது பற்றிய தகவல்கள் அடுத்தடுத்து வெளியாகி வருகறது. அந்த வகையில் தான் அலுவலகத்தில் பணியாற்றி ‛லஞ்ச்' சாப்பிட சென்ற இன்ஜினியர் பணி நீக்கம் தொடர்பான தகவலை கேள்விப்பட்டதை பகிர்ந்துள்ளார்.
அதாவது அமெரிக்காவின் நியூயார்க்கில் அமேசானில் இன்ஜினியராக பணியாற்றி வருகிறார் அபிர் பட்டாச்சார்ஜி. இதுதொடர்பாக அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் அவர் இன்னொருவருடன் உரையாடுகிறார். அந்த வீடியோவில் அபிர் பட்டாச்சார்ஜி கூறியதாவது: ‛‛நான் மாலை 4 மணிக்கு லஞ்ச் சாப்பிட்டேன். அமேசான் சார்பில் பணி நீக்கம் செய்யப்பட உள்ளது எனக்கு தெரியும். 10 நிமிடத்தில் லஞ்ச் சாப்பிட்டு விட்டு மீண்டும் எனது டெஸ்க்கிற்கு பணிக்கு வந்தேன்.
அப்போது என் சக ஊழியர் என்னிடம் அதை பார்த்தீர்களா? என்று கேள்வி எழுப்பினார். நான் ப்ரோடெக்சனில் ஏதாவது பிரச்சனை வந்து இருக்கலாம் என்று நினைத்தேன். அப்போது, தான் 30,000 பேரை பணி நீக்கம் செய்ய உள்ளதாகவும், பணி நீக்கம் நாளையே தொடங்குவதாகவும் கூறினார்கள். இதை கேட்டு அதிர்ச்சியடைந்தேன்'' என்று கூறியுள்ளார்.
இந்த வீடியோ வெளியிட்ட அபிர் பட்டாச்சார்ஜி பணிக்கு பிரச்சனை எதுவும் இல்லை. இருப்பினும் அவர், ‛‛பணி நீக்கம் செய்யப்பட்டால் தனது அடுத்த பிளான் என்ன?'' என்பது பற்றி உடன் இருந்தவரிடம் கேட்கிறார். அவர் சில வினாடிகள் யோசித்து பார்த்துவிட்டு, ‛‛ஸ்டார்ட்அப்' என்கிறார். இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது.
-
மீண்டும் வெடிக்கும் போர்.. இரவோடு இரவாக பாய்ந்த ஏவுகணைகள்! அமெரிக்க தளங்களை குறிவைத்து தூக்கிய ஈரான் -
"டார்க்" பாதை.. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சீக்ரெட்டாக போன 70+ கப்பல்கள்.. இது எப்படி சாத்தியம்? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications