2 நாளில் மார்க்கின் பேஸ்புக் கணக்கை ஹேக் செய்ய போறேன்.. வீடியோ வரும்.. சவால்விட்ட இளைஞர்!

பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க்கின் பேஸ்புக் கணக்கை ஹேக் செய்ய போவதாக இளைஞர் ஒருவர் சவால் விடுத்து இருக்கிறார்.

Subscribe to Oneindia Tamil

தைபே: பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க்கின் பேஸ்புக் கணக்கை ஹேக் செய்ய போவதாக இளைஞர் ஒருவர் சவால் விடுத்து இருக்கிறார்.

தைவானை சேர்ந்த சாங் சி யூன் என்று இளைஞர் இந்த சவாலை விடுத்து இருக்கிறார். பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க்கின் பேஸ்புக் கணக்கு மிகவும் பிரபலமாகும்.

இதன் காரணமாகவே இதன் மீது பல ஹேக்கர்களுக்கு கண். இதை எப்படியாவது ஹேக் செய்ய வேண்டும் என்று எல்லோரும் திட்டமிட்டு வருகிறார்கள்.

சவால் விடுத்தார்

சவால் விடுத்தார்

இந்த நிலையில் தைவானை சேர்ந்த சாங் சி யூன் என்று இளைஞர் பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க்கின் பேஸ்புக் கணக்கை ஹேக் செய்ய போவதாக கூறியுள்ளனர். முடிந்தால் அவர் தடுத்து பார்க்கட்டும் என்றுள்ளார். இதுகுறித்து அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் போஸ்ட் போட்டுள்ளார்.

வீடியோ

வீடியோ

அது மட்டுமில்லாமல் அதை சாங் சி யூன் வீடியோவாக வெளியிட போகிறார். அதாவது மார்க்கின் கணக்கை ஹேக் செய்வதை இவர் லைவ் வீடியோவாக பேஸ்புக்கிலேயே போட உள்ளார். இந்த ஞாயிற்றுக் கிழமை மாலை நான்கு மணிக்கு (இந்திய நேரப்படி) ஹேக் செய்ய போவதாக கூறியுள்ளார்.

யார் இவர்

யார் இவர்

தனியார் நிறுவனம் ஒன்றில் கோடிங் பணியில் வேலை செய்யும் சாங் சி யூன், பெரிய இணைய பக்கங்களில், அப்ளிகேஷன்களில் உள்ள குறைபாடுகளை கண்டுபிடிப்பார். எங்கு என்ன தவறு இருக்கிறது, எப்படி பாதுகாப்பு குறைவாக இருக்கிறது என்று கண்டுபிடிப்பார். அதை வைத்து இவர் சம்பாதித்து வருகிறார்.

இதற்கு முன்பு

இதற்கு முன்பு

ஏற்கனவே மார்க்கின் கணக்கை ஒருவர் ஹேக் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த 2011ல் அவரது அக்கவுண்ட்டை ஹேக் செய்த நபர் ஒருவர், அதில் இருந்து போஸ்ட் ஒன்று போட்டிருந்தார். சமூகவலைத்தளங்கள் மூலம் வியாபாரம் செய்வதை மக்கள் ஊக்கிவிக்க வேண்டும் என்று போஸ்ட் செய்திருந்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+