மைதானத்திலேயே ஜம்ப் செய்து.. உருண்டு.. படுத்து.. கிரிக்கெட் வீரரின் நூதன கொண்டாட்டம்.. அடக்கடவுளே!
செர்பியா: செர்பியாவை சேர்ந்த கிரிக்கெட் வீரர் ஒருவர் விக்கெட் எடுத்துவிட்டு அதை கொண்டாடிய விதம் இணையம் முழுக்க பெற்றுள்ளது.
கிரிக்கெட்டில் ஒவ்வொரு வீரரும் ஒவ்வொரு மாதிரி கொண்டாட்டங்களை மேற்கொள்வார்கள். விராட் கோலி வெற்றிகளின் போது எதிரி அணியை பார்த்து கோபமாக கத்துவதை வழக்கமாக வைத்து இருப்பார்.
தோனி சைலண்ட்டாக கொண்டாடும் பண்பு கொண்டவர். அதேபோல் பவுலர்களும் விக்கெட்டுகளை எடுக்கும் போது அதை விதவிதமாக கொண்டாடுவார்கள். soruce ICC.

என்ன கொண்டாட்டம்
உதாரணமாக அப்ரிடி இரண்டு கைகளையும் தூக்கி கொண்டாடுவார். ரொனால்டோ போலவே முகமது சிராஜ் கொண்டாடுவார். இப்படி பல விதமான கொண்டாட்டங்கள் உள்ளன. இந்த நிலையில்தான் செர்பியாவை சேர்ந்த கிரிக்கெட் வீரர் ஒருவர் விக்கெட் எடுத்துவிட்டு அதை கொண்டாடிய விதம் இணையம் முழுக்க பெற்றுள்ளது. அவரின் வீடியோ தற்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.

யார் இவர்?
அயோ மேனே ஏஜிக்கி என்பவர்தான் அந்த வீரர். இவரிடம் விக்கெட் எடுத்தவுடன் அதை வித்தியாசமாக கொண்டாடும் வழக்கம் உள்ளது. செர்பியாவில் தற்போது ஐசிசி டி20 உலகக் கோப்பை சப் ரீஜினல் தொடரின் தேர்வு ஆட்டம் நடைபெற்று வருகிறது. அதாவது இது ரிஜினல் தகுதி சுற்று ஆட்டம் ஆகும். நேற்று செர்பியா நாட்டு அணி Isle of Man என்ற அணியுடன் மோதியது. இதில் Isle of Man அணி 20 ஓவரில் 165 ரன்களை எடுத்தது.

விக்கெட்
இந்த போட்டியில் அயோ மேனே ஏஜிக்கி 4 விக்கெட்டுகளை எடுத்தார். அதோடு முதல் தர போட்டிகளில் அவர் 100 விக்கெட்டுகளை பதிவு செய்தார். இதன்பின் பேட்டிங் செய்த செர்பியா அணி 97 ரன்கள் மட்டுமே 20 ஓவரில் எடுத்து தோல்வி அடைந்தது. இந்த போட்டியில் 100வது விக்கெட்டை எடுத்த பின் அயோ மேனே ஏஜிக்கி அதை மிகவும் வித்தியாசமாக கொண்டாடினார்.

ஐசிசி
அப்படியே பல்டி அடித்து சம்மர் சால்ட் போட்டு தரையில் படுத்தார். அவர் இப்படி செய்தது மைதானத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. தரையில் பொத்தென்று படுக்கும் வகையில் இவர் பல்டி அடித்தார். தற்போது இவரின் செலிப்ரேஷன் வீடியோதான் இணையம் முழுக்க வைரலாகி வருகிறது. ஐசிசி இவரின் வீடியோவை இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்து உள்ளது. இதை 185,000 பேர் இதுவரை லைக் செய்துள்ளனர். அதே சமயம் இதுக்கு பேரு கிரிக்கெட் செலிப்ரேஷனா என்றும் பலர் விமர்சனம் செய்து வருகின்றனர். soruce ICC.


Click it and Unblock the Notifications
