ஒரே காதலர்... ஒரே நேரத்தில் கர்ப்பம்... "ஜெராக்ஸ்" காப்பி இரட்டையர் சகோதரிகளின் அதிரடி பிளான்
சிட்னி: ஆஸ்திரேலிய இரட்டைச் சகோதரிகள் ஒரே இளைஞரைக் காதலித்து வருவது ஏற்கனவே ஊரறிந்த ரகசியம் தான். தற்போது அந்நபர் மூலம் சகோதரிகள் இருவரும் ஒரே நேரத்தில் கர்ப்பம் தரிக்க திட்டமிட்டுள்ளார்களாம்.
அச்சு அசலாக ஒரு வித்தியாசம் கூட காண முடியாத அளவிலான இரட்டையர்களைக் காண்பது வெகு அரிது. எப்படிப்பட்ட இரட்டையர்களாக இருந்தாலும் கூட ஏதாவது ஒரு வித்தியாசம் இருக்கும்.
இந்நிலையில் ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரைச் சேர்ந்த லூசி மற்றும் அன்னா என்ற இரட்டை சகோதரிகளிடம் எந்த வித்தியாசத்தையும் காண முடியாது. அந்த அளவுக்கு இருவரும் ஜெராக்ஸ் காப்பி போல ஒரே மாதிரியாக இருக்கிறார்கள்.

பிளாஸ்டிக் சர்ஜரி...
இப்படி ஒரே மாதிரியாக இருப்பதற்காக இவர்கள் செய்த செலவு எக்கச்சக்கம். அதாவது உடல் முழுவதும் பல இடங்களில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து இருவரது உருவத்தையும் ஒரே மாதிரியாக மாற்றிய பெருமைக்குரியவர்கள் இந்த ஆஸ்திரேலியச் சகோதரிகள்.

அதிசயப் பிறவிகள்...
இருவரையும் எங்குமே பிரித்துப் பார்க்க முடியாது. எங்கு போனாலும் சேர்ந்தே போகின்றனர் வருகின்றனர். இருவரையும் ஆஸ்திரேலியாவில் ஆச்சரியமான பிறவிகளாக மக்கள் பார்க்கின்றனர்.

ஒரே காதலர்...
இந்த அபூர்வ சகோதரிகள் இருவருக்கும் தற்போது வயது 29 ஆகிறது. இருவரும் இணைந்தே வாழ்கின்றனர். இது மட்டுமின்றி இருவரும் பென் பைர்ன் என்ர 31 வயது நபரையே காதலிக்கின்றனர். அவருடனேயே படுக்கையைப் பகிர்ந்து கொள்கின்றனர். ஒரே மாதிரி சாப்பிடுகின்றனர்.

விரைவில் டும் டும் டும்...
இந்நிலையில், விரைவில் தங்களது காதலரை இந்தச் சகோதரிகள் கரம் பிடிக்க உள்ளனர். அதனைத் தொடர்ந்து தாங்கள் இருவரும் ஒரே நேரத்தில் கருத்தரித்து குழந்தை பெற்றுக்கொள்ள ஆசைப்படுவதாக தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்த பேட்டியில் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

செயற்கை முறையில்...
ஏனெனில் குழந்தைகள் என்றால் இருவருக்குமே ரொம்பவும் பிடிக்குமாம். அதனால் செயற்கை கருத்தரித்தல் முறையினை பயன்படுத்தி கர்ப்பம் தரித்து குழந்தை பெற்றுக்கொள்ள இருவரும் திட்டமிட்டுள்ளனராம்.

தனித்தனி டேட்டிங்...
கடந்த காலத்தில் இந்தச் சகோதரைகளுக்கு தனித் தனியே பாய் பிரண்ட் இருந்துள்ளனர். ஆனால் அவர்களுடன் தனித் தனியாக பிரிந்து டேட்டிங் போவது சரிப்பட்டு வரவில்லை என்பதால் பென்னை இருவரும் ஷேர் செய்து கொள்ள முடிவெடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications