எங்களை காப்பாத்துங்க! கெஞ்சி கூத்தாடி ரூ.8500 கோடி ரூபாயை கடன் பெற்றது பாகிஸ்தான்.. என்ன நடந்தது?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்தியா போல் அல்லாமல் பாகிஸ்தான் தற்போது பொருளாதார அளவில் மிகவும் பின்தங்கி இருக்கின்றது. விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம் போன்ற காரணங்களால் பாகிஸ்தான் மக்கள் ஏற்கனவே துன்பபட்டு வருகின்றனர். இந்த நிலையில் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் முயற்சியாக தங்களுக்கு 8,500 கோடி ரூபாய் கடன் வேண்டும் என்று சர்வதேச நாணய நிதியத்தை பாகிஸ்தான் நாடியது.

எனினும் இதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. பாகிஸ்தான் அரசு மக்களுக்கு நல்லது செய்வதற்காக நிதி வேண்டும் என்று வாங்கிவிட்டு, பின் அதனை தீவிரவாத முகாம்களை ஊக்குவிக்க தான் பயன்படுத்துகிறது என இந்தியா குற்றச்சாட்டி இருந்தது.

IMF Pakistan news

இது குறித்து ஐ எம் எப் கூட்டத்தில் பேசிய இந்தியா," கடந்த 35 ஆண்டுகளில் இதுவரை 28 முறை பாகிஸ்தான் கடன் வாங்கி இருக்கிறது. குறிப்பாக இந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் நான்கு முறை ஐ எம் எப் நலத்திட்டங்களை அமல்படுத்துவதற்காக பாகிஸ்தான் கடன் கேட்டிருந்தது."

" ஆனால் இதில் ஒரு திட்டம் கூட மக்களுக்கு சென்று சேரவில்லை" என்று இந்தியா குற்றம் சாட்டி உள்ளது. ஐ எம் எப் நிதியை சரியாக பயன்படுத்த பாகிஸ்தானில் எந்த ஒரு அமைப்பும் இல்லை என்றும் இது மக்களுக்கு தான் சேருகிறதா என்று கண்காணிக்க கூட பாகிஸ்தானில் ஒரு குழு கூட இல்லை என்றும் இந்தியா குற்றச்சாட்டி இருந்தது.

மேலும் தற்போது பாகிஸ்தானில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு நிலவினாலும் ராணுவம் தான் ஆட்சியில் அதிகாரம் செலுத்துவதாகவும் இதன் காரணமாக பொருளாதார அடி பாதாளத்திற்கு சென்றுவிட்டதாகவும் ஐநா அளித்த ரிப்போர்ட்டை இந்தியா மேற்கோள் காட்டி இருக்கிறது.

ஐஎம்எப் இடம் இருந்து நிதி வாங்கி பாகிஸ்தான் அரசு ராணுவத்திற்கும் தீவிரவாத ஊக்கத்திற்கும் செயல்படுத்துவதாக இந்தியா குற்றம் சாட்டி உள்ளது. மேலும் இதுபோன்ற பெரும் நிதியை பாகிஸ்தானை நம்பி வழங்கினால் அது ஐஎம்எஃப்க்கு தான் பெரிய பிரச்சனையை உருவாக்கும் என்றும் இந்தியா எச்சரிக்கை விடுத்திருந்தது. எனினும் தங்களது நாட்டிற்கு இந்த நிதி மிகவும் தேவை என்று கெஞ்சி பாகிஸ்தான் கூத்தாடியது.

இந்த வாக்கெடுப்பில் இந்தியாவால் எதிர்த்து வாக்களிக்க முடியாத நிலை இருந்தது. இதனால் இந்த வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் இந்தியா புறக்கணித்தது. இதனை அடுத்து தங்களுக்கு உடனடியாக 8500 கோடி ரூபாய் கடன் வழங்க ஐ எம் எப் ஒப்புதல் வழங்கி விட்டதாக பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது.

தீவிரவாதிகளை ஊக்குவிப்பதாக புகார் எழுந்துள்ள நிலையில் தற்போது பாகிஸ்தானுக்கு இவ்வளவு பெரிய நிதி கிடைத்திருப்பது உலக நாடுகளை அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது. இந்த பணத்தை வைத்துக்கொண்டு இந்தியாவிற்கு எதிரான போரில் பாகிஸ்தான் ஈடுபட வாய்ப்பு இருப்பதாக வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+