எகிறி அடித்த இம்ரான்கான்.. "பூஸ்ட்" தந்த இடைத்தேர்தல்.. அடுத்த பிளான் என்ன.. பொதுத்தேர்தல் நடக்குமா
இம்ரான்கான், பாகிஸ்தானில் விரைவில் பொதுத்தேர்தலுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்
இஸ்லாமாபாத்: இம்ரான்கான், தன்னுடைய அடுத்த பிளானை அறிவித்துள்ளார்.. பாகிஸ்தானில் விரைவில் பொதுத்தேர்தல் வர வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.
ஒருகட்டத்தில் பாகிஸ்தானின் அரசியலில் தவிர்க்கவே முடியாத சக்தியாக மாறிய இம்ரான்கான், 2018-ல் பாகிஸ்தானின் பிரதமர் ஆனார்.. மக்களின் செல்வாக்கை ஏகோபித்த ஆதரவுடன் பெற்றார்..
ஆனால், அடுத்தடுத்த காலங்களில், பொருளாதாரம் கடுமையான நெருக்கடிக்கு ஆளாகி, ஒருபக்கம் கடன் சுமை, இன்னொரு பக்கம் பொருளாதார வீழ்ச்சி என அந்த நாடு சிக்கி கொண்டது.

கோபம்
இதற்கு பிறகு எல்லா கோபமும் இம்ரான்கான் மீது திரும்பியது.. இறுதியில், பாகிஸ்தானின் பாராளுமன்றத்தில் கடந்த ஏப்ரல் மாதம் எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றிபெற்றதை தொடர்ந்து பிரதமர் இம்ரான்கான் தலைமையிலான அரசு கவிழ்ந்தது... அதுவ எதிர்க்கட்சி தலைவராக இருந்த ஷபாஸ் ஷெரீப் பாகிஸ்தானின் புதிய பிரதமராக பொறுப்பேற்றுக்கொண்டார்.

சதி உள்ளது
ஆனால், புதிய பிரதமரை ஏற்க மறுத்து வருகிறார் இம்ரான்கான்.. தன்னுடைய ஆட்சி கவிழ்ப்பில் வெளிநாட்டு சதி இருக்கிறது என்றும் சொல்லி வருகிறார்.. இந்த பதவி போனதை தாங்க முடியாத வருத்தத்தில், புதிய அரசுக்கு எதிராக, தன் கட்சியின் ஆதரவாளர்களை திரட்டி இம்ரான்கான் அவ்வப்போது போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்... இப்படிப்பட்ட சூழலில், அந்நாட்டின் பஞ்சாப் மாகாணத்தில் இடைத்தேர்தல் நடைபெற்றது...

பூஸ்ட் அப்
காலியாக உள்ள 20 சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தலின் முடிவில், இம்ரான்கான் தலைமையிலான தெஹ்ரிக் இ இன்சாப் கட்சி 16 இடங்களில் அபார வெற்றி பெற்றுள்ளது. சட்டசபை இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற தெஹ்ரிக் இ இன்சாப் கட்சிக்க்கு ஆளும் கட்சி தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டது.. இந்த தேர்தலின் வெற்றியானது இம்ரான்கானுக்கு பூஸ்ட் தந்தது போல் ஆகிவிட்டது. அதனால், நாட்டில் உடனடியாக பொதுத்தேர்தல் நடத்தப்பட வேண்டுமென இம்ரான்கான் கோரிக்கையை விடுக்க ஆரம்பித்துவிட்டார்..

நிராகரிப்பு
இதைபற்றி அவர் சொல்லும்போது, "நாட்டின் இன்றைய அரசியல் நிலைத்தன்மையின்மையில் இருந்து விடுபட வேண்டுமென்றால், நியாயமான பொதுத்தேர்தல் உடனடியாக நடத்தபடவேண்டும்... என்னை ஆட்சியில் இருந்து நீக்கியபோதே பொதுத்தேர்தல் நடத்தவேண்டுமென்று சொன்னேன்.. ஆனால், என் முடிவை கோர்ட்டு நிராகரித்துவிட்டது... இருந்தாலு நான் சொன்னது சரியே என்பது எனக்கு தெரியும்" என்றார். பாகிஸ்தானில் பொதுத்தேர்தல் 2023 ஆகஸ்ட் மாதம் நடக்க உள்ள நிலையில், இப்போதே இம்ரான்கான் பிடிவாதத்தை காட்ட ஆரம்பித்துவிட்டது எந்த அளவுக்கு ஒர்க் அவுட் ஆகும் என்று தெரியவில்லை..

ஜம்ப் ஆகும் நிலைமை?
பாகிஸ்தான் வரலாற்றில் முதன்முறையாக நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தின் அடிப்படையில் கலைக்கப்பட்ட ஆட்சி என்ற பெயரை இம்ரான்கான்தான் பெற்றுள்ளார்.. இன்னொன்றையும் இங்கு நினைவுபடுத்த வேண்டி உள்ளது.. பாகிஸ்தானை பொறுத்தவரை, இதுவரை எந்த பிரதமரும் முழுமையாக 5 வருடங்கள் பதவிக் காலத்தில் நீடித்தது கிடையாது என்பது வரலாற்று உண்மை.. இதில் இம்ரான்கான் விடுத்து வரும் கோரிக்கை எடுபடுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்..!
-
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ்












Click it and Unblock the Notifications