அரசியலில் குதிக்க விரும்பிய மனைவியை விவாகரத்து செய்த இம்ரான் கான்
இஸ்லாமாபாத்: முன்னாள் கிரிக்கெட் வீரரும், பாகிஸ்தான் தெஹ்ரிக் இ இன்சாப் கட்சியின் தலைவருமான இம்ரான் கான் திருமணமான 10வது மதாதத்தில் தனது மனைவியை விவாகரத்து செய்துள்ளார்.
முன்னாள் கிரிக்கெட் வீரரும், பாகிஸ்தான் தெஹ்ரிக் இ இன்சாப் கட்சியின் தலைவருமான இம்ரான் கான் பத்திரிக்கையாளரான ரெஹமை காதலித்து கடந்த ஜனவரி மாதம் 8ம் தேதி இஸ்லாமாபாத்தில் திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் திருமணம் நடந்த 10வது மாதத்தில் இம்ரான் ரெஹமை விவாகரத்து செய்துள்ளார்.

மனமொத்து விவாகரத்து செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து இம்ரான் கானுக்கு நெருக்கமான ஒருவர் கூறுகையில்,
இம்ரானுக்கும், ரெஹமுக்கும் ஒத்து வரவில்லை. ரெஹமுக்கு அரசியலில் ஈடுபட விருப்பம். ஆனால் இம்ரானுக்கு ரெஹம் அரசியலுக்கு வருவது பிடிக்கவில்லை. ரெஹமால் வீட்டில் சும்மா உட்கார முடியவில்லை.
அவர்கள் இருவருக்கும் இடையே பல விவகாரங்களில் பிரச்சனையாக இருந்தது. ஆனால் ரெஹம் அரசியலுக்கு வருவேன் என்றது தான் முக்கியப் பிரச்சனை ஆகும் என்றார்.
இம்ரான் கானுக்கும், அவரது மனைவிக்கும் இடையே பிரச்சனை என்று பாகிஸ்தான் மீடியாக்களில் கடந்த சில மாதங்களாக செய்திகள் வந்தன. ஆனால் அவற்றை இம்ரான் மறுத்து வந்தார். முன்னதாக இம்ரான் தனது முதல் மனைவி ஜெமிமாவை 2004ம் ஆண்டு விவாகரத்து செய்தார். அவர்கள் இருவரும் ஒன்பது ஆண்டுகளாக கணவன், மனைவியாக இருந்தனர்.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications