பிரதமராக இருந்தபோது வந்த பரிசுகள்! அப்படியே வைத்து கொண்ட இம்ரான் கான்! அதன் மதிப்பு எவ்வளவு தெரியுமா
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் நாட்டில் அரசியல் குழப்பம் இன்னும் முடிவுக்கு வராத நிலையில், இம்ரான் கானின் பரிசுகள் குறித்து சில முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளன.
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் அரசுக்கு எதிராக எதிர்க்கட்சியினர் கடந்த மாதம் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்தன. எதிர்க்கட்சியினர் மட்டுமின்றி கூட்டணிக் கட்சியிலும் பலரும் அவருக்கு எதிராகத் திரும்பினர்,
இதையடுத்து பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில் இம்ரான் கான் தனது பிரதமர் பதவியை இழந்தார்.

பாகிஸ்தான் பிரதமர்
பாகிஸ்தான் பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட இம்ரான் கான், தனது 3.5 ஆண்டுக் காலத்தில் உலகத் தலைவர்களிடமிருந்து ₹ 140 மில்லியனுக்கும் அதிகமான 58 பரிசுகளைப் பெற்றுள்ளார். அவை அனைத்தையும் மிகக் குறைந்த தொகையைச் செலுத்தியோ அல்லது எதுவும் செலுத்தாமலோ அவர் வைத்துக் கொண்டார். ஊழலை ஒழிப்போம் என்ற முழக்கத்தை முன்வைத்து ஆட்சிக்கு வந்தவர் இம்ரான் கான்.

ரோலக்ஸ் வாட்ச்
மேலும், அவரது ஆட்சியில் அரசின் கடன் சுமையைக் குறைக்கப் பல சிக்கன நடவடிக்கைகளையும் எடுக்கப்பட்டன. அவரே இப்போது ₹ 140 மில்லியன் மதிப்பிலான பரிசுகளை வைத்துக் கொண்டது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. ஒரு ரோலக்ஸ் வாட்ச், ஒரு ஜோடி கஃப்லிங்க்ஸ், ஒரு மோதிரம் மற்றும் ஒரு நெக்லஸ், பிரேஸ்லெட் மற்றும் ஒரு ஜோடி காதணிகள் என ₹ 23.5 மில்லியன் மதிப்பிலான பொருட்களை ₹ 11.5 மில்லியன் மட்டுமே செலுத்தித் தன்வசப்படுத்தி உள்ளார்.

பரிசுகள்
₹ 3.8 மில்லியன் மதிப்புள்ள ரோலக்ஸ் கடிகாரத்தைக் கடந்த 2018 அக்டோபரில் சுமார் ₹ 754,000 செலுத்திப் பெற்றுக் கொண்டார். அதேபோல ₹ 1.5 மில்லியன் மதிப்புடைய மற்றொரு ரோலக்ஸ் கடிகாரத்தை ₹ 294,000 செலுத்திப் பெற்றுக் கொண்டார். மேலும், ஒரு ஜோடி ரோலக்ஸ் வாட்ச்கள், ஒரு ஐபோன் மற்றும் ₹ 1.73 மில்லியன் மதிப்புள்ள மற்ற பொருட்களை அவர் ₹ 338,600க்கு தக்க வைத்துள்ளார்.

பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப்
மொத்தம் ₹ 140 மில்லியன் மதிப்புள்ள பரிசுகளை அவர் ₹ 38 மில்லியன் டாலர் செலுத்திப் பெற்றுக் கொண்டார். அதேபோல ₹ 8,00,200 மதிப்புள்ள பரிசுகளை எந்தப் பணமும் செலுத்தாமல் வைத்துக் கொண்டுள்ளார். அவற்றில் மிகவும் விலையுயர்ந்த பரிசுகள் துபாயில் விற்கப்பட்டதாகப் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப் குற்றஞ்சாட்டி உள்ளார்.
Recommended Video

20% தொகை
கடந்த 2018இல் அவர் பிரதமராகப் பதவி ஏற்ற சமயத்தில் ₹ 85 மில்லியன் மதிப்புள்ள கிராஃப் வாட்ச், ₹ 5.67 மில்லியன் கஃப்லிங்க், ₹ 1.5 மில்லியன் பேனா, ₹ 8.75 மில்லியன் மோதிரத்தை அவர் பரிசாகப் பெற்று இருந்தார் . மொத்தம் ₹ 100 மில்லியன் மதிப்புள்ள பரிசுகளை அவர் வெறும் 20% தொகையைச் செலுத்தி தக்க வைத்துக் கொண்டார்.












Click it and Unblock the Notifications