"புது பாகிஸ்தானை" உருவாக்கி அதன் பிறகு கல்யாணம் செய்யப் போகிறாராம் இம்ரான் கான்!
இஸ்லாமாபாத்: நான் கனவு காணும் பாகிஸ்தான் உருவான பின்னர் மறு திருமணம் செய்யத் திட்டமிட்டுள்ளேன் என்று இம்ரான் கான் கூறியுள்ளார்.
இம்ரான் கான் தான் இப்போது பாகிஸ்தானின் ரொம்பப் பிசி அரசியல்வாதியாக இருக்கிறார். ஆயிரக்கணக்கானோரைத் திரட்டி இஸ்லாமாபாத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தி வருகிறார் இம்ரான்.
இவருக்கு ராணுவம் மறைமுகமாக ஆதரவு தருவதாக கூறப்படுகிறது. இதனால் இம்ரான் மீது கை வைக்க பிரதமர் நவாஸ் ஷெரீப்பும் தயக்கம் காட்டுகிறார்.
இந்திலையில் தனது மறுமணம் குறித்துப் பேசியுள்ளார் இம்ரான் கான்.

புது பாகிஸ்தான் உருவாகட்டும்
நேற்று இரவு போராட்டக்காரர்கள் மத்தியில் இம்ரான் கான் பேசுகையில், எனது மனதில் ஒரு பாகிஸ்தான் உள்ளது. அந்தக் கனவு பாகிஸ்தான், புதிய பாகிஸ்தான் உருவாக வேண்டும் என்றுதான் உழைத்து வருகிறேன்.

எனக்காக மட்டுமல்ல, உங்களுக்காகவும்தான்
எனக்காக மட்டுமல்ல, உங்களுக்காகவும்தான் அந்தப் புதிய பாகிஸ்தான் குறித்த கனவில் உள்ளேன். அது நிறைவேறினால், புதிய பாகிஸ்தான் உருவாகினால், அதன் பின்னர் நான் மறுமணம் செய்து கொள்வேன் என்றார் இம்ரான் கான்.

கல்யாணம் புதுசல்ல
இம்ரான் கான் கனவு காணும் பாகிஸ்தான் தான் புதியது. ஆனால் அவருக்குக் கல்யாணம் புதிதல்ல. 1995ம் ஆண்டு இங்கிலாந்தைச் சேர்ந்த ஜெமீமா கோல்ட்ஸ்மித்தை திருமணம் செய்தார். 2004ல்இருவரும் பிரிந்தனர். இத்தம்பதிக்கு சுலைமான் மற்றும் குவாசிம் என இரு மகன்கள் உள்ளனர். இருவரும் தந்தையுடன் இல்லை. மாறாக தாயுடன் இங்கிலாந்தில் வசித்து வருகின்றனர்.

நிறைக் காதல்கள்...
கிரிக்கெட் கேப்டனாக, வீரராக ஜொலித்தபோது நிறையக் காதல்களிலும் சிக்கியவர் இம்ரான். ஆனால் ஜெமீமாவை விட்டுப் பிரிந்த பிறகு திருமணம் செய்யாமல் இருந்து வருகிறார். இந்த நிலையில், மீண்டும் ஒரு திருமணம் குறித்த பேச்சை அவரே தொடங்கியுள்ளார்.

பொண்ணு ரெடியோ??
ஒரு வேளை இம்ரான் தான் மணக்கப் போகும் பெண்ணை மனதுக்குள் ஏற்கனவே வரித்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications