Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆப்கன் உள்துறை அமைச்சர் படம் முதல்முறையாக வெளியீடு... பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டவர்

Subscribe to Oneindia Tamil

காபூல்: ஆப்கானிஸ்தான் தாலிபான் அரசு முதன் முறையாக உள்துறை அமைச்சர் சிராஜூதீன் ஹக்கானியின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளது. இவர் இந்திய தூதரகம் மீதான குண்டுவெடிப்பை நிகழ்த்தி இருந்த நிலையில் அமெரிக்காவால் தேடப்படும் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டவராவார்.

ஆப்கானிஸ்தானில் முகாமிட்டிருந்த அமெரிக்க படைகள் கடந்த ஆண்டு முழுவதுமாக தாயகம் திரும்பின. இதையடுத்து அங்கு நடந்த உள்நாட்டு போரில் தாலிபான்கள் 2021 பாதியில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றினர்.

இந்த புதிய அரசின் தலைவராக முல்லா பராதர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். தாலிபான்களை அங்கீகரிக்க உலக நாடுகள் மறுத்து வருகின்றன. உலக வங்கி, சர்வதேச நிதியம் (ஐஎம்எப்) உள்ளிட்ட அமைப்புகள் ஆப்கன் அரசுக்கு தடை விதித்துள்ளன. இதனால் அங்கு வேலையின்மை, வறுமை, பசி, பட்டினி தலைவிரித்தாடுகிறது.

 உள்துறை அமைச்சர்

உள்துறை அமைச்சர்

ஆப்கனை உலக நாடுகள் அங்கீகரிக்காமல் இருக்க பல காரணங்கள் உள்ளன. ஜனநாயக முறையில் ஆட்சியை பிடிக்காதது, பயங்கரவாத செயல்களில் ஈடுபடுவோருடன் கூட்டு வைத்திருப்பது உள்பட பல்வேறு அம்சங்களை காரணங்களாக கூறமுடியும். குறிப்பாக ஆப்கன் உள்துறை அமைச்சராக சிராஜூதீன் ஹக்கானி என்பவர் நியமிக்கப்பட்டார். இவர் மாகாண ஆளுநர் நியமன விவகாரங்களையும் கூடுதலாக கவனித்து வருகிறார். இவரது நியமனம் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ஏனென்றால் இவர் இந்தியா, அமெரிக்காவுக்கு எதிராக பல பயங்கரவாத செயல்களை அரங்கேற்றியுள்ளார். இதனால் கண்டனங்கள் எழுந்தன.

 யார் இவர்

யார் இவர்

உள்துறை அமைச்சரான சிராஜூதீன் ஹக்கானி, இறந்து போன முன்னாள் முஜாஹிதீன் போராளி ஜலாலுதீன் ஹக்கானியின் மகன் ஆவார். மேலும் பாகிஸ்தானின் வடக்கு வஜிரிஸ்தானை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஹக்கானி குழுவின் தலைவராக இருந்தார். இந்த குழு அல் கொய்தா பயங்கரவாத அமைப்புடன் நெருங்கிய தொடர்பு கொண்டுள்ளது. 2007 ஜூன் 18ல் காபூலில் போலீஸ் பஸ் மீது தற்கொலைப்படை தாக்குதல் நடந்தது. இதில் 35 போலீசார் பலியான விவகாரத்தில் இவருக்கு சம்பந்தம் இருந்தது.

 தேடப்படும் பயங்கரவாதி

தேடப்படும் பயங்கரவாதி

2008ல் காபூலில் உள்ள இந்திய தூதரக குண்டுவெடிப்பில் 58 பேரை கொன்றது, 2009, 2010ம் ஆண்டுகளில் ஆப்கானிஸ்தானில் இந்தியர்கள் மற்றும் இந்திய நலன்களுக்கு எதிரான செயல்களில் ஈடுபட்டுள்ளார். அத்துடன் 2008 ஜனவரியில் காபூலில் ஓட்டல் மீதான தாக்குதலில் அமெரிக்கர் உள்பட 6 பேர் இறந்தனர். இதில் அவர் தேடப்படும் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டார். இவரை பற்றி துப்பு கொடுப்பவருக்கு 10 மில்லியன் அமெரிக்க டாலர் பரிசாக அளிப்பதாக அமெரிக்கா கூறியிருந்தது. 2008ல் ஆப்கானிஸ்தான் அதிபர் ஹமீத் கர்சாய் மீதான கொலை முயற்சியின் திட்டத்திலும் ஹக்கானி ஈடுபட்டதாக கூறப்பட்டது.

 படங்கள் வெளியாகவில்லை

படங்கள் வெளியாகவில்லை

இந்நிலையில் தான் அவர் ஆப்கன் அரசின் உள்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். மேலும் உலக நாடுகளுடன் இணக்கமாக சென்றால் தான் பலன்களை பெற முடியும் என்பதை உணர்ந்த ஆப்கன் அரசு உள்துறை அமைச்சராக இருந்தாலும் கூட அவரது படத்தை பகிரங்கமாக ஆப்கானிஸ்தான் அரசு வெளியிடவில்லை. குறிப்பாக 2021 அக்டோபரில் காபூலில் உள்ள ஓட்டலில் கூட்டம் நடந்தது தொடர்பான படங்கள் வெளியானது. இதில் அவரது மகம் பூங்கொத்துகளால் மறைக்கப்பட்டு இருந்தது.

 இன்று வெளியீடு

இன்று வெளியீடு

இந்நிலையில் தான் ஆப்கானிஸ்தானின் செய்தி தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித் டுவிட் ஒன்றை பதிவிட்டார். அதில் சிராஜூதீன் ஹக்கானியின் முகம் தெளிவாக தெரியும்படி படங்கள் வெளியிடப்பட்டுள்ளது. அவர் போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று கொள்வது போன்று படங்கள் உள்ளன. மேலும் அந்த பதிவில் அதில், "ஆப்கானிஸ்தானின் உள்துறை அமைச்சர் சிராஜூதீன் ஹக்கானி தேசிய போலீஸ் படை பட்டமளிப்பு விழாவை துவக்கி வைத்தார்''என குறிப்பிட்டுள்ளார்.

 காரணம் என்ன

காரணம் என்ன

இவ்வளவு நாளுக்கு பிறகு அவரது படத்தை தாலிபன் அரசு வெளியிடுகிறது என்றால் அதன் பின்னணியில் வேறு காரணம் இருக்கலாம் என சர்வதேச நாடுகள் கருதுகின்றன. இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ‛‛ஆப்கனில் ஆட்சியை பிடித்தாலும் உலக நாடுகள் இதுவரை அவர்களை அங்கீகரிக்கவில்லை. இதனால் தலிபான்கள் சிராஜூதீன் ஹக்கானியை வைத்து சோதனை செய்து பார்க்கிறது. தேடப்படும் பயங்கரவாதியாக அவர் உள்ளதால் சில நாடுகள் ஆப்கன் அரசை நாடலாம். இதை பயன்படுத்தி கொள்ளலாம். இல்லாவிட்டால் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதி தங்களுடன் இருக்கிறார் என்பதை காட்டும் சமிக்ஞையாக கூட இது இருக்கலாம்'' என்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+