For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

என்னங்க.. ஏங்க.. ரொம்ப பிசியா.. இந்தாங்க சாப்பிடுங்க.. ஊட்டி விட "கை" வந்தாச்சு பாஸ்!

உணவு ஊட்டி விடும் ரோபோ கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    சாப்பாடு ஊட்டிவிடும் ரோபோ !

    சிட்னி: ஹலோ பாஸ்... உங்களுக்கு சாப்பிட நேரமில்லையா? டோன்ட் வொர்ரி.. ஊட்டி விட ஆள் வந்தாச்சு!!

    1936-ல் சார்லி சாப்ளின் நடித்த மார்டன் டைம்ஸ் என்ற படம் வெளிவந்தது. இது ஒரு ஃபேக்டரியில் நடக்கும் கதை. அந்த ஃபேக்டரியில் ஊழியர்கள் லஞ்ச் டைமில் சாப்பிட போய்விடுவதால், வேலை பாதிப்பதாக நினைத்து நேரத்தை மிச்சப்படுத்த ஒரு மிஷின் கண்டு பிடிப்பார்கள்.

    ஆட்கள் வேலை செய்யும்போதே அந்த மிஷின் அவர்களுக்கு சாப்பாடு ஊட்டி விடும். இதற்கு டெமோ காட்ட சார்லி சாப்ளினை ஒரு சேரில் உட்கார வைத்து மிஷினால் சாப்பாடு ஊட்டி விடுவார்கள். சாப்ளினுக்கு மிஷினில் ஒரு பக்கம் சாப்பாடு ஊட்டும், இன்னொரு பக்கம் தண்ணி குடுக்கும். இதுக்கு நடுவில் ஒரு கர்சீப் வந்து அவரது வாயை துடைத்து விட்டு போகும்.

    தொழிலாளர்கள்

    தொழிலாளர்கள்

    ஒரு கட்டத்தில் ஒட்டுமொத்த மிஷினும் ரிப்பேர் ஆகி, சாப்ளின் படாத பாடு பட்டுவிடுவார். இது ஒரு நகைச்சுவை படம் என்றாலும் அப்போதை முதலாளிகள், தொழிலாளிகளை சாப்பிடக்கூட விடாமல் எப்படி வேலை வாங்குகிறார்கள் என்பதை மறைமுகமாக தாக்கியே சாப்ளின் இந்த படத்தை எடுத்திருந்தார்.

    நேரம் மிச்சம்

    நேரம் மிச்சம்

    இப்போது என்ன விஷயம் என்றால், 86 வருஷம் கழிச்சு இப்படி ஒரு சாப்பாடு ஊட்டி விடும் மிஷின் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதாவது ரோபோ!!! ஆஸ்திரேலியாவில் ஆர்எம்ஐடி என்ற பல்கலைக்கழகத்தை சேர்ந்தவர்கள்தான் இந்த ரோபோவை கண்டு பிடித்துள்ளார்கள். இனிமேல் சாப்பிட நேரமில்லை என்று யாருமே சொல்லக் கூடாதாம். அதோடு வேலை பார்த்துகொண்டே சாப்பிட்டு விட்டால் டைம் மிச்சமாகுமாம்.

    லஞ்ச் டைம்

    இந்த ரோபோவை நாம் இடுப்பில் கட்டி கொண்டால் போதும். இதில், நமக்கு ஒரே ஒரு வேலைதான்.. அது என்னவென்றால், நம்முடைய லஞ்ச் டைம் எப்போது என்று ரோபோகிட்ட சொன்னால் போதும். அவ்வளவுதான்... சாப்பாட்டில் மிச்சம் வைக்காம மிச்சதை அதுவே பார்த்துக்கும்.

    பூவா ஊட்டுறது

    பூவா ஊட்டுறது

    டைம்க்கு சாப்பாடு டேபிள் மேல வரும் என்று ஒரு பேச்சுக்கு சொல்வோம். ஆனா இப்போ டேபிள் போய், டைம்க்கு சாப்பாடு ஸ்ரைட்டா வயித்துக்குள்ளேயே வர போகுது! இந்த ரோபோ 'பூவா' ஊட்டிவிடும் வீடியோ காட்சிகள்தான் தற்போது வைரலாகி வருகிறது.

    English summary
    In Austrailia.. Chest mounted robot feeding arm video goes viral
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X