கலிபோர்னியாவில் பரபரப்பு.. கட்டிடத்தின் மீது மோதிய போர் விமானம்.. பாராசூட்டால் உயிர் தப்பிய பைலட்
லாஸ்ஏஞ்சல்ஸ்: கலிபோர்னியாவில் வழக்கமான பயிற்சிகளில் ஈடுபட்டிருந்த எஃப் 16 ரக போர் விமானம் ஒன்று, வணிக வளாக கிடங்கு ஒன்றில் மோதி விபத்துக்குள்ளானது. எனினும் இந்த விபத்தில் சிக்கிய விமானி பத்திரமாக உயிர் தப்பியுள்ளார்.
இது குறித்து தகவல் தெரிவித்துள்ள விமானப்படை உயரதிகாரிகள் தெற்கு கலிபோர்னியாவில் அமைந்துள்ள மார்ச் ஏர் ரிசர்வ் விமானதளத்திற்கு அருகில் பயிற்சிக்காக சென்ற எஃப் 16 ரக ஜெட் விபத்தில் சிக்கியதாக கூறியுள்ளனர்.

விபத்திற்குள்ளான அந்த குறிப்பிட்ட ஜெட் விமானமானது சவுத் டகோடாவின், ஸூக்ஸ் ஃபால்ஸ் நகரத்தில் உள்ள114 வது ஃபைட்டர் விங் பிரிவை சேர்ந்தது. இந்த ஜெட் விமானத்தை கொண்டு விமானி ஒருவர் வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.
அப்போது எதிர்பாராதவிதமாக வணிக வளாக கிடங்கு ஒன்றின் மீது பயங்கரமாக எஃப் 16 போர் விமானம் மோதி நொறுங்கியுள்ளது. எனினும் ஜெட்டை இயக்கிய விமானி தக்க சமயத்தில், பாராசூட் உதவியுடன் கீழே குதித்து உயிர் தப்பினார். பாராசூட்டிலிருந்து குதிக்கும் போது விமானிக்கு காயங்கள் ஏற்பட்டுள்ளது.
ஜெட் விமானம் கிடங்கின் மீது பயங்கரமாக மோதியதில், அக்கட்டிடத்தின் மேற்பகுதியில் மிகப்பெரிய ஓட்டை விழுந்துள்ளது. விமானம் மோதியதையடுத்து அந்த கட்டிடத்தில் தீ விபத்தும் ஏற்பட்டது.
இதனையடுத்து தீயணைப்பு துறையினருக்கு விரைந்து தகவல் அளிக்கப்பட்டது. பின்னர் 6 தீயணைப்பு வண்டிகளில் வந்த வீரர்கள் கட்டிடத்தில் பற்றிய தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த விபத்தின் போது பாதிக்கப்பட்ட கட்டிடத்தினுள் யாரும் இல்லை என்பது ஆறுதலான விஷயமாகும்.
ஆனால் இதனை உயிர்பிழைத்த விமானியால் நம்ப இயலவில்லை என அதிகாரிகள் கூறியுள்ளனர். மேலும் காயமடைந்த விமானிக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்தால் மக்களுக்கோ, அவர்களது உடமைகளுக்கோ பெரிய அளவில் சேதமில்லை என்றே அதிகாரிகள் கூறுகின்றனர். மேலும் விபத்திற்கான காரணம் குறித்தும் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications