கல்லூரி வராத மாணவர்கள்.. ஆசிரியையாக டிக்டாக் அழகி நியமனம்.. சீனாவில் புது யோசனை.. வெடித்த சர்ச்சை
பெய்ஜிங்: சீனாவில் கல்லூரிக்கு மாணவர்கள் வராமல் டிமிக்கி கொடுத்து வகுப்பை புறக்கணித்து வந்த நிலையில் டிக்டாக் அழகியை கல்லூரி நிர்வாகம் ஆசிரியையாக நியமனம் செய்துள்ளது. இதன்மூலம் மாணவர்களின் வருகை அதிகரித்துள்ள நிலையில் கல்லூரி நிர்வாகம் சர்ச்சையில் சிக்கி உள்ளது.
சீனாவின் மத்திய பகுதியில் ஹெனான் மாகாணம் உள்ளது. இங்கு கைபெங் அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் தொலைதொடர்பு கல்லூரி செயல்பட்டு வருகிறது.
அந்த பகுதியில் உள்ள பிரபலமான கல்லூரிகளில் இதுவும் ஒன்று. இதனால் ஏராளமான மாணவர்கள் இந்த கல்லூரியில் படித்து வருகின்றனர்.

மாணவர்கள் வருகை குறைவு
இந்த கல்லூரியில் நேரடி வகுப்பு மற்றும் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இருப்பினும் தற்போது மாணவர்கள் நேரடி வகுப்பு மற்றும் ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்காமல் வந்துள்ளனர். இதனால் குறைந்த அளவிலான மாணவர்கள் மட்டுமே வகுப்புகளில் இணைந்து படித்து வந்துள்ளனர். இந்நிலையில் தான் சமீபத்தில் கல்லூரி நிர்வாகம் சார்பில் புதிதாக பேராசிரியர்கள், பயிற்சியாளர்கள் நியமனம் செய்யப்பட்டனர்.

டிக்டாக் அழகி
இதில் ஜாங் என்ற இளம்பெண்ணும் ஒருவர். பட்ட மேற்படிப்பை படித்து முடித்துள்ள இவர் சீனாவில் கட்டாய பாடமாக உள்ள ‛Mao Zedong Thought' எனும் பாடத்துக்காக தற்காலிக பேராசிரியராக நியமனம் செய்யப்பட்டார். இவர் டிக்டாக்கில் மிகவும் பிரபலமானவர். இவர் தனது க்யூட்டான வீடியோக்களால் ஏராளமான ரசிகர்களை கொண்டுள்ளார். இவரை 4 லட்சத்து 30 ஆயிரம் பேர் பின்தொடர்ந்து வருகின்றனர். இந்நிலையில் தான் ஜாங் கல்லூரியில் பணியமர்த்தப்பட்டுள்ளார்.

சர்ச்சையில் சிக்கிய நிர்வாகம்
இவர் கல்லூரியில் பணியமர்த்தப்பட்ட நிலையில் மாணவர்களின் வருகை என்பது அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் ஜாங் பாடம் நடத்துவது, மாணவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் பேசி புன்சிரிப்பு செய்வது தொடர்பான வீடியோக்கள் இணையதளங்களில் வெளியாகின. இதையடுத்து கல்லூரி நிர்வாகம் சர்ச்சையில் சிக்கி உள்ளது.

கல்லூரி நிர்வாம் மீது குற்றச்சாட்டு
அதாவது, கல்லூரி வகுப்புக்கு மாணவர்கள் சரியாக வருவது இல்லை. இதனால் கல்லூரி நிர்வாகம் மாற்று வழியில் யோசித்து டிக்டாக் பிரபலமான அழகி ஜாங்கை பணியமர்த்தி உள்ளது என ஏராளமானர்கள் குற்றம்சாட்ட துவங்கி உள்ளனர். இது இணையதளங்களில் விவாதப்பொருளானது. பல்வேறு தரப்பினர் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதேநேரத்தில் பலரும், ‛‛நாங்கள் படிக்கும்போது இப்படி ஒரு ஆசிரியர் இல்லையே'' என வருத்தத்ததையும் பதிவு செய்து வருகின்றனர்.

கல்லூரி நிர்வாகம் விளக்கம்
இதற்கிடையே கல்லூரி மீது எழுந்துள்ள குற்றச்சாட்டை அந்த நிர்வாகம் முற்றிலும் மறுத்துள்ளார். மேலும் இதுதொடர்பாக கல்லூரி தரப்பில் இருந்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதில், ‛‛கிங்கின் திறமையின் அடிப்படையிலும், படித்த படிப்பின் அடிப்படையிலும் தான் பணியமர்த்தி உள்ளோம். அவர் சிறந்த முறையில் பாடங்களை கற்பிக்கிறார். இது துான் அவருக்கு பணி வழங்கியதற்கான முக்கி காரணம் '' என கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications