”ஸ்பெர்ம் டொனேட்” செய்தால் உடனே ஐபோன் 6s பரிசு - தனியார் மருத்துவமனை அசத்தல்!
பீஜிங்: சீனாவில் விந்தணு தானம் செய்யும் ஆண்களுக்கு ஐபோன் 6s செல்போனை பரிசாக அளிப்பதாக தனியார் மருத்துவமனை ஒன்று அறிவித்துள்ளது.
சமீபத்தில் வெளியாகி உலகம் முழுவதும் விற்பனையில் பட்டையை கிளப்பிக் கொண்டிருக்கும் ஆப்பிள் ஐபோன் 6S ரக கைபேசியை எப்படியாவது வாங்கியே தீர வேண்டும் என பலர் கனவு கண்டுவரும் நிலையில் விந்து தானம் அளிப்பவர்களுக்கு இந்த கைபேசியை பரிசாக அளிப்பதாக சீனாவில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனை அறிவித்துள்ளது.

இதில் சிறப்பம்சம் என்னவென்றால், குறைந்தபட்சம் 48 நாட்கள் இடைவெளியில் தொடர்ந்து ஆறு மாதம் வரை ஒருவர் எத்தனை முறை வேண்டுமானாலும் விந்து தானம் அளிக்கலாம். ஒவ்வொரு முறையும் ஒரு 6S ரக ஐபோன் பரிசாக வழங்கப்படும். அல்லது அந்த கைபேசியின் உள்நாட்டு விலையாக 6 ஆயிரம் யுவான் அதாவது இந்திய மதிப்புக்கு சுமார் 60 ஆயிரம் ரூபாய் அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், தானம் அளிப்பவர் குறைந்தபட்சம் 165 சென்டிமீட்டர் அதாவது ஐந்தரை அடி உயரம் இருக்க வேண்டும். குறைந்தபட்சமாக ஒரு கல்லூரி பட்டம் பெற்றவராக இருக்க வேண்டும் என இப்படி அறிவித்துள்ள மருத்துவமனைகளில் ஒன்றான ஷங்காய் ருஜின் ஆஸ்பத்திரி நிர்வாகம் நிபந்தனை விதித்துள்ளது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications