மேகியை விட இது மோசமா இருக்கே.. சீனக் கடைக்காரர்கள் 40 வருஷ பழைய கறியை விற்கிறார்களாம்!
பெய்ஜிங்: எலிக் கறி பரபரப்பு, கெட்டுப் போன மேகி, புழு நெளியும் காம்ப்ளான். இதுக்கே நம்மவர்கள் பீதி அடைகிறோம். வழக்கு போடுகிறோம். ஆனால் சீனாவில் 40 வருட பழைய கறியை விற்கிறார்களாம்.
இப்படிப்பட்ட மோசமான விற்பனையாளர்கள் காரணமாக சீனர்கள் பலரும் வயிற்று உபாதை, உள்பட பல்வேறு உடல் நலக் கோளாறுகளைச் சந்திக்கிறார்களாம்.
கிட்டத்தட்ட 40 வருடமாக பதப்படுத்தப்பட்டு வைக்கப்பட் மாட்டுக் கறி, பன்றிக் கறி, கோழி இறைச்சியை சீன வியாபாரிகள் பலர் விற்பதாக வந்த தகவலைத் தொடர்ந்து சீனாவில் சைவத்திற்கு மாறுவோர் எண்ணிக்கை கிடுகிடுவென அதிகரித்துள்ளதாம்.

அதிரடி ரெய்டு...
இதுதொடர்பான செய்திகளை சீன ஊடகங்கள் பரபரப்பாக வெளியிட்டுள்ளன. இதையடுத்து அதிகாரிகள் அதிரடி ரெய்டு நடத்தி பல லட்சம் மதிப்புள்ள பழைய கறியை பறிமுதல் செய்துள்ளனர்.

பதப்படுத்தப்பட்ட கறி...
சீனா முழுவதும் இந்த ரெய்டு தற்போது தீரவிமாகியுள்ளது. பல இடங்களில் 1970களில் உறிக்கப்பட்ட கோழிக்கறி, பன்றிக் கறி பதப்படுத்தப்பட்ட நிலையில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்ததைப் பார்த்து அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனராம்.

14 மாகாணங்களில்...
பறிமுதல் செய்யப்பட்ட இறைச்சிகளின் மதிப்பு 483 மிலலியன் டாலர் என்கிறார்கள். மொத்தம் 14 மாகாணங்களில் இந்த ரெய்டு நடந்துள்ளதாக ஸின்குவா செய்தி ஏஜென்சி தெரிவித்துள்ளது.

ஏமாற்று வேலை...
இந்த இறைச்சி அனைத்தும் வெளிநாடுகளிலிருந்து ஹாங்காங் கொண்டு வரப்பட்ட பின்னர் வியட்நாம் போய் அங்கிருந்து சீனாவுக்கு வருகிறதாம். பல ரூபங்களில் இதைக் கொண்டு செல்வதன் மூலம் அதிகாரிகளை எளிதாக ஏமாற்றி விடுகிறார்களாம்.

உடல் உபாதைகள்...
மகா மோசமான இந்த இறைச்சியைச் சாப்பிட்டால் பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். ஆனால் எந்தவிதமான பாதுகாப்பும் இல்லாமல் மிகவும் மோசமான முறையில் பணத்தை மட்டுமே குறிக்கோளாக வைத்து இதை சில வியாபாரிகள் விற்கிறார்கள். இது ஒரு பெரிய மார்க்கெட்டாகவும் விளங்குவதாக அவர்கள் கூறுகிறாரக்ள்.

20 பேர் கைது...
ஜூன் 1ம் தேதி ஹுனான் மாகாணத்தில் உள்ல சங்கசா என்ற இடத்தில் மட்டும் 800 டன் பழைய பதப்படுத்தப்பட்ட இறைச்சி சிக்கிதாம். இதுதொடர்பாக 2 கும்பலைச் சேர்ந்த 20 பேரைக் கைது செய்துள்ளனராம்.

40 வருடங்கள் பழமையானது...
வியட்நாம் எல்லையில் உள்ள குங்கஸி என்ற இடத்தில் கடத்தப்பட்டு கொண்டு வந்த இறைச்சியை சோதனையிட்டபோது, அவை 40 வருடம் பழைமையானவை என்று தெரிய வந்தது.

உணவு மோசடி...
சீனாவில் உணவு மோசடி என்பது மிகப் பெரிய அளவில் இருக்கிறது. இதில் மிகப் பெரிய அளவில் பலரும் ஈடுபடுகிறார்கள். சாதாரண சாப்பாடு முதல் பல்வேறு உணவுப் பொருட்களில் கலப்படம் மோசடி இங்கு சர்வ சாதாரணம.

அரசியல்வாதிகளின் ஆதரவு...
அரசியல்வாதிகள் ஆதரவுடன்தான் இதைப் பலரும் செய்கிறார்களாம். எனவே நடவடிக்கை என்பது மிக மிக குறைவாகவே உள்ளது.

பால் பவுடர் கலப்படம்...
கடந்த 2008ம் ஆண்டு கலப்பட பால் பவுடரால் சீனாவில் 3 லட்சம் குழந்தைகள் உயிரிழந்தது நினைவிருக்கலாம். அதன் பின்னரே சற்று நடவடிக்கைகள் எடுக்க ஆரம்பித்தனர். ஆனால் இடையில் அது நின்று போனது குறிப்பிடத்தக்கது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications