ரொம்ப குளிரா இருக்கு.. சொன்னதுமே கட்டியணைத்த கணவரால் துடிதுடித்த மனைவி! 5 விலா எலும்புகளில் முறிவு
பெய்ஜிங்: 'ரொம்ப குளிரா இருக்குதுனு' சொன்ன மனைவியை ஆசையோடு கணவர் இறுக்கமாக கட்டியணைத்தபோது 5 விலா எலும்பில் முறிந்தது. தற்போது அந்த பெண் மருத்துவ சிகிச்சை முடித்து வீடு திரும்பி உள்ளார். சீனாவில் நடந்த இந்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:

கணவன் - மனைவி மட்டுமின்றி அனைத்து உறவுகளிடமும் அன்பை வெளிப்படுத்தும்போது அணைத்து கொள்வது இயல்பான ஒன்றாக உள்ளது. குறிப்பாக கணவன் - மனைவி இடையே இத்தகைய அன்பு அடிக்கடி நிகழும்.
ஆனால் அந்த கட்டியணைப்பே ஆபத்தாக மாறுமா? என்றால் ஆம் என்று தான் சொல்ல வேண்டும். ஏனென்றால் அதற்கு உதாரணமாக தான் சீனாவில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. ஆசையோடு கணவர் கட்டியணைத்ததில் பெண் ஒருவரின் 5 எலும்புகளில் முறிவு ஏற்பட்டுள்ளது.
ஆம், நீங்கள் படித்தது சரிதான். இந்த சம்பவம் சீனாவின் ஜியாங்சு மாகாணத்தில் நடந்துள்ளது. அந்த மாகாணத்தை சேர்ந்தவர் வாங்க். திருமணம் ஆனவர். இவரது மனைவி திடீரென்று தனக்கு குளிரடிக்கிறது என்று கூறினார். இதை கேட்ட வாங்க் மனைவியை கட்டியணைத்த்தார். அப்போது அவர் இறுக்கமாக மனைவியை கட்டியணைத்ததாக கூறப்படுகிறது.
இதனால் மனைவியில் உடலில் இருந்து எலும்புகள் முறிவது போன்ற சத்தம் கேட்டது. அதிர்ச்சியடைந்த வாங்க் தனது பிடியை தளர்த்த மனைவி அடுத்த சில வினாடியில் வலி தாங்க முடியாமல் தரையில் அமர்ந்து துடித்தார். அதன்பிறகு ஓய்வெடுத்தார். அதன்பிறகு அவர் மருத்துவமனையில் அனுமதித்தார்.
மருத்துவ பரிசோதனையில் அவரது மனைவிக்கு 5 விலா எலும்புகளில் முறிவு இருப்பது தெரியவந்தது. இருப்பினும் அறுவை சிகிச்சை தேவையில்லை. மருந்து , மாத்திரைகளால் சரிசெய்யலாம் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
இதுபற்றி வாங்க் கூறுகையில், ''நான் என் மனைவியை இறுக்கமாக கட்டியணைக்கவில்லை. வழக்கமாக கட்டியணைப்பது போல் தான் கட்டியணைத்தேன். ஆனால் எதிர்பாராத விதமாக எலும்புகள் முறிந்து காயம் ஏற்பட்டுவிட்டது. சம்பவம் நடந்த நாளில் இரவில் அதிக வலி ஏற்பட்டதால் மருத்துவமனைக்கு வந்தோம்.
சிடி ஸ்கேன் எடுத்து பார்த்ததில் 5 விலா எலும்புகளில் முறிவு இருப்பதும், ஒரு எலும்பில் தலைமுடி அளவுக்கு கீறல் இருப்பதும் தெரியவந்தது. இந்த எலும்பு முறிவுக்கு அறுவை சிகிச்சை தேவையில்லை. மாத்திரை, மருந்து எடுத்து கொண்டு சில காலம் ஓய்வில் இருக்க வேண்டும் என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். என் மனைவி டிஸ்சார்ஜ் ஆகி வீட்டில் ஓய்வில் உள்ளார்.
என் மனைவிக்கு ஆஸ்டியோபோரோசிஸ் எனும் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இதுதான் எலும்புகளை வலுவிக்க செய்துள்ளது. அதுமட்டுமின்றி எனது மனைவி சரியாக சாப்பிடுவது கிடையாது. 'டயட்' என்ற பெயரில் இரவு உணவை தவிர்ப்பார். எலும்பை வலுப்படுத்த தேவையான வைட்டமின் டி சூரியஒளியில் இருந்து கிடைக்கும்.
ஆனால் 45 முதல் 50 கிலோ எடையில் இருக்கும் அவர் சூரியஒளியில் நிற்கவே மாட்டார். வெளியே செல்லும்போது முழு உடலையும் சூரியஒளி படாமல் மறைப்பார். இதனாலும் அவரது எலும்பு வலுவிழந்துள்ளது'' என்றார்.


Click it and Unblock the Notifications
