அமெரிக்காவை மிரட்டும் தொடர் கொலைகள்... மேலும் 4 பெண்களின் உடல் பாகங்கள் மீட்பு!
ஹார்ட்போர்ட், கனெக்டிகட்: அமெரிக்காவின் கனெக்டிகட் மாகாணத்தில், பரபரப்பை ஏற்படுத்திய தொடர் கொலைகளின் ஒரு பகுதியாக, வணிக வளாகம் ஒன்றின் பின்புறம் மேலும் நான்கு பெண்களின் உடல்களின் மிச்சம் கிடைத்துள்ளது. ஏற்கனவே, இப்பகுதியில் மூன்று பெண்களின் உடல்களின் மிச்சம் மீட்கப்பட்ட நிலையில் தற்போது மேலும் 4 உடல்கள் கிடைத்திருப்பது பரபரப்பை அதிகரித்துள்ளது.
இந்த உடல்கள் மற்றும் உடல் பாகங்கள் குறித்து விரிவான தடயவியல் சோதனைக்கு உத்தரவிடப்பட்டிருப்பதாக நியூ பிரிட்டன் போலீஸ் தலைவர் ஜேம்ஸ் வார்ட்வெல் கூறியுள்ளார்.

இந்தக் கொலைகள் அனைத்தையும் ஒரே நபர்தான் செய்திருக்க வேண்டும் என்று சந்தேகப்படுவதாகவும் வார்ட்வெல் கூறுகிறார். பல்வேறு சந்தர்ப்பங்களில் இந்தக் கொலைகள் நடந்திருக்கலாம் என்று கூறும் அவர், கொலையாளி யார் என்பது தெரியவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
இருப்பினும் அந்த கொலையாளியால் பொதுமக்கள் பீதி அடையத் தேவையில்லை என்றும் விரைவில் அந்த நபரைப் பிடிக்க காவல்துறை தீவிரமாக செயல்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் அந்த நபர் தனது கொலை வெறியை தொடர முடியாத நிலையில் இருப்பதாக போலீஸார் நம்புவதாகவும் வார்ட்வெல் கூறியுள்ளார்.
சம்பந்தப்பட்ட கொலையாளி தற்போது சிறையில் அடைக்கப்பட்டிருப்பதாகவும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அதாவது வேறு வழக்கில் அந்த நபர் கைதாகி சிறையில் இருக்கிறாராம்.
இதற்கிடையே, பிணங்களில் ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ளது. அந்தப் பெண்ணின் பெயர் மெலனி ரூத் கமிலினி. இவரைக் கடைசியாக 2003ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் பார்த்துள்ளனர்.












Click it and Unblock the Notifications