For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

"மீண்டும் சொல்கிறேன்... உடனடியாக நிறுத்துங்கள்!" டென்மார்க் நாட்டில் அழுத்தமாக பேசிய பிரதமர் மோடி

Google Oneindia Tamil News

கோபன்ஹேகன்: டென்மார்க சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டின் பிரதமர் மெட்டே ஃபிரடெரிக்சன் உடன் பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தினார்,

இந்த ஆண்டின் முதல் பயணமான பிரதமர் நரேந்திர மோடி அரசு முறை பயணமாக ஐரோப்பா நாடுகளுக்குச் சென்றுள்ளார். இந்தப் பயணத்தில் பிரதமர் மோடி, ஜெர்மனி, டென்மார்க் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்குச் செல்கிறார்.

தனது ஐரோப்பியப் பயணத்தில் முதலில் ஜெர்மனி சென்ற பிரதமர் மோடி, அந்நாட்டின் தலைநகர் பெர்லின் நகரில் ஜெர்மனி அதிபர் ஓலாஃப் ஸ்கோல்ஸை சந்தித்தார். இரு நாடுகளுக்கும் இடையே 9 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

 நாளை தொடங்கும் கத்தரி வெயில்.. இன்றே 10 இடங்களில் சதமடித்த வெயில்.. சென்னை நிலை என்ன தெரியுமா நாளை தொடங்கும் கத்தரி வெயில்.. இன்றே 10 இடங்களில் சதமடித்த வெயில்.. சென்னை நிலை என்ன தெரியுமா

டென்மார்க்கில் பிரதமர் மோடி

டென்மார்க்கில் பிரதமர் மோடி

அதைத் தொடர்ந்து, இன்று பிரதமர் நரேந்திர மோடி ஜெர்மனியில் இருந்து டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகன் வந்தடைந்தார். மோடியை விமான நிலையத்திற்கே சென்று டென்மார்க் பிரதமர் மெட்டே ஃபிரடெரிக்சன் வரவேற்றார். இதையடுத்து இரு நாட்டுத் தலைவர்களும் டென்மார்க் பிரதமர் இல்லமான மரியன்போர்க்கிற்கு பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் இரு நாட்டு உறவுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இரு நாட்டுத் தலைவர்களும் நடந்து கொண்டே ஆலோசனையில் ஈடுபடும் வீடியோவும் இணையத்தில் வெளியாகி உள்ளது.

பிரதமர் மோடி

பிரதமர் மோடி

அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த பிரதமர் நரேந்திர மோடி, "இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய உறவுகள், இந்தோ-பசிபிக் நிலை மற்றும் உக்ரைன் உள்ளிட்ட பல பிராந்திய மற்றும் உலகளாவிய பிரச்சினைகளையும் நாங்கள் விவாதித்தோம். இந்தியா-ஐரோப்பிய யூனியன் இடையேயான தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தைகள் நல்ல முறையில் நடைபெற்று வருகிறது. அந்த பேச்சுவார்த்தை மிக விரைவில் முடிவடையும்" என்று நம்பிக்கை தெரிவித்தார்.

உக்ரைன் போர்

உக்ரைன் போர்

உக்ரைன் நாட்டில் தொடரும் போரை உடனடியாக முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்பதை மீண்டும் வலியுறுத்திய பிரதமர் நரேந்திர மோடி. இரு நாடுகளும் பேச்சுவார்த்தை மூலமே பிரச்சினையைத் தீர்க்க பேச்சுவார்த்தை வேண்டும் என்று வலியுறுத்தினார். உக்ரைன் போர் 2 மாதங்களுக்கு மேலாகத் தொடரும் நிலையில், பிரதமர் மோடி சண்டையை விடுத்து அமைதியான முறையில் போரை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் எனத் தொடர்ந்து அழைப்பு விடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

டென்மார்க் பிரதமர் மெட்டே பிரடெரிக்சன்

டென்மார்க் பிரதமர் மெட்டே பிரடெரிக்சன்

இந்த ஆலோசனைக்குப் பின்னர் பேசிய டென்மார்க் பிரதமர் மெட்டே பிரடெரிக்சன், "ரஷ்யா உடன் இருக்கும் நட்பைப் பயன்படுத்தி உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவர இந்தியா முயலும் என நம்புகிறோம். ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உடனடியாக இந்த போரை நிறுத்த வேண்டும். உக்ரைன் நாட்டில் இருக்கும் அப்பாவி பொதுமக்களை ரஷ்ய படைகள் கொன்று குவிப்பது உடனடியாக தடுத்து நிறுத்தப்பட வேண்டும். அதேபோல இந்தியாவும் டென்மார்க்கும் தங்கள் வணிக உறவுகளை மேம்படுத்த பல்வேறு வழிகள் உள்ளன. இந்தியாவின் உள்கட்டமைப்பு மற்றும் பசுமைத் துறைகள் பல டென்மார்க் நிறுவனங்கள் அதிக அளவில் முதலீடு செய்ய காத்திருக்கின்றன,

Recommended Video

    Modi-யை சுற்றி வளைத்த Reporters | Modi Visit Denmark | Oneindia Tamil
    பிரதமர் மோடி பயணம்

    பிரதமர் மோடி பயணம்

    பிரதமர் மோடி 3 நாட்கள் பயணமாக டென்மார்க் சென்றுள்ளார். ஜெர்மனியில் இருந்து இன்று டென்மார்க் சென்றுள்ளார். பிரதமராக மோடி அரசு முறை பயணமாக டென்மார்க் செல்வது இதுவே முதல்முறையாகும். இந்தப் பயணத்தின் போது, பிரதமர் நரேந்திர மோடி டென்மார்க் நாட்டின் ராணி மார்கிரேத் IIஐ சந்திக்க உள்ளார். மேலும், அங்குள்ள வெளிநாட்டு வாழ் இந்தியர்களையும் அவர் சந்திக்கிறார்.

    English summary
    PM Modi Pushes for an immediate ceasefire in war-torn Ukraine: (டென்மார்க் நாட்டில் பிரதமர் மோடி தீவிர ஆலோசனை) Prime Minister Narendra Modi in Denmark.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X