தாமிரபரணி பற்றி எகிப்தில் பேசிய சபாநாயகர் அப்பாவு! வியந்து கேட்ட செனட் சபை! இது தான் ஊர்ப்பாசம்!
கெய்ரோ: எகிப்து தலைநகர் கெய்ரோவில் நடைபெற்ற செனட் சபையின் கலந்துரையாடல் கூட்டத்தில் பேசிய தமிழ்நாடு சட்டசபைத் தலைவர் அப்பாவு, தாமிரபரணி நாகரீகம் பற்றியும் தமிழின் தொன்மை பற்றியும் பேசியிருக்கிறார்.
அக்டோபர் 3 ஆம் தேதி முதல் 5 ஆம் தேதி வரை கானா நாட்டின் தலைநகர் அக்ராவில் 66வது காமன்வெல்த் நாடாளுமன்ற மாநாட்டில் தமிழ்நாடு கிளையின் பிரதிநிதியாக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு கலந்து கொள்ளவிருக்கிறார். மாநாட்டில் இந்திய வட்டாரப் பிரதிநிதிகளின் செயலாளராக தமிழ்நாடு சட்டமன்றச் செயலாளர் சீனிவாசன் பங்கேற்கிறார்.

முன்னதாக, எகிப்து, தென் ஆப்ரிக்க நாடுகளில் சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு ஆய்வுப் பயணம் மேற்கொள்கிறார். இதையொட்டி நேற்று முன் தினம் சென்னையிலிருந்து துபாய் வழியாக எகிப்து நாட்டின் தலைநகர் கெய்ரோவுக்கு சென்றடைந்தார்.
எகிப்து நாட்டின் செனட் துணை சபாநாயகர் பாஹா எல்டின் ஸுக்கா (Bahaa El-Din shukka), தலைமையில் நடைபெற்ற செனட் சபையின் கலந்துரையாடல் கூட்டத்தில் கலந்துக் கொண்ட அப்பாவு பேசியதாவது:
''எகிப்தில் முதன் முதலில் தோன்றிய நைல் நதி நாகரீகம் போன்று, இந்தியாவின் வடக்கில் சிந்துசமவெளி நாகரீகமும், தெற்கில் தாமிரபரணி நாகரீகமும் மிகவும் தொன்மையானது. அதே போல், தொன்மையான மூன்று மொழிகளில் தமிழ்மொழி பழம்பெரும் சிறப்பு வாய்ந்தது.
இந்த பழமையான மொழி இன்றும் இளமையுடன் உள்ளது. நாளையும் இது தொடரும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால், பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, வருகின்றன.
அதே போல, காலநிலை மாற்றத் தாக்கத்தை குறைத்திடவும், வனங்களை பாதுகாத்திடவும் முதலமைச்சர்ஸ்டாலின் தொடர்ச்சியாக கண்காணித்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். ''
-
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications