Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஜப்பான் கடும் துப்பாக்கி சட்டத்தை மீறி ஷின்சோ அபேவை சுட்டுக்கொன்றது எப்படி? வெளியான திடுக் தகவல்

Subscribe to Oneindia Tamil

டோக்கியோ: ஜப்பானில் மிகக்கடுமையான துப்பாக்கிச்சட்டம் நடைமுறையில் உள்ளது. இந்நிலையில் தான் அந்நாட்டின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். இது நடந்தது எப்படி? என்பது பற்றிய திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது.

Recommended Video

    Who Is Shinzo Abe? | துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த ஷின் சோ அபே... யார் இவர்? *World

    ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே. இவர் உடல்நலக்குறைவு காரணமாக 2020ல் பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார்.

    இந்நிலையில் தேர்தலையொட்டி நாரா பகுதியில் ஷின்சோ அபே மக்கள் மத்தியில் நேற்று பேசி கொண்டிருந்தார்.

    மரணமடைந்த ஷின்சோ அபே

    மரணமடைந்த ஷின்சோ அபே

    அப்போது மர்மநபர் துப்பாக்கியால் சுட்டார். இதில் காயமடைந்த ஷின்சோ அபே உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இருப்பினும் அவர் பரிதாபமாக இறந்தார். நெஞ்சில் குண்டு பாய்ந்ததால் தான் அவர் மரணடைந்தார் என கூறப்படுகிறது.

    கடும் துப்பாக்கிச்சட்டம்

    கடும் துப்பாக்கிச்சட்டம்

    ஜப்பானை பொறுத்தமட்டில் துப்பாக்கி பயன்படுத்துவதற்கான சட்டம் மிகவும் கடுமையாக உள்ளது. சாதாரண நபர்களால் எளிதில் துப்பாக்கி பயன்படுத்த முடியாது. அதாவது போலீஸ், ராணுவத்தை தவிர யாரும் துப்பாக்கியை பயன்படுத்த முடியாது. மாறாக ஏர்கன் மட்டுமே மக்கள் பயன்படுத்தலாம். அதற்கும் அவர்கள் சரியான காரணத்தை கூறினால் மட்டுமே அதிகபட்சம் 3 ஆண்டுகளுக்கு அனுமதி கிடைக்கும்.

     உரிமத்துக்கு பல்வேறு வழிமுறைகள்

    உரிமத்துக்கு பல்வேறு வழிமுறைகள்


    இந்த அனுமதிக்கும் பல்வேறு வழிமுறைகள் பின்பற்றப்படுகின்றன. முதலில் துப்பாக்கி பயன்படுத்த விரும்புவோர் துப்பாக்கிச்சுடுவதில் 95 சதவீத துல்லிய திறன் பெற்றிருக்க வேண்டும். அதற்கான எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். மேலும் மருத்துவமனையில் மனநலன்சார் பரிசோதனையிலும் சரியான ரிசல்டை பெற வேண்டும். இவை அனைத்திலும் வெற்றி பெறுவதோடு அந்த நபரின் குடும்பத்தினர், நண்பர்கள், உறவினர்களிடம் விசாரணை நடத்தப்படும். இந்த விசாரணை திருப்தியாக இருந்தால் மட்டுமே சம்பந்தப்பட்டவருக்கு ஏர்கன் துப்பாக்கிக்கான துப்பாக்கி உரிமம் வழங்கப்படும்.

    சொந்தமாக தயாரித்த துப்பாக்கி

    சொந்தமாக தயாரித்த துப்பாக்கி

    இத்தகைய கடும் துப்பாக்கி சட்டத்துக்கு மத்தியில் தான் ஷின்சோ அபேவை ஒருவர் துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்துள்ளார். அவரை உடனடியாக பாதுகாப்பு வீரர்கள் கைது செய்த நிலையில் தான் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அதாவது கடும் துப்பாக்கிச்சட்டத்தின் காரணமாக தான் ஷின்சோ அபேவை கொலை செய்த டெட்சுயா யமகாமி என்ற 41 வயது நபர் தானே துப்பாக்கி தயாரித்து வெறிச்செயலில் ஈடுபட்டுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. நாரா பகுதியில் வசித்து வரும் டெட்சுயா யமகாமி ஜப்பானிய கடற்படையின் தற்காப்பு படையின் வீரராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். இதனால் துப்பாக்கி தயாரிப்பு, பயன்படுத்துவது பற்றி அறிந்து வைத்திருந்தார். ஷின்சோ அபே பிரதமராக இருந்தபோது அவரது நடவடிக்கையால் பாதிக்கப்பட்டதால் தானே துப்பாக்கி செய்து அவரை சுட்டு கொன்றது தெரியவந்துள்ளது.

     32 ஆண்டில் 5 பேர் மீது குறி

    32 ஆண்டில் 5 பேர் மீது குறி

    மேலும் ஜப்பானில் அரசியல் கட்சி தலைவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தும் சம்பவங்கள் நடந்து வருவது வருத்தமளிக்கும் விஷயமாக உள்ளது. கடந்த 1990 முதல் நேற்று வரை அரசியல்வாதிகளான 5 பேர் துப்பாக்கியால் குறிவைக்கப்பட்டனர். இதில் ஒரு மேயர் குண்டு காயமடைந்த நிலையில், இன்னொரு மேயர் இறந்தார். மேலும், முன்னாள் பிரதமர் ஹோசோகாவா மொரிஹிரோ மற்றும் லிபரல் டெமாக்ரட்டிக் கட்சி பிரமுகரான கனேமாரு ஷினவே ஆகியோர் துப்பாக்கிச்சூட்டில் அதிர்ஷ்டவசமாக தப்பித்துள்ளனர். இருப்பினும் துரதிர்ஷ்டவசமாக நேற்று ஷின்சோ அபே துப்பாக்கி குண்டுக்கு பலியாகி உள்ளார்.

     வலதுசாரி அமைப்பினர்

    வலதுசாரி அமைப்பினர்

    ஜப்பானில் கடந்த 1990ல் அப்போதைய நாகசாகி நகர மேயர் மோடோஷிமா ஹிட்டோஷி பொதுமக்களிடம் உரையாற்றினார். அப்போது வலதுசாரிக் குழுவைச் சேர்ந்த ஒருவர் அவரை துப்பாக்கியால் சுட்டார். இதில் அவர் காயமடைந்தார். அதன்பிறகு 1992ல், டோக்கியோவின் வடக்கே டோச்சிகி ப்ரிபெக்சரில் லிபரல் டெமாக்ரட்டிக் கட்சியின் அப்போதைய துணை தலைவர் கனேமாரு ஷின்வை நோக்கி வலதுசாரி அமைப்பை சேர்ந்தவர் துப்பாக்கியால் சுட்டார். இதில் அதிர்ஷ்டவசமாக அவர் காயமின்றி தப்பித்தார்.

    மேயரை தொடர்ந்து மாஜி பிரதமர் பலி

    மேயரை தொடர்ந்து மாஜி பிரதமர் பலி

    இதன் தொடர்ச்சியாக, 1994ல் மற்றொரு முன்னாள் பிரதமர் ஹோசோகாவா மொரிஹிரோ, டோக்கியோ ஓட்டலில் வலதுசாரி அமைப்பை சேர்ந்தவரால் சுடப்பட்டார். இதில் அவர் காயமின்றி தப்பித்தார். பிறகு 1995ல் தேசிய போலீஸ் அமைப்பின் அப்போதைய கமிஷனர் ஜெனரல் குனிமட்சு தகாஜி துப்பாக்கியால் சுடப்பட்டதில் பலத்த காயமடைந்தார். 2007ல் நாகசாகி மேயர் இட்டோ இட்சோ துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்டார். இதன் தொடர்ச்சியாக தான் நேற்று ஷின்சோ அபே துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்பது சோகமான விஷயமாகும்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+