Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கோமாட்சு தொழிற்சாலையை சுற்றி பார்த்த ஸ்டாலின்! ஒரு நிமிடத்தை கூட வீணாக்காத ஜப்பானியர்கள் உழைப்பு!

Subscribe to Oneindia Tamil

ஒசாகா: அரசு முறை பயணமாக ஜப்பான் சென்றுள்ள முதலமைச்சர் ஸ்டாலின், ஒசாகா நகரில் உள்ள கோமாட்சு நிறுவனத்தின் உற்பத்தி தொழிற்சாலையை நேரில் பார்வையிட்டார்.

கோமாட்சு நிறுவனமானது கால்வாய்களை தூர் வார பயன்படுத்தப்படும் செயின் வண்டி உள்ளிட்ட தொழில்துறை இயந்திரங்களை உற்பத்தி செய்வதில் முன்னணி நிறுவனமாக திகழ்கிறது.

சென்னையில் 2024 ஜனவரி மாதம் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு அழைப்பு விடுத்திடவும், தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்க்கும் நோக்கிலும், கடந்த 23ஆம் தேதி சிங்கப்பூர் சென்ற முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தனது இரண்டு நாள் சிங்கப்பூர் பயணத்தை முடித்துக் கொண்டு 25ஆம் தேதி இரவு ஜப்பான் நாட்டின் ஒசாகா மாகாணம் சென்றார்.

In Japan Osaka province, Stalin toured the Komatsu Production factory

அதனைத் தொடர்ந்து நேற்று காலை ஒசாகாவில், ஜப்பான் வெளிநாட்டு வர்த்தக அமைப்புடன் (Japan External Trade Organization - JETRO) இணைந்து நடத்தப்பட்ட மாபெரும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதலமைச்சர் கலந்து கொண்டு, தமிழ்நாட்டில் முதலீடுகள் மேற்கொள்ளவும், சென்னையில் 2024 ஜனவரி மாதம் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொள்ளவும் அழைப்பு விடுத்து உரையாற்றினார்.

அதேபோல் தமிழ்நாடு வழிகாட்டி நிறுவனத்திற்கும் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த டைசல் சேஃப்டி சிஸ்டம்ஸ் (Daicel Safety Systems) நிறுவனத்திற்கும் இடையே முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

அதைத் தொடர்ந்து ஒசாகாவில் உள்ள கோமாட்சு நிறுவனத்தின் உற்பத்தி தொழிற்சாலையை முதலமைச்சர் ஸ்டாலின் சுற்றிப்பார்த்தார்.
அப்போது அத்தொழிற்சாலையின் செயல்பாடுகள் குறித்த காட்சி விளக்கப்படத்தை (Power Point Presentation) பார்வையிட்டு, அந்நிறுவனத்தின்
உயர் அலுவலர்கள் டகாயுகி புரோகுஷி (Mr. Takayuki Furukoshi), கோ கமாடா (Mr. Go Kamada) ஆகியோருடன் கலந்துரையாடினார்.

In Japan Osaka province, Stalin toured the Komatsu Production factory

கோமாட்சு நிறுவனம் கட்டுமானம் மற்றும் சுரங்க உபகரணங்கள் தயாரிப்புத் துறையில் உலகளவில் சிறந்து விளங்கும் நிறுவனமாகும். இந்நிறுவனம் தொழில்துறை இயந்திரங்கள், வாகன தளவாடங்கள், மின்னணுவியல் போன்ற பிற வணிகங்களிலும் ஈடுபட்டு வருகிறது.

இந்நிறுவனம், தமிழ்நாட்டில் கோமாட்சு இந்தியா பிரைவேட் லிமிடெட் என்ற பெயரில் ஒரகடம் சிப்காட் தொழிற்பேட்டையில் டம்ப் டிரக் (Dump truck), சுரங்க உபகரணங்கள், ஹைட்ராலிக் அகழ்வாராய்வு இயந்திரம் (Hydraulic Excavators) போன்றவற்றை உலகளாவிய தரநிலையுடன் தயாரித்து உள்நாடு மற்றும் சர்வதேச சந்தை தேவைகளை பூர்த்தி செய்து வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+