ஜப்பானில்.. மோடி காரில் ஏறுகையில் அவரிடம் குஜராத்தியில் பேசிய பெண் யார்?

Subscribe to Oneindia Tamil

கியோட்டோ: பிரதமர் மோடியை காண மணிக்கணக்கில் காத்திருந்த ஜப்பானில் வசிக்கும் இந்திய பெண் சொல்ல முடியாத அளவுக்கு மகிழ்ச்சி அடைந்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி ஜப்பானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இந்நிலையில் ஜப்பானின் கியோட்டோ நகரில் வசிக்கும் இந்திய பெண் மினா சுட்கர் தனது கணவருடன் சேர்ந்து மோடியை காண அவர் தங்கியிருந்த ஹோட்டல் முன்பு மணிக்கணக்கில் காத்திருந்தார்.

<blockquote class="twitter-tweet blockquote" lang="en"><p>PM Modi obliging people by posing for photos before departure <a href="https://twitter.com/hashtag/japan?src=hash">#japan</a> <a href="http://t.co/Ry4g8t1quX">pic.twitter.com/Ry4g8t1quX</a></p>— amit baruah (@abaruah64) <a href="https://twitter.com/abaruah64/statuses/505981682768310272">August 31, 2014</a></blockquote> <script async src="//platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

அப்போது மோடி கியோட்டோவில் இருந்து கிளம்ப தான் தங்கியிருந்த ஹோட்டலில் இருந்து வெளியே வந்தார். மோடியை பார்த்ததும் அங்கு நின்று கொண்டிருந்த மக்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். மோடி தனது காரில் ஏறுகையில் மினாவை பார்த்து திரும்பி வந்தார். அவருடன் குஜராத் மொழியில் சில வார்த்தைகள் பேசிவிட்டு சென்றார்.

மேலும் மினாவுடன் சேர்ந்து போட்டோவுக்கும் போஸ் கொடுத்தார். கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு மோடி குஜராத் முதல்வராக ஜப்பான் சென்றபோது மினா தான் அவருக்கு குஜராத்தின் பாரம்பரிய உணவு வகைகளை சமைத்துக் கொடுத்தார்.

தற்போது பிரதமர் ஆன பிறகு தன்னை அவருக்கு நினைவிருக்குமா என்று நினைத்த மினாவுக்கு மோடி இன்ப அதிர்ச்சி அளித்தார். மோடி தன்னை நினைவு வைத்து பேசியதையடுத்து தான் ஆசிர்வதிக்கப்பட்டவள் என்று மினா தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+