டெக்சாசில் போக்கிரிகளுக்கிடையே துப்பாக்கிச் சண்டை….. 9 பேர் பலி
டெக்சாஸ்: அமெரிக்காவின் டெக்சாஸ் அருகே உள்ள வாகோ நகரில் இரண்டு போக்கிரி கும்பல்கள் துப்பாக்கிச் சூடு நடத்திக் கொண்டதில் 9 பேர் உயிரிழந்தனர்.
அங்குள்ள உணவு விடுதியின் கார் நிறுத்துமிடத்தில் இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் நிகழ்ந்தது. இரு சக்கர வாகனங்களில் வந்த கும்பல் மற்றொரு கும்பலுடன் தகராறில் ஈடுபட்டது.
ஆரம்பத்தில் வாய் வார்த்தையாக தொடங்கிய பிரச்சினை செயின் தாக்குதல், கத்தி குத்து வரை சென்றது. இறுதியில், அந்த கும்பலைச் சேர்ந்தவர்கள் ஒருவர் மீது ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

துப்பாக்கிச் சூடு சப்தம் கேட்டதும், பார்க்கிங்கில் நின்றிருந்தவர்கள் அலறியடித்துக் கொண்டு உணவு விடுதிக்குள் ஓடிச் சென்று தஞ்சமடைந்தனர்.
இந்த சம்பவத்தில் சுமார் 100 ரவுண்டுகள் துப்பாக்கியால் சுடப்பட்டதாக போலீசார் கூறினர்.

இந்த தாக்குதலில் பொதுமக்கள் உள்பட 8 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக வாகோ நகர போலீசார் தெரிவித்தனர்.
தகவல் அறிந்து வந்த போலீசார் கும்பலைச் சேர்ந்த 3 பேரை கைது செய்து துப்பாக்கிகளை பறிமுதல் செய்தனர். இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் போலீசார் யாரும் காயமடையவில்லை.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications